Wednesday 31 October 2012

கடலூரில் மாணவர்களுக்கான தலைமத்துவ பயிற்சி.


மாணவர்கள் மத்தியில் இருந்துதான் இந்த தேசத்தின் மிகப்பெரும் தலைவர்கள் வந்திருக்கின்றார்கள் அவர்கள் ஒவ்வொருவரையும் ஏதோ ஒரு தூண்டுதல் தலைவர்களாக மாற்றியிருக்கின்றது. காந்திக்கு தென் ஆபிரிக்க ரயில் பயணத்தின் போது ஏற்பட்டதைப் போல... ஆனால் எல்லோருக்கும் சந்தர்பங்கள் அமைந்துவிடுவதில்லை அதனால் ஒவ்வொருவருக்கும் தலைமத்துவம்(Leadership) குறித்த சிந்தனையினை ஏற்படுத்த முனைவதுதான் நாளைய தலைவர்களை உருவாக்கும் வழியாக அமையும் அந்த வகையில்….

பயிற்சியில் கலந்து கொண்ட மாணவர்கள்
கடலூர் மாவட்டம் பரங்கிப் பேட்டை ஊரட்சிக்கு உட்பட்ட முடசல் ஓடை, எம்.ஜி.ஆர் நகர், கலைஞர் நகர் மற்றும் கிள்ளை ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள நடுநிலைப்பள்ளிகள் மற்றும் துவக்கப் பள்ளி மாணவர்களுக்கான தலைமத்துவ பயிற்சி ஒன்றினை Skills India சார்பாக கடந்த 12.09.12ம்  தேதி ஏற்பாடு செய்திருந்தது அதன் பேரில்  அன்று பிற்பகல் 2.00 மணியளவில் ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் குழந்தைகள் பாராளுமன்றத்தின் துறைசார்ந்த அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ் மொழி வாழ்த்துப் பாடலுடன் ஆரம்பித்த பயிற்சியில் Skills India வின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. அருள்தேவன் அவர்கள் வந்திருந்த மாணவர்களையும், ஆசிரியர்களையும் வரவேற்றுப் பேசினார். பின்னர் பயிற்சியாளர் திரு.நா.சிறிதரன் அவர்கள் பயிற்சியினை ஆரம்பித்தார். முதலில் தலைமத்துவம் என்ன என்பது பற்றியும் ஒவ்வொரு வகையான தலைமத்துவம் அவ்வாறு தலைமை வகித்தவர்கள் பற்றியும் விளக்கம் அளித்தார், மாணவர்களிடம் இருந்து உங்களுக்கு பிடித்த தலைவர்கள் அவர்களின் கொள்கைகள் பற்றி கூறும்படி கேட்டபோது மாணவர்கள் மகாத்மா காந்தி, ஜவர்ஹலால் நேரு, காமராஜர், எம்.ஜி.ஆர், ரஜினி, விஜய் என பட்டியலிட்டுப் போனார்கள்.

இதன் பின்னர் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஒருவருக்கு இருக்க வேண்டிய பண்புகள் என்ன அவருக்கு எவ்வாறான திறன்கள் உடையவராக இருக்க வேண்டும் என்பதை சிறு சிறு விளையாட்டுக்கள் மூலம் தெளிவு படுத்தினார். முதலில் …..

வழிநடத்துதல்:
கண்கள் கட்டப்பட்ட மாணவருக்கு குழுவினர் வழிகாட்டுதல்



பின்னர் மாணவர்களுக்கு தலைமத்துவத்தில் வழிகாட்டுதலின் முக்கியத்துவம் குறித்து விளக்கமளிக்கப்பட்டது வளங்களைப் பங்கிடுதல் பற்றி விளக்க ஒரு விளையாட்டினை ஸ்ரீதரன் அவர்கள் நடத்தினார்.

தலைவராக இருக்கும் ஒருவர் தனது குழுவினை வழிநடத்தும் தகுதி உடையவராக இருக்க வேண்டும் அந்த குழுவில் உள்ளவர்கள் சரியான வழியில் செல்வதற்கு நெறிப்படுத்த வேண்டும். இதற்காக முதல் விளையாட்டாக கண்கள் கட்டப் பட்ட ஒருவருக்கு சரியான வழியைக் காட்டும் விளையாட்டு இடம்பெற்றது. இதில் கயிற்றினால் எல்லை பிரிக்கப்பட்ட ஒரு இடத்தில் பந்து, டம்ளர், பேப்பர் கப், வளையம் என நிறையப் பொருட்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக அருகருகே வைக்கப்பட்டிருக்கும் இதில் கண்கள் கட்டப்பட்ட ஒருவர் ஒரு பகுதியினால் உள்ளே சென்று மறு பகுதி வழியாக வெளியே வரவேண்டும் அதன்போது அவர் அங்கு வைக்கப் பட்டிருக்கும் எந்த பொருளின் மீதும் கால் வைத்து விடாதபடி அந்த குழுவின் உறுப்பினர்கள் அவருக்கு வழிகாட்ட வேண்டும் எனக் கூறப்பட்டது. பல மாணவர்கள் சரியான முறையில் செல்வதற்கு சிரமப் பட்டனர் அவர்களது வழிகாட்டிகள் சரியான வழியினை அவர்களுக்கு காட்டுவதற்கு தவறினர் ஒரு சிலர் சில தவறுகளோடு வெற்றி பெற்றனர்
பலூன் காற்றல் பேப்பர் கப் வீழ்த்துதல்
பலூன் மூலம் பேப்பர் கப்பினை வீழ்த்த
 தயாராகும் மாணவி
ஒரு மேசையின் மீது ஒவ்வொன்றாக அடுக்கி வைக்கப்பட்ட 6 பேப்பர் கப் இருந்தன விளையாட்டில் பங்கு பெறும் ஒருவர் கொடுக்கப்படும் ஒரு பலூனின் மூலம் காற்றினை நிரப்பி அந்த பேப்பர் கப்பினை கீழே வீழ்த்த வேண்டும் யார் அதிகமாகவோ அல்லது முழுவதுமாக வீழ்த்துகின்றார்களோ அவர்களே வெற்றியாளர்களாக கருதப்படுவார்கள். இதில் ஒவ்வொரு குழுவில் இருந்தும் பல மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர் ஒரு சிலர் மட்டும் 5. கப் வீழ்த்தினர் மற்றவர்களால் முடியவில்லை இந்த விளையாட்டின் மூலம் மாணவர்களிடம் பயிற்சியாளர் ஸ்ரீதரன் அவர்கள் வளங்கள் என்பது நம்மிடம் குறைவாகவே இருக்கின்றது அதை நாம் எப்படி எல்லோருக்கும் கிடைக்க கூடிய வகையிலும் மற்றும் அளவாகவும் பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் இல்லையெனில் முன்னாலே இருப்பர்களுக்கு செலவு செய்து விட்டு பின்னர் கொடுப்பதற்கு எதுவும் இல்லாமல் இருக்கும் நிலை வரும் என விளக்கமளித்தார்.

அதன் பின்னர் முடிவெடுக்கும் திறன்,குழுக்களை ஒன்றினைத்த்  திறன் எல்லோருடைய கருத்துக்களையும் கேட்கும் பண்புகள் போன்றவை குறித்து விளக்கினார் பின்னர் மாணவர்களுக்கு அவர்களது பள்ளியின் சார்பாக பத்திரிகை வெளியிட Skills India மூலம் செயற்படுத்துவது என கூறப் பட்டது அதன் பேரில் மாணவர்கள் தமது பள்ளியின் பத்திரிகைக்கான பெயர் மற்றும் அட்டைப் படம் வடிவமைப்பது குறித்து விளக்கப் பட்டது. பின்னர் மாணவர்களிடம் அட்டைகள் கொடுக்கப்பட்டு தங்கள் பத்திரிகையின் பெயர் மற்றும் அட்டைப்படம் வடிவமைக்கும் படி கோரப்பட்டது.

3 மணிநேரப் பயிற்சியின் பின்னர் மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் நடத்தப்பட்ட பயிற்சி குறித்து கேட்கப்பட்டது. மாணவர்கள் ஒவ்வொருவரும் இது எங்களுக்கு ஊக்கமளிக்கும் வகையிலும் இலகுவாக புரிந்து கொள்ளும் வகையிலும் அமைந்ததாக கூறினர். ஆசிரியர்கள் இந்த பயிற்சி குழந்தைகளை இலகுவாக சென்று அடைந்திருக்கின்றது குழந்தைகள் விரும்பும் வகையில் விளையாட்டு மூலம் புரிய வைத்த பயிற்சியாளருக்கு நன்றி கூறினார்கள். இறுதியில் தேசிய கீதத்துடன் பயிற்சி நிறைவு பெற்றது.
மாணவர்கள் ஆர்வமுடன் அட்டைப்படம் வடிவமைகின்றனர்.
                     


Thursday 11 October 2012

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கல்விமேம்பாடு திட்டம் நிகழ்வு/ Education of Environmental Protection and Management in School Project


சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கல்வி வளர்ச்சி தொடர்பான செயற்திட்டம் ஒன்றினை Skills India தன்னார்வ தொண்டு நிறுவனம். ஈரோடு, நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் உள்ள மலைப் பகுதி கிராமங்களில் ஆரம்பித்து செயற்படுத்தி வருகிறது. இதன் ஒரு நிகழ்வாக பள்ளிக் குழந்தைகளின் கல்வி மற்றும் திறன் வளர்ச்சியை மேம்படுத்தும் செயற்பாடான குழந்தைகள் பாராளுமன்றம் அமைத்தல் என்னும் நிகழ்வினை கேர்மாளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் நடத்தப்பட்டது இந் நிகழ்விற்கு ஈரோடு மாவட்ட துவக்கக்கல்வி அலுவலகர் திருமதி. A.பத்மாவதி M.A, M.Ed M.Phil அவர்கள் கலந்து கொண்டார் அவருடன் தாளவாடி உதவி கல்வி அலுவலகர் திரு. சக்திவேல் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. தாமரைக் கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
நிகழ்வில் கலந்து கொண்ட மாவட்டக் கல்வி அலுவலகர் திருமதி .பத்மா, தாளவாடி உதவி கல்வி அலுவலகர் திரு.சக்தி வேல், மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியர் தாமரைக்கண்ணன் ஆகியோர்

மாணவர்கள் கலைத் திறன்
வந்திருந்தவர்களை தலைமை ஆசிரியர் திரு. தாமரைக் கண்ணன் அவர்கள் வரவேற்றுப் பேசினார். பின்னர் மாணவர்கள் தமது ஆடல் பாடல், ஓவிய திறன்களை நிகழ்த்தினர். பள்ளியில் கற்றுத்தந்த திருக்குறள் மற்றும் மனப்பாடங்களை ஒப்பித்துக் காட்டினர். நிகழ்வினில் Skills India வின் திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.ஸ்ரீதரன் அவர்கள் குழந்தைகள் பாராளுமன்றம் பற்றியும்  அதன் மூலம் குழந்தைகளை எவ்வாறு பேச்சாற்றல், எழுத்தாற்றல் செயலாற்றல் மற்றும் சமூக நலன் போன்ற திறன்களை வளர்க்க முடியும் என்பதை விளக்கினார். அதன் பின்னர் மாணவர்கள் குழுக்களாகப் பிரிக்கப் பட்டு ஒவ்வொரு குழுவிற்கும் ஒவ்வொரு துறை ஒதுக்கப் பட்டது அதன் படி செல்வி. S.ராதா -5ம் வகுப்பு அவர்களின் தலமையில் கல்வித் துறையும், செல்வி. M.சுகன்யா- 5ம் வகுப்பு  அவர்களது  தலைமையில் விளையாட்டுத் துறையும் , செல்வி. K.மாதவி அவர்களது தலைமையில் மருத்துவம் மற்றும் சுகாதாரக் குழுவும், மற்றும் செல்வன். J.மாதேஷ் 5ம் வகுப்பு தலமையில் பசுமை மற்றும் சுற்றுச் சூழல் அமைப்பும் ஆரம்பிக்கப்பட்டது. இவர்கள் ஒவ்வொருவருக்குமான பொறுப்புக்களை Skills India வின் கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. அருள்தேவன் அவர்கள் விளக்கினார்.

மாணவர்கள் மத்தியில் உரையாற்றும் கல்வி அலவலகர்
நிகழ்வில் மாணவியை பாராட்டும்
 அலுவலகர்
இறுதியில் ஈரோடு மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலகர் திருமதி. A.பத்மா அவர்கள் பேசினார்கள்  முதலில் தங்கள் திறன்களை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார் அவர்கள் மேலும்  பேசுகையில்… மாணவர்களைக் குழுக்களாக பிரித்து அவர்களின் திறன்களை வளர்க்கின்ற பணிகளில் ஈடுபடுவது. இது போன்ற மலைக் கிராமப் பள்ளிகளுக்கு அவசியமானதாகும். இது போன்ற பணிகளை தொண்டு நிறுவனங்கள் ஆசிரியருடனும், பெற்றோருடனும் சேர்ந்து செயற்படுத்த வேண்டும் என்பதே எனது விருப்பம். இங்குள்ள பள்ளி மாணவர்களை பல்வேறு திறன்களை உடையவர்களாக மாற்றுவதற்கு தொண்டு நிறுவனங்களும், ஆசிரியர்களும் சுயநலம் கருதாது பாடுபடவேண்டும் என்று கூறி முடித்தார். தாளவாடி உதவித் தொடக்க கல்வி அலுவலகர் அவர்களும் அதை முன்மொழிந்து பேசினார். அத்துடன் பள்ளிக்கு மாணவர்களை தொடர்ச்சியாக வரவழைக்கும் பணியினை ஆசிரியர்களுடன் இனைந்து செயற்படுத்த வேண்டும் என்று கூறி முடித்தார். பின்னர் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதரன் அவர்கள் நன்றி கூறினார் தேசிய கீதத்துடன் நிகழ்வு இனிதே நிறைவடைந்தது. 



Friday 5 October 2012

KITCHEN GARDEN- SKiLLS INDiA வினால் முடசல் ஓடை ஊரட்சி ஒன்றிய உயர்நிலைப் பள்ளியில் சமையல் தோட்டம்அமைப்பு:


 பரங்கிப் பேட்டை ஊராட்சியின் கீழ் உள்ள முடசல் ஓடை ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப் பள்ளியில்  முந்தைய நாளில் மரக்கன்றுகள் நடும் போது ஆசிரியர்கள் கொடுத்த வரவேற்பும் அவர்களுக்கு சமையல் தோட்டம் அமைபதில் இருந்த ஆர்வமும், சமையல் தோட்டம் பள்ளியில் அமைவதற்கு தேவையான பொருள் தொடர்பாக பள்ளியின் பெற்றோர் சங்க தலைவர் திரு. கப்பலோட்டிய தமிழன் அவர்களைச் சென்று பார்த்துப் பேசிய போது அந்த தோட்டம் அமைக்க தேவையான கம்புகளையும் வலைகளையும் தான் வாங்கித் தருவதாக வாக்களித்திருந்தார்
  
கிச்சன் கார்டன் அமைய உள்ள  இடத்தை
பார்வையிடும் பொறுப்பாசிரியர் ஜெயராஜ் அவர்கள்
அடுத்த நாள் காலையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. சிவகுமார் அவர்களைச் சந்தித்த போது மிகவும் சந்தோசத்துடன் வரவேற்றார். நேற்றைய நிகழ்வில் பணியின் காரணமாக கலந்து கொள்ள முடியாததற்கு வருத்தம் தெரிவித்த அவர் நிறுவனத்தின் செயற்பாட்டுக்கு நன்றி எனக் கூறி இன்று வந்ததற்கான காரணத்தைக் கேட்ட போது எங்கள் சமையல் தோட்டம்(Kitchen Garden) அமைக்கும் திட்டத்தினைப் பற்றியும் அதற்கு பெற்றோர் சங்கத்தின் சார்பாக கிடைத்த ஒத்துளைப்பு குறித்தும் கூறினோம். மாணவர்களின் பங்களிப்போடு அந்த தோட்டம் அமைப்பதற்கான வேலைகளைச் செய்ய வேண்டும் எனவே இன்று அரை நாள் மாத்திரம் அவர்கள் எங்களுடன் சேர்ந்து அந்த தோட்டம் அமைக்கும் பணியில் ஈடுபட அனுமதி தரவேண்டும் எனக் கேட்டபோது, மாணவர்களுக்கு பரிட்சைகள் நெருங்குகின்றது குறித்தும் அதனால் அவர்களுக்கான பாடங்கள் முடிக்க வேண்டிய அவசியம் குறித்தும் கூறினார். பின்னர் இதில் கலந்து கொள்ள இருக்கும் வகுப்புகளான 6,7,8 ம் வகுப்பிற்கு காலை நேர பாடங்களை எடுக்கும் ஆசிரியர்களுடன் அது தொடர்பாக கேட்க வேண்டும் எனக் கூறி ஆசிரியர்களிடம் எங்களது வருகைக்கான நோக்கத்தினையும் தோட்டம் அமைப்பது குறித்த நமது எண்ணத்தினையும் குறிப்பிட்டார். பின்னர் ஆசிரியர்கள் சம்மதம் தெரிவிக்கவே. தலைமை ஆசிரியரின் அனுமதியுடன் தோட்டம் அமைக்கும் பணிக்கான செயற்பாடுகளில் இறங்கத் தயாரானோம்.

இடத்தினை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கும்
  குழந்தைகள் பாராளுமன்ற  உறுப்பினர்கள்
வேலையில் முனைப்புடன்
காலை 10.00 மணியளவில் பசுமை மற்றும் சுற்றுச்சுழல் பாதுகாப்புத் துறையைச்  சேர்ந்த மாணவர்களும். விளையாட்டுத் துறை மற்றும் உடல்நலம் மற்றும் சுகாதாரத்துறை மாணவர்கள் என நான்கு குழுக்களும் அங்கு கூடியிருந்தனர். இவர்களை மாணவர்கள் தனியாகவும் மாணவிகள் தனியாகவும் பிரித்து அவர்களுக்கான வேலைகள் ஒதுக்கப்பட்டன, மாணவர்கள் அனைவரும் கம்பு வலை போன்றவற்றை எடுத்து வந்து வேலி அமைப்பதற்கான  பணியில் ஈடு படுதல் , மாணவிகள் தோட்டம் அமையவுள்ள இடத்தினை சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுதல் என முடிவானது அதன் படி மாணவர்களுடன் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதரன் அவர்கள் சேர்ந்து கம்பு வலைகள் ஆகியவற்றைக் கொண்டுவந்து வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டனர், மாணவிகள் தோட்டம் அமையவுள்ள இடத்தில் இருந்த செடிகளை அகற்றி அந்த இடத்தில் இருந்த பிளாஸ்டிக் பாலித்தீன் மற்றும் கற்கள் போன்றவற்றை அகற்றி தரமான முறையில் துப்பரவு செய்து முடித்தனர்.

கிச்சன் கார்டன் துப்பரவு செய்யப்பட்டு 
வேலி அமைக்கப் பட்டிருக்கும் காட்சி
வேலிக்கான கம்புகள் ஊன்றப்பட்டு அதற்கு ஏற்ப வலைகளை அறுத்து நான்கு புறமும் அடைக்கப்பட்டன, மாணவர்கள் உள்ளே சென்று பயிர்களை பராமரித்து வருவதற்கான வாசல் அமைக்கப்பட்டு சுற்றிலும் வலையினால் அடைக்கப் பட்ட பாதுகாப்பான தோட்டநிலம் கிடைத்தது, அதில் ஏற்கனவே இருந்த செடிகளுக்கு பாத்தி அமைக்கப் பட்டு நீர் ஊற்றி இடங்கள் அனைத்டினையும் ஈரப்படுத்தப்பட்டது. பின்னர் தோட்டத்தின் நாலா புறமும் என்னென்ன பயிகளைச் செய்வது என்றும் அவற்றுக்கு தேவையான இயற்கை உரம் எப்படி தயாரிப்பது என்பது பற்றி மாணவர்கள் அனைவருக்கும் விளக்கப்பட்டது செய்முறையாக காய்ந்த மாட்டுச்சானம், இலை,குளைகள்,வளமான ஈரளிப்பான மண்களை வைத்து உரம் தயாரிப்பதற்கான பயிற்சி கொடுக்கப்பட்டது , வேலைகள் அனைத்தும் முடிவுற்றதும் குழந்தைகள் பாராளுமன்ற குழுவின் பொறுப்பாசிரியர் திரு. ஜெயராஜ் அவர்கள் முன்னிலையில் தோட்டத்தினை பாராமரிக்கும் பொறுப்பினை பசுமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறையினர் ஏற்றுக்கொண்டனர் மற்ற துறையினர் அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்வதாக உறுதியளித்தனர்.

கிச்சன் கார்டனை பொறுப்பேற்றுக் கொண்ட
 குழுவினர்
ஆசிரியர் மற்றும் மாணவர்களிடம் தோட்டத்தினைக் கையளித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டோம். இந்த பள்ளியினைப் போல மற்ற பள்ளியில் உள்ள மாணவர்களும் இவ்வாறான காய்கறி தோட்டம் அமைப்பதற்கான செயலில் இறங்கினால் ஒவ்வொரு பள்ளியும் பசுமையானதாக இருப்பதோடு அதன்மூலம் பயனுடைய பயிர்களை வளர்க்கும் ஆர்வமும் மாணவர்களிடையே பெருகும்