Monday 26 November 2018

தாளவாடி – பைஷா பாத்திமாவுக்கு தொழில் திறன் கல்வி கொடுத்த வெற்றி வாகை

ஈரோடு மாவட்டம்தாளவாடி வட்டம் –3/587 போஜகவுடர் என்கின்ற முகவரியில் வசித்து வந்த பைஜா பாத்திமா தொழில் திறன் கல்வியினால் தனது வாழ்வில் ஏற்பட்ட மாற்றம் பற்றி பகிர்ந்து கொள்கிறார்.

நான்கு பேர்  கொண்டது என் குடும்பம். என் தந்தை சிறிய பெட்டிக்கடை வைத்துள்ளார், அதன் மூலம் மாத வருமாணமாக 6000 கிடைத்துக் கொண்டிருந்தது, அந்த வருமாணம் என் குடும்பதிற்கு பற்றாகுறை தான். 8 ஆம் வகுப்பு வரை  படித்துள்ள  என்னாலும் எந்த வருமாணமும் ஈட்ட முடியாமல் வீட்டில் பொழுதை களித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது தான் முன்னாள் பயிற்சியாளர் மூலம் Skills India Foundation- Thalavadi பயிற்சி மையத்தில் பிரதம மந்திரியின் (PMKVY) திறன் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் குறுகிய கால தையல் தொழில் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதாக தெரிந்து கொண்டேன். பின்னர்  தாளவாடி ஓசூர் ரோட்டில் உள்ள Skills India Foundation- Thalavadi பயிற்சி மையத்திற்கு சென்று  விபரங்கள் அனைத்தும் கேட்டு அறிந்து கொண்டேன்.

திட்டம் குறித்து பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் திரு.பொன்னுசாமி சார் அவர்கள் எடுத்துக்கூறினார்கள், அவரது வழிகாட்டுதலின் படி சுயதொழில் தையல் பயிற்சி வகுப்பில் சேர்ந்து கொண்டேன். 380 மணி நேரம் (3 மாத கால ) பயிற்சியில் தையல் பயிற்சி ஆசிரியர் திருமதி .சுதா மேடம் அவர்கள்  தையல் வகைகள், பல்வேறு ஆடைகள் வடிவமைத்தல் , எம்ப்ராய்டரி வேலை, அனைத்து வகையான ஆடைகள் அளவெடுத்து , வெட்டி தைப்பது என பல சுவாரசியமாக தையல் பயிற்சி நடந்தது.

பயிற்சியின் முடிவில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சியடைந்து  மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சினால் வழங்கப்பட்ட சான்றிதலைப் பெற்றுக் கொண்டேன். பின்னர் வீட்டில் ஒரு தையல் மிசின் ஒன்றை வாங்கி தைக்க ஆரம்பித்தேன். இப்பொழுது அருகில் வசிக்கும் மக்களிடமும் இருந்து வரும் ஆடர்களை நேர்த்தியாக தைத்து கொடுத்து வருகிறேன் , மாதம் ஒன்றிற்கு 8800/- மேல் வருமானம் கிடைக்கிறது, இதன் மூலம் என்னுடைய குடும்ப வருமாணம் அதிகரித்துள்ளதுஇப்பொழுது என் குடும்பம் மகிழ்ச்சியாக உள்ளது.

என்னையும் என் போன்று பயிற்சியில் கலந்து கொண்டு பயிற்சியை நிறைவு செய்த பல பயிற்சியாளர்களுக்கும்  திறன்பட பயிற்சியளித்த பிரதம மந்திரியின் (PMKVY) திறன் மேம்பாட்டு திட்டத்திற்கும், Skills India Foundation - Thalavadi பயிற்சி மையத்திற்கும் மைய நிர்வாகி திரு.பொன்னுசமி சார் அவர்களுக்கும் , பயிற்சி ஆசிரியார் திருமதி. சுதா அவர்களுக்கும் என் நன்றிகளை தெரிவிக்கிறேன்

தாளவாடி- அமிர்தாமணி யின் வெற்றிப் பயணம்

ஈரோடு மாவட்டம்தாளவாடி வட்டம்பொன்மனகள்ளி என்கின்ற மலை கிராமத்தைச் சேர்ந்த அமிர்தாமணி தொழில் திறன் கல்வியினால் தனது வாழ்வில் ஏற்பட்ட வெற்றியை பகிர்ந்து கொள்கிறார்.

என் குடும்பம் கணவர் மற்றும் மகளுடன் கூடிய சிறிய குடும்பம். கணவர் ஆரம்ப பள்ளி ஆசிரியராகப் பணி புரிகிறார். 10 ஆம் வகுப்பு வரை  படித்துள்ளேன்,  நான் வசித்து வரும் கிராமத்தில் வேலை வாய்ப்பு இல்லாததால் வீட்டில் பொழுதை களித்துக் கொண்டிருந்தேன். தன்னுடைய வாழ் நாள் இப்படியே கழிந்து விடுமோ என்ற மன அழுத்ததில் இருந்தேன். அப்பொழுது தான் என் வாழ்வில் வசந்தம் என்னுடைய பழைய பள்ளி தோழி சரவணாண மூலம் வந்தது. சரவணாண Skills India Foundation- Thalavadi பயிற்சி மையத்தில் பிரதம மந்திரியின் (PMKVY) திறன் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் குறுகிய கால தையல் தொழில் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதாகவும் தான் கற்றுக் கொண்டதாகவும் கூறினாள். பின்னர்  தாளவாடி ஓசூர் ரோட்டில் உள்ள Skills India Foundation- Thalavadi பயிற்சி மையத்திற்கு சென்று  விபரங்கள் அனைத்தும் கேட்டு அறிந்து கொண்டேன்.

திட்டம் குறித்து பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் திரு.பொன்னுசாமி சார் அவர்கள் எடுத்துக்கூறினார்கள், அவரது வழிகாட்டுதலின் படி சுயதொழில் தையல் பயிற்சி வகுப்பில் சேர்ந்து கொண்டேன். 380 மணி நேரம் (3 மாத கால ) பயிற்சியில் தையல் பயிற்சி ஆசிரியர் திருமதி .சுதா மேடம் அவர்கள்  தையல் வகைகள், பல்வேறு ஆடைகள் வடிவமைத்தல் , எம்ப்ராய்டரி வேலை, அனைத்து வகையான ஆடைகள் அளவெடுத்து , வெட்டி தைப்பது என பல சுவாரசியமாக தையல் பயிற்சி நடந்தது.

பயிற்சியின் முடிவில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சியடைந்து  மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சினால் வழங்கப்பட்ட சான்றிதலைப் பெற்றுக் கொண்டேன். பின்னர் வீட்டில் ஒரு தையல் மிசின் ஒன்றை வாங்கி தைக்க ஆரம்பித்தேன். அதுவரை நான் உட்பட அனைவரும் துணி தைத்து போட வேண்டும் என்றாள் 10 கிலோ மீட்டர் தூரம் உள்ள கடைக்கு செல்ல வேண்டும். ஆனால் இப்பொழுது  அருகில் வசிக்கும் மக்களிடமும் இருந்து வரும் ஆடர்களை நேர்த்தியாக தைத்து கொடுத்து வருகிறேன் , மாதம் ஒன்றிற்கு 8800/- மேல் வருமானம் கிடைக்கிறது, இதன் மூலம் என்னுடைய குடும்ப வருமாணம் அதிகரித்ததோடு மற்ற படித்த நகர பெண்களைப் போல் தைரியமகாகவும் தன்னம்பிக்கையோடும் இருக்க முடிகிறது. மேலும் என் தொழிலை விரிவு படுத்த boutique shop ஒன்றை திறக்கத் திட்டமிட்டுள்ளேன்.