பரங்கிப் பேட்டை ஊராட்சியின் கீழ் உள்ள முடசல் ஓடை
ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப் பள்ளியில்
முந்தைய நாளில் மரக்கன்றுகள் நடும் போது ஆசிரியர்கள் கொடுத்த வரவேற்பும்
அவர்களுக்கு சமையல் தோட்டம் அமைபதில் இருந்த ஆர்வமும், சமையல் தோட்டம் பள்ளியில்
அமைவதற்கு தேவையான பொருள் தொடர்பாக பள்ளியின் பெற்றோர் சங்க தலைவர் திரு.
கப்பலோட்டிய தமிழன் அவர்களைச் சென்று பார்த்துப் பேசிய போது அந்த தோட்டம் அமைக்க
தேவையான கம்புகளையும் வலைகளையும் தான் வாங்கித் தருவதாக வாக்களித்திருந்தார்
கிச்சன் கார்டன் அமைய உள்ள இடத்தை பார்வையிடும் பொறுப்பாசிரியர் ஜெயராஜ் அவர்கள் |
அடுத்த நாள் காலையில் பள்ளியின் தலைமை ஆசிரியர்
திரு. சிவகுமார் அவர்களைச் சந்தித்த போது மிகவும் சந்தோசத்துடன் வரவேற்றார்.
நேற்றைய நிகழ்வில் பணியின் காரணமாக கலந்து கொள்ள முடியாததற்கு வருத்தம் தெரிவித்த
அவர் நிறுவனத்தின் செயற்பாட்டுக்கு நன்றி எனக் கூறி இன்று வந்ததற்கான காரணத்தைக்
கேட்ட போது எங்கள் சமையல் தோட்டம்(Kitchen Garden) அமைக்கும் திட்டத்தினைப்
பற்றியும் அதற்கு பெற்றோர் சங்கத்தின் சார்பாக கிடைத்த ஒத்துளைப்பு குறித்தும்
கூறினோம். மாணவர்களின் பங்களிப்போடு அந்த தோட்டம் அமைப்பதற்கான வேலைகளைச் செய்ய
வேண்டும் எனவே இன்று அரை நாள் மாத்திரம் அவர்கள் எங்களுடன் சேர்ந்து அந்த தோட்டம்
அமைக்கும் பணியில் ஈடுபட அனுமதி தரவேண்டும் எனக் கேட்டபோது, மாணவர்களுக்கு
பரிட்சைகள் நெருங்குகின்றது குறித்தும் அதனால் அவர்களுக்கான பாடங்கள் முடிக்க
வேண்டிய அவசியம் குறித்தும் கூறினார். பின்னர் இதில் கலந்து கொள்ள இருக்கும்
வகுப்புகளான 6,7,8 ம் வகுப்பிற்கு காலை நேர பாடங்களை எடுக்கும் ஆசிரியர்களுடன் அது
தொடர்பாக கேட்க வேண்டும் எனக் கூறி ஆசிரியர்களிடம் எங்களது வருகைக்கான
நோக்கத்தினையும் தோட்டம் அமைப்பது குறித்த நமது எண்ணத்தினையும் குறிப்பிட்டார்.
பின்னர் ஆசிரியர்கள் சம்மதம் தெரிவிக்கவே. தலைமை ஆசிரியரின் அனுமதியுடன் தோட்டம்
அமைக்கும் பணிக்கான செயற்பாடுகளில் இறங்கத் தயாரானோம்.
இடத்தினை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கும் குழந்தைகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் |
காலை 10.00 மணியளவில் பசுமை
மற்றும் சுற்றுச்சுழல் பாதுகாப்புத் துறையைச்
சேர்ந்த மாணவர்களும். விளையாட்டுத் துறை மற்றும் உடல்நலம் மற்றும்
சுகாதாரத்துறை மாணவர்கள் என நான்கு குழுக்களும் அங்கு கூடியிருந்தனர். இவர்களை
மாணவர்கள் தனியாகவும் மாணவிகள் தனியாகவும் பிரித்து அவர்களுக்கான வேலைகள்
ஒதுக்கப்பட்டன, மாணவர்கள் அனைவரும் கம்பு வலை போன்றவற்றை எடுத்து வந்து வேலி
அமைப்பதற்கான பணியில் ஈடு படுதல் ,
மாணவிகள் தோட்டம் அமையவுள்ள இடத்தினை சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுதல் என
முடிவானது அதன் படி மாணவர்களுடன் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதரன் அவர்கள் சேர்ந்து
கம்பு வலைகள் ஆகியவற்றைக் கொண்டுவந்து வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்,
மாணவிகள் தோட்டம் அமையவுள்ள இடத்தில் இருந்த செடிகளை அகற்றி அந்த இடத்தில் இருந்த
பிளாஸ்டிக் பாலித்தீன் மற்றும் கற்கள் போன்றவற்றை அகற்றி தரமான முறையில் துப்பரவு
செய்து முடித்தனர்.
கிச்சன் கார்டன் துப்பரவு செய்யப்பட்டு
வேலி அமைக்கப் பட்டிருக்கும் காட்சி
|
வேலிக்கான கம்புகள் ஊன்றப்பட்டு
அதற்கு ஏற்ப வலைகளை அறுத்து நான்கு புறமும் அடைக்கப்பட்டன, மாணவர்கள் உள்ளே சென்று
பயிர்களை பராமரித்து வருவதற்கான வாசல் அமைக்கப்பட்டு சுற்றிலும் வலையினால்
அடைக்கப் பட்ட பாதுகாப்பான தோட்டநிலம் கிடைத்தது, அதில் ஏற்கனவே இருந்த
செடிகளுக்கு பாத்தி அமைக்கப் பட்டு நீர் ஊற்றி இடங்கள் அனைத்டினையும்
ஈரப்படுத்தப்பட்டது. பின்னர் தோட்டத்தின் நாலா புறமும் என்னென்ன பயிகளைச் செய்வது
என்றும் அவற்றுக்கு தேவையான இயற்கை உரம் எப்படி தயாரிப்பது என்பது பற்றி மாணவர்கள்
அனைவருக்கும் விளக்கப்பட்டது செய்முறையாக காய்ந்த மாட்டுச்சானம்,
இலை,குளைகள்,வளமான ஈரளிப்பான மண்களை வைத்து உரம் தயாரிப்பதற்கான பயிற்சி
கொடுக்கப்பட்டது , வேலைகள் அனைத்தும் முடிவுற்றதும் குழந்தைகள் பாராளுமன்ற
குழுவின் பொறுப்பாசிரியர் திரு. ஜெயராஜ் அவர்கள் முன்னிலையில் தோட்டத்தினை
பாராமரிக்கும் பொறுப்பினை பசுமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறையினர்
ஏற்றுக்கொண்டனர் மற்ற துறையினர் அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்வதாக
உறுதியளித்தனர்.
கிச்சன் கார்டனை பொறுப்பேற்றுக் கொண்ட
குழுவினர்
|
ஆசிரியர் மற்றும் மாணவர்களிடம் தோட்டத்தினைக்
கையளித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டோம். இந்த பள்ளியினைப் போல மற்ற பள்ளியில்
உள்ள மாணவர்களும் இவ்வாறான காய்கறி தோட்டம் அமைப்பதற்கான செயலில் இறங்கினால்
ஒவ்வொரு பள்ளியும் பசுமையானதாக இருப்பதோடு அதன்மூலம் பயனுடைய பயிர்களை வளர்க்கும்
ஆர்வமும் மாணவர்களிடையே பெருகும்
No comments:
Post a Comment