Thursday 11 October 2012

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கல்விமேம்பாடு திட்டம் நிகழ்வு/ Education of Environmental Protection and Management in School Project


சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கல்வி வளர்ச்சி தொடர்பான செயற்திட்டம் ஒன்றினை Skills India தன்னார்வ தொண்டு நிறுவனம். ஈரோடு, நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் உள்ள மலைப் பகுதி கிராமங்களில் ஆரம்பித்து செயற்படுத்தி வருகிறது. இதன் ஒரு நிகழ்வாக பள்ளிக் குழந்தைகளின் கல்வி மற்றும் திறன் வளர்ச்சியை மேம்படுத்தும் செயற்பாடான குழந்தைகள் பாராளுமன்றம் அமைத்தல் என்னும் நிகழ்வினை கேர்மாளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் நடத்தப்பட்டது இந் நிகழ்விற்கு ஈரோடு மாவட்ட துவக்கக்கல்வி அலுவலகர் திருமதி. A.பத்மாவதி M.A, M.Ed M.Phil அவர்கள் கலந்து கொண்டார் அவருடன் தாளவாடி உதவி கல்வி அலுவலகர் திரு. சக்திவேல் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. தாமரைக் கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
நிகழ்வில் கலந்து கொண்ட மாவட்டக் கல்வி அலுவலகர் திருமதி .பத்மா, தாளவாடி உதவி கல்வி அலுவலகர் திரு.சக்தி வேல், மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியர் தாமரைக்கண்ணன் ஆகியோர்

மாணவர்கள் கலைத் திறன்
வந்திருந்தவர்களை தலைமை ஆசிரியர் திரு. தாமரைக் கண்ணன் அவர்கள் வரவேற்றுப் பேசினார். பின்னர் மாணவர்கள் தமது ஆடல் பாடல், ஓவிய திறன்களை நிகழ்த்தினர். பள்ளியில் கற்றுத்தந்த திருக்குறள் மற்றும் மனப்பாடங்களை ஒப்பித்துக் காட்டினர். நிகழ்வினில் Skills India வின் திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.ஸ்ரீதரன் அவர்கள் குழந்தைகள் பாராளுமன்றம் பற்றியும்  அதன் மூலம் குழந்தைகளை எவ்வாறு பேச்சாற்றல், எழுத்தாற்றல் செயலாற்றல் மற்றும் சமூக நலன் போன்ற திறன்களை வளர்க்க முடியும் என்பதை விளக்கினார். அதன் பின்னர் மாணவர்கள் குழுக்களாகப் பிரிக்கப் பட்டு ஒவ்வொரு குழுவிற்கும் ஒவ்வொரு துறை ஒதுக்கப் பட்டது அதன் படி செல்வி. S.ராதா -5ம் வகுப்பு அவர்களின் தலமையில் கல்வித் துறையும், செல்வி. M.சுகன்யா- 5ம் வகுப்பு  அவர்களது  தலைமையில் விளையாட்டுத் துறையும் , செல்வி. K.மாதவி அவர்களது தலைமையில் மருத்துவம் மற்றும் சுகாதாரக் குழுவும், மற்றும் செல்வன். J.மாதேஷ் 5ம் வகுப்பு தலமையில் பசுமை மற்றும் சுற்றுச் சூழல் அமைப்பும் ஆரம்பிக்கப்பட்டது. இவர்கள் ஒவ்வொருவருக்குமான பொறுப்புக்களை Skills India வின் கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. அருள்தேவன் அவர்கள் விளக்கினார்.

மாணவர்கள் மத்தியில் உரையாற்றும் கல்வி அலவலகர்
நிகழ்வில் மாணவியை பாராட்டும்
 அலுவலகர்
இறுதியில் ஈரோடு மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலகர் திருமதி. A.பத்மா அவர்கள் பேசினார்கள்  முதலில் தங்கள் திறன்களை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார் அவர்கள் மேலும்  பேசுகையில்… மாணவர்களைக் குழுக்களாக பிரித்து அவர்களின் திறன்களை வளர்க்கின்ற பணிகளில் ஈடுபடுவது. இது போன்ற மலைக் கிராமப் பள்ளிகளுக்கு அவசியமானதாகும். இது போன்ற பணிகளை தொண்டு நிறுவனங்கள் ஆசிரியருடனும், பெற்றோருடனும் சேர்ந்து செயற்படுத்த வேண்டும் என்பதே எனது விருப்பம். இங்குள்ள பள்ளி மாணவர்களை பல்வேறு திறன்களை உடையவர்களாக மாற்றுவதற்கு தொண்டு நிறுவனங்களும், ஆசிரியர்களும் சுயநலம் கருதாது பாடுபடவேண்டும் என்று கூறி முடித்தார். தாளவாடி உதவித் தொடக்க கல்வி அலுவலகர் அவர்களும் அதை முன்மொழிந்து பேசினார். அத்துடன் பள்ளிக்கு மாணவர்களை தொடர்ச்சியாக வரவழைக்கும் பணியினை ஆசிரியர்களுடன் இனைந்து செயற்படுத்த வேண்டும் என்று கூறி முடித்தார். பின்னர் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதரன் அவர்கள் நன்றி கூறினார் தேசிய கீதத்துடன் நிகழ்வு இனிதே நிறைவடைந்தது. 



No comments:

Post a Comment