Wednesday, 31 October 2012

கடலூரில் மாணவர்களுக்கான தலைமத்துவ பயிற்சி.


மாணவர்கள் மத்தியில் இருந்துதான் இந்த தேசத்தின் மிகப்பெரும் தலைவர்கள் வந்திருக்கின்றார்கள் அவர்கள் ஒவ்வொருவரையும் ஏதோ ஒரு தூண்டுதல் தலைவர்களாக மாற்றியிருக்கின்றது. காந்திக்கு தென் ஆபிரிக்க ரயில் பயணத்தின் போது ஏற்பட்டதைப் போல... ஆனால் எல்லோருக்கும் சந்தர்பங்கள் அமைந்துவிடுவதில்லை அதனால் ஒவ்வொருவருக்கும் தலைமத்துவம்(Leadership) குறித்த சிந்தனையினை ஏற்படுத்த முனைவதுதான் நாளைய தலைவர்களை உருவாக்கும் வழியாக அமையும் அந்த வகையில்….

பயிற்சியில் கலந்து கொண்ட மாணவர்கள்
கடலூர் மாவட்டம் பரங்கிப் பேட்டை ஊரட்சிக்கு உட்பட்ட முடசல் ஓடை, எம்.ஜி.ஆர் நகர், கலைஞர் நகர் மற்றும் கிள்ளை ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள நடுநிலைப்பள்ளிகள் மற்றும் துவக்கப் பள்ளி மாணவர்களுக்கான தலைமத்துவ பயிற்சி ஒன்றினை Skills India சார்பாக கடந்த 12.09.12ம்  தேதி ஏற்பாடு செய்திருந்தது அதன் பேரில்  அன்று பிற்பகல் 2.00 மணியளவில் ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் குழந்தைகள் பாராளுமன்றத்தின் துறைசார்ந்த அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ் மொழி வாழ்த்துப் பாடலுடன் ஆரம்பித்த பயிற்சியில் Skills India வின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. அருள்தேவன் அவர்கள் வந்திருந்த மாணவர்களையும், ஆசிரியர்களையும் வரவேற்றுப் பேசினார். பின்னர் பயிற்சியாளர் திரு.நா.சிறிதரன் அவர்கள் பயிற்சியினை ஆரம்பித்தார். முதலில் தலைமத்துவம் என்ன என்பது பற்றியும் ஒவ்வொரு வகையான தலைமத்துவம் அவ்வாறு தலைமை வகித்தவர்கள் பற்றியும் விளக்கம் அளித்தார், மாணவர்களிடம் இருந்து உங்களுக்கு பிடித்த தலைவர்கள் அவர்களின் கொள்கைகள் பற்றி கூறும்படி கேட்டபோது மாணவர்கள் மகாத்மா காந்தி, ஜவர்ஹலால் நேரு, காமராஜர், எம்.ஜி.ஆர், ரஜினி, விஜய் என பட்டியலிட்டுப் போனார்கள்.

இதன் பின்னர் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஒருவருக்கு இருக்க வேண்டிய பண்புகள் என்ன அவருக்கு எவ்வாறான திறன்கள் உடையவராக இருக்க வேண்டும் என்பதை சிறு சிறு விளையாட்டுக்கள் மூலம் தெளிவு படுத்தினார். முதலில் …..

வழிநடத்துதல்:
கண்கள் கட்டப்பட்ட மாணவருக்கு குழுவினர் வழிகாட்டுதல்



பின்னர் மாணவர்களுக்கு தலைமத்துவத்தில் வழிகாட்டுதலின் முக்கியத்துவம் குறித்து விளக்கமளிக்கப்பட்டது வளங்களைப் பங்கிடுதல் பற்றி விளக்க ஒரு விளையாட்டினை ஸ்ரீதரன் அவர்கள் நடத்தினார்.

தலைவராக இருக்கும் ஒருவர் தனது குழுவினை வழிநடத்தும் தகுதி உடையவராக இருக்க வேண்டும் அந்த குழுவில் உள்ளவர்கள் சரியான வழியில் செல்வதற்கு நெறிப்படுத்த வேண்டும். இதற்காக முதல் விளையாட்டாக கண்கள் கட்டப் பட்ட ஒருவருக்கு சரியான வழியைக் காட்டும் விளையாட்டு இடம்பெற்றது. இதில் கயிற்றினால் எல்லை பிரிக்கப்பட்ட ஒரு இடத்தில் பந்து, டம்ளர், பேப்பர் கப், வளையம் என நிறையப் பொருட்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக அருகருகே வைக்கப்பட்டிருக்கும் இதில் கண்கள் கட்டப்பட்ட ஒருவர் ஒரு பகுதியினால் உள்ளே சென்று மறு பகுதி வழியாக வெளியே வரவேண்டும் அதன்போது அவர் அங்கு வைக்கப் பட்டிருக்கும் எந்த பொருளின் மீதும் கால் வைத்து விடாதபடி அந்த குழுவின் உறுப்பினர்கள் அவருக்கு வழிகாட்ட வேண்டும் எனக் கூறப்பட்டது. பல மாணவர்கள் சரியான முறையில் செல்வதற்கு சிரமப் பட்டனர் அவர்களது வழிகாட்டிகள் சரியான வழியினை அவர்களுக்கு காட்டுவதற்கு தவறினர் ஒரு சிலர் சில தவறுகளோடு வெற்றி பெற்றனர்
பலூன் காற்றல் பேப்பர் கப் வீழ்த்துதல்
பலூன் மூலம் பேப்பர் கப்பினை வீழ்த்த
 தயாராகும் மாணவி
ஒரு மேசையின் மீது ஒவ்வொன்றாக அடுக்கி வைக்கப்பட்ட 6 பேப்பர் கப் இருந்தன விளையாட்டில் பங்கு பெறும் ஒருவர் கொடுக்கப்படும் ஒரு பலூனின் மூலம் காற்றினை நிரப்பி அந்த பேப்பர் கப்பினை கீழே வீழ்த்த வேண்டும் யார் அதிகமாகவோ அல்லது முழுவதுமாக வீழ்த்துகின்றார்களோ அவர்களே வெற்றியாளர்களாக கருதப்படுவார்கள். இதில் ஒவ்வொரு குழுவில் இருந்தும் பல மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர் ஒரு சிலர் மட்டும் 5. கப் வீழ்த்தினர் மற்றவர்களால் முடியவில்லை இந்த விளையாட்டின் மூலம் மாணவர்களிடம் பயிற்சியாளர் ஸ்ரீதரன் அவர்கள் வளங்கள் என்பது நம்மிடம் குறைவாகவே இருக்கின்றது அதை நாம் எப்படி எல்லோருக்கும் கிடைக்க கூடிய வகையிலும் மற்றும் அளவாகவும் பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் இல்லையெனில் முன்னாலே இருப்பர்களுக்கு செலவு செய்து விட்டு பின்னர் கொடுப்பதற்கு எதுவும் இல்லாமல் இருக்கும் நிலை வரும் என விளக்கமளித்தார்.

அதன் பின்னர் முடிவெடுக்கும் திறன்,குழுக்களை ஒன்றினைத்த்  திறன் எல்லோருடைய கருத்துக்களையும் கேட்கும் பண்புகள் போன்றவை குறித்து விளக்கினார் பின்னர் மாணவர்களுக்கு அவர்களது பள்ளியின் சார்பாக பத்திரிகை வெளியிட Skills India மூலம் செயற்படுத்துவது என கூறப் பட்டது அதன் பேரில் மாணவர்கள் தமது பள்ளியின் பத்திரிகைக்கான பெயர் மற்றும் அட்டைப் படம் வடிவமைப்பது குறித்து விளக்கப் பட்டது. பின்னர் மாணவர்களிடம் அட்டைகள் கொடுக்கப்பட்டு தங்கள் பத்திரிகையின் பெயர் மற்றும் அட்டைப்படம் வடிவமைக்கும் படி கோரப்பட்டது.

3 மணிநேரப் பயிற்சியின் பின்னர் மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் நடத்தப்பட்ட பயிற்சி குறித்து கேட்கப்பட்டது. மாணவர்கள் ஒவ்வொருவரும் இது எங்களுக்கு ஊக்கமளிக்கும் வகையிலும் இலகுவாக புரிந்து கொள்ளும் வகையிலும் அமைந்ததாக கூறினர். ஆசிரியர்கள் இந்த பயிற்சி குழந்தைகளை இலகுவாக சென்று அடைந்திருக்கின்றது குழந்தைகள் விரும்பும் வகையில் விளையாட்டு மூலம் புரிய வைத்த பயிற்சியாளருக்கு நன்றி கூறினார்கள். இறுதியில் தேசிய கீதத்துடன் பயிற்சி நிறைவு பெற்றது.
மாணவர்கள் ஆர்வமுடன் அட்டைப்படம் வடிவமைகின்றனர்.
                     


No comments:

Post a Comment