Monday 29 October 2018

சுயதொழில் -சாதித்துக் காட்டிய ராஜபாளயம் பவித்ரா.

“கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்”

பவித்திராவை மாற்றிய தாரக மந்திரமும் இதுதான்  , தனது கைத்தொழில் திறமையால் இன்று சுய தொழில் செய்து வருமானம் ஈட்டிவரும் பவித்ரா தனது சுய வேலைவாய்ப்புப் பற்றி கூறிய போது.

என் பெயர் பவித்ரா ,வயது-25 , விருதுநகர் மாவட்டம் ,ராஜபாளயத்தில் உள்ள ஸ்ரீரெங்கபாளையம் என்னும் ஊரில் வசித்து வருகிறேன். 12 ம் வகுப்புவரை படித்துவிட்டு அதன் பின்னர் மேற்கொண்டு படிக்க வீட்டில் வசதி இல்லாத காரணத்தால் பட்டப் படிப்பு படிக்காமல் ,திருமணம் செய்து கொண்டேன். 

எனது கணவர் தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணி புரிகிறார் , ஒரு பெண் குழந்தை  என 3 பேரும் வாடகை வீடு ஒன்றில் குடியிருந்து வருகிறோம்,  எனது கணவரின் வருமானத்தில் வாடகை வீட்டில்  மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் குடும்ப செலவுகளை சமாளித்து  வந்தேன்.   நான் வீட்டில் இருந்து தினமும் வீணாக பொழுதைப் போக்கிவருவதாக ஒரு குற்ற உணர்வு எப்போதும் இருக்கும் , கணவருக்கு உறுதுணையாக நாமும் ஏதாவது  சம்பாதிக்க வேண்டும் என்று நீண்டகாலம் முயற்சித்து வந்தேன்.

அந்த நிலையில்தான் ராஜபாளையம் சங்கரன்கோவில் வீதியில் உள்ள லயன்ஸ் கட்டிட வளாகத்தில் இயங்கிவரும் Skills India Foundation - Rajapalayam பயிற்சி மையத்தில் மத்திய அரசின் பிரதம மந்திரி திறன் மேம்பாட்டுதிட்டம் மூலம் இலவச தொழில் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதாக விளம்பர பேனர் ஒன்றில் பார்த்தேன்.

திட்டம் குறித்து பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் திருமதி .சுபா மேடம் அவர்கள் எடுத்துக்கூறினார்கள், அவரது வழிகாட்டுதலின் படி சுயதொழில் தையல் பயிற்சி வகுப்பில் சேர்ந்து கொண்டேன். 380 மணி நேரம் (3 மாத கால ) பயிற்சியில் தையல் பயிற்சி ஆசிரியர் திருமதி .கவிதா மேடம் அவர்கள்  தையல் வகைகள், பல்வேறு ஆடைகள் வடிவமைத்தல் , எம்ப்ராய்டரி வேலை, அனைத்து வகையான ஆடைகள் அளவெடுத்து , வெட்டி தைப்பது என பல சுவாரசியமாக தையல் பயிற்சி நடந்தது.

பயிற்சியின் இடையில் பயிற்சி மையத்தில் நடைபெறும் யோகா வகுப்புகள், கலை நிகழ்வுகள் , திறன் போட்டிகள் என அனைத்திலும் ஆர்வத்தோடு கலந்து கொண்டேன்  அதில் எனது கைத்திறன் பொருட்களை செய்து கண்பித்து பரிசில்களையும் பெற்றேன்,  எனது ஆர்வத்திற்கு பயிற்சி ஆசிரியர் கவிதா மேடம் , என்னோடு பயிற்சியில் கலந்து கொண்ட செல்வலக்சுமி இருவரும் பெரும் ஆதரவாக இருந்தார்கள். 

திறன் போட்டி-2018 இல் எனது கைவேலைப் பொருட்களை நடுவர்கள் ஆய்வு செய்த போது.
திறன் போட்டியில் வெற்றி சான்றிதல் பெற்றபோது
பயிற்சியின் முடிவில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சியடைந்து  மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சினால் வழங்கப்பட்ட சான்றிதலைப் பெற்றுக் கொண்டேன். பின்னர் வீட்டில் ஒரு தையல் மிசின் ஒன்றை வாங்கி அதன் மூலம் கடைகளிலும் அருகில் வசிக்கும் மக்களிடமும் இருந்து வரும் ஆடர்களை நேர்த்தியாக தைத்து கொடுத்து வருகிறேன் , மாதம் ஒன்றிற்கு 7000/- மேல் வருமானம் கிடைக்கிறது , அத்தோடு தையல் பயிற்சியோடு கற்றுக் கொண்ட கைவேலைப்பாடு , மற்றும் அலங்கார பொருட்கள் தயாரித்து கடைகளுக்கும் , ஆன் லைனில் ஓடர்களுக்கும் கொடுத்து வருகிறேன். இதன் மூலமும் மாதம் ஒன்றிற்கு 4000முதல் 6000 ரூபாய் வரை மாதம் ஒன்றிற்கு வருமானம் கிடைக்கிறது.
திறன் போட்டி -2018 இல் நாங்கள் தைத்த ஆடைகளோடு எனது குழுவினருடன் எடுத்த படம்


எனது கை வேலை
சொகுசு தலையணை
வீட்டில் இருந்து  வீணாக பொழுது போய் கொண்டிருந்த காலம் போய் இப்போது நேரம் கிடைக்கும் நேரம் எல்லாம் எனது தொழில் திறனால் எனது வீட்டுக்கு தேவையான வருமானத்தை ஈட்ட முடிவதை நினைத்து மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் வாழ்க்கையின் பாதையை மாற்றியதில் பிரதம மந்திரியின் திறன் மேம்பாடு பயிற்சி திட்டத்திற்கு  பெரும் பங்களிப்பு இருக்கிறது. 



என்னையும் என் போன்று பயிற்சியில் கலந்து கொண்டு பயிற்சியை நிறைவு செய்த பல நூறு பயிற்சியாளர்களுக்கும்  திறன்பட பயிற்சியளித்த Skills India Foundation -Rajapalayam பயிற்சி மையத்திற்கும் மைய நிர்வாகி திரு.மணிவண்ணன் சார் அவர்களுக்கும் , பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் திருமதி. சுபா மேடம் அவர்களுக்கும் , பயிற்சி ஆசிரியார் திருமதி. கவிதா அவர்களுக்கும் என் நன்றிகளை தெரிவிக்கிறேன். 

Saturday 27 October 2018

ஈரோடு-புனிதாவின் வாழ்வில் தொழில் திறன் கல்வி ஏற்படுத்திய மாற்றம்.

என் பெயர் புனிதா, வயது -28 , நான் ஈரோடு மாவட்டம் நகரப் பகுதியின் குமாரசாமி தெருவில் வசித்து வருகிறேன். பள்ளிப் படிப்பை முடித்து லாப் டெக்னிசியன் படிப்பில் சேர்ந்து படிப்பை முடித்தேன் ஆனால் படிப்பிற்கு ஏற்ற வேலை அமையவில்லை.  

என் கணவர் கடை ஒன்றில் மெக்கானிக்காக பணி புரிந்து வருகிறார் , ஆண் , பெண் என இரு கைக் குழந்தைகளை வைத்துக் கொண்டு அன்றாட செலவுகளுக்கு அவஸ்தைப்படும் நிலையில் எனது படிப்பிற்கான வேலை தேடி எங்கு அலைந்தும் கிடைக்க வில்லை அந்த நிலையில் ஈரோடு மாவட்டம் ப்ரப் ரோட்டில்  CSI வளாகத்தில் இயங்கிவரும் ஸ்கில்ஸ் இந்தியா பவுண்டேசனில்   PMKVY பிரதம மந்திரியின் திறன் மேம்பாட்டுத்திட்டத்தின் மூலம் தொழில் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவது குறித்து தொலைக்காட்சி விளம்பரத்தில் பார்த்தேன்.

அதன் பின்னர் பயிற்சி மையம் சென்று மையத்தின் நிர்வாகி ஸ்டீபன் ராஜ் அவர்களின் வழிகாட்டுதலின் படி உதவி அழகுகலை நிபுணர் பயிற்சி வகுப்பில் சேர்ந்து 3 மாதகாலம் (290 மணி நேர பயிற்சி) பயிற்சியில் கலந்து கொண்டேன் , பயிற்சிக்காலத்தில் தொழில்முனைவோருக்கான பயிற்சி , திறன் போட்டிகள் , கலை நிகழ்வுகள் என அனைத்து நிகழ்வுகளும் சிறப்பான முறையில் நடந்தது  மறுபடியும் சில காலம் கல்லூரியில் படித்தது போன்று உணர்வு.

பயிற்சியின்  போது எனது அழகுக்கலை பயிற்சி ஆசிரியர் திருமதி.வாஹிதா பேஹம் அவர்கள் எங்கள் அனைவருக்கும் திறன்பட அனைத்து வகையான தெரப்பிகள் மற்றும் அலங்காரங்களையும் கற்றுக் கொடுத்தார். பயிற்சியின் முடிவில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சியடைந்து பின்னர் பயிற்சி வளாக மையத்தில் நடபெற்ற வேலைவாய்ப்பு தேர்வில் தெரிவாகி தற்போது  ஈரோடு நகரப் பகுதியில் இயங்கிவரும் சஹானா பியூட்டி பார்லரில் மாதம் ஒன்றிற்கு 6000/- ரூபாய் வருமானத்துடன் பணியில் இருக்கிறேன். 

என் குடும்ப சூழ்நிலையில் எனது வேலையும் வருமானமும் எனக்கு மிகப்பெரும் பங்களிப்பாகவும் என் எதிர்காலத்தில் வேலை இல்லாத சூழ்நிலை ஏற்படின் சுயமாக தொழிலை ஆரம்பித்து செய்யும் அளவிற்கு திறமை உள்ளவளாகவும் இந்த தொழிற் பயிற்சி  மாற்றியுள்ளது என்றால் மிகையில்லை.

இப்போது என்னுடைய வருமானத்தைக் கொண்டும் என் வீட்டின் அன்றாட செலவுகளை  செய்வதை எண்ணி பெருமை கொள்கிறேன். இந்த பயிற்சியினை வழங்கிய ஸ்கில்ஸ் இந்தியா பவுண்டேசன் ஈரோடு பயிற்சி மையத்திற்கும் , மைய நிர்வாகி ஸ்டீபன் ராஜ் சார் அவர்களுக்கும், பயிற்சி ஆசிரியர் வாஹிதா பேஹம் அவர்களுக்கும் , வேலை வாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் திருமதி அம்சா மேடம் அவர்களுக்கும் மத்திய அரசின்  திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.


சுயதொழில் முனைவோர் ஆன ராஜபாளையம்-கற்பகலக்சுமியின் வெற்றிக் கதை.

“ உனக்கான கனவுகளை நீயே கட்டமைக்க வேண்டும்”

திருமதி . கற்பகலக்சுமி தனக்கான கனவினை அப்படித்தான் கட்டமைத்துக் கொண்டார், தனது சுயதொழில் முனைவோரான வெற்றிக் கதை பற்றி அவர் கூறியது.

என் பெயர் கற்பகலக்சுமி,  வயது- 33 ,திருமணமானவள் , விருதுநகர் மாவட்டம் ,ராஜபாளையம் ,INTUC நகரில் வசித்து வருகிறேன். எனது கணவர் கேபிள் கான்றக்டராக பணி புரிகிறார்,  இரு பிள்ளைகள்  இருக்கிறார்கள் , 10 வது வரை படித்திருக்கிறேன்.

எனது படிப்பிற்கான வேலை எதுவும் கிடைக்காத நிலையில் ,எனது கணவரின் வருமானத்தில் எனது குடும்ப செலவுகளை  கடினமான முறையில் சமாளித்து வந்தேன்  எனக்கும் ஏதாவது தொழில் செய்ய வேண்டும் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை எப்போது இருக்கும் ,அதற்கான வாய்ப்பு இல்லாத நிலையில் வீட்டில் இருந்து சாதாரணமாக பொழுதைப் போக்கிற்கொண்டு இருந்த நிலையில்தான்  தொலைக்காட்சி விளம்பரத்தில் ராஜபாளையம் சங்கரன் கோவில் சாலையில் ஸ்கில்ஸ் இந்தியா பவுண்டேசன் அமைப்பினால் பிரதம மந்திரியின் திறன் மேம்பாட்டுத்திட்டம் செயல்படுத்தப் படுவதாக அறிந்தேன்.

பயிற்சி மையத்திற்கு சென்று  கேட்டபோது திருமதி. சுபா - பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் அவர்கள் திட்டம் குறித்தும் அதில் உள்ள பயிற்சிகள் குறித்தும் விளக்கம் அளித்தார். அவரது வழிகாட்டலின் பெயரில் நான் பெண்களுக்கான சுயதொழில் தையல் பயிற்சியினை தெரிவு செய்து 16-02-2018 அன்றுமுதல் மூன்று மாதகால பயிற்சியில் பங்கேற்றேன்.
பயிற்சி நிறைவின் போது நண்பர்களோடு எடுத்துக் கொண்ட குழு படம்.


தையல் பயிற்சி ஆசிரியர் திருமதி.கவிதா மேடம் அவர்கள் திறம்பட அனைத்து தையல் வகைகள் ,பல்வேறு விதமான ஆடைகளை வடிவமைத்து , வெட்டி, தைக்கும் அளவிற்கு பயிற்சி அளித்தார்கள் அத்துடன் பயிற்சிக் காலத்தில் யோகா பயிற்சிகள் ,கலைத்திறன் பயிற்சிகள், தையல் திறன் போட்டி என அனைத்திலும் கலந்து கொண்டு பரிசில்கலையும் சான்றிதல்களையும் பெற்றேன், என்னுடன் சேர்ந்து பயிற்சியில் கலந்து கொண்ட கவிதா மற்றும் பவித்திரா ஆகியோர் எனக்கு தனிப்பட்ட முறையிலும் தையல் கற்றலிலும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.

திறன் போட்டி -2018 இல் சிறந்த தையல் ஆடைக்கான பரிசு பெற்றது. 
பயிற்சியின் முடிவில்  நடைபெற்ற தேர்வில் தேர்ச்சியடைந்து மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சினால் வழங்கப்பட்ட தேர்ச்சிசான்றிதலையும் பெற்றுக் கொண்டேன். இப்போது சுயமாக என் வீட்டில் இருந்தபடியே கடைகளில் இருந்து ஆடர்கள் எடுத்தும் அருகில் குடியிருக்கும் மக்களும் தேடி வந்து கொடுக்கும் ஆடைகளையும் தைத்துக் கொடுத்து மாதம் ஒன்றிற்கு 7000/- ரூபாய் வரை சம்பாதித்துக் கொண்டு இருக்கிறேன்.
தொழில் பயிற்சி தேர்ச்சி சான்றிதல் பெற்றது.

என்னுடன் பயிற்சியில் கல்ந்து கொண்ட நண்பர்களோடு சேர்ந்து தையல் கடை ஒன்றை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளேன். சாதாரணமான நிலையில் வீட்டில் இருந்து பொழுதைப் போக்கி கொண்டிருந்த எனக்கு இந்த பயிற்சி மிகப் பெரும் மற்றத்தை என்னுள் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த பயிற்சியில் கலந்து கொண்டதை நினைத்து பெருமையும் ,மகிழ்ச்சியும் அடைகிறேன். என்னை நல்ல தையல் கலைஞராக ஆகிய தையல் ஆசிரியர் திருமதி கவிதா மேடம் அவர்களுக்கும்,  ஸ்கில்ஸ் இந்தியா பவுண்டேசன் ராஜபாளையம் பயிற்சிமைய நிர்வாகிகள்  திரு.மணிவண்ணன் சார் அவர்களுக்கும், திருமதி சுபா மேடம் அவர்களுக்கும் பயிற்சி மையத்திற்கும் , மத்திய அரசுக்கும் என் நன்றிகளைத் தெரிவிக்க கடமைப் பட்டுள்ளேன்.


Thursday 25 October 2018

ராஜபாளையம்-திருமதி கனகமணி- சுய தொழில் முனைவோரான வெற்றிக் கதை.

 “உங்களால் கனவு காணமுடிந்தால் அதை செய்து காட்டவும் உங்களால் முடியும்”

திருமதி கனகமணியின்  சுயதொழில் வெற்றிக் கதையின் சாரம் இதுதான். அவரது வெற்றிக் கதை குறித்து கூறியது..

என் பெயர் கனகமணி,  வயது- 31 ,விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள கிருஸ்ணாபுரம் என்னும் ஊரில் வசித்து வருகிற் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து  6 ம் வகுப்பு வரை கல்வி கற்றிருக்கிறேன். இளமையிலே திருமணம் ஆகி 2 பிள்ளைகளுக்கு அம்மா என்பதை தவிர எனக்கான அடையாளம் என்று எதுவும் இல்லாத வாழ்க்கை, கணவர் தினக் கூலி வேலை செய்பவர் அவரது வருமானத்தில் 4 பேர் கொண்ட எங்கள் குடும்பத்தின் செலவை மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் பார்த்துக் கொண்டு இருக்கிறேன் , எனக்கும் ஏதாவது சம்பாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் ,ஆனால் அதற்கான சரியான வழிகாட்டலோ, தொழிலோ இல்லாத நிலையில் இருந்து வந்தேன்.

அந்த நிலையில் கடந்த பெப்ரவரி மாதம்-2018 எங்கள்  ஊருக்கு ராஜபாளையம் சங்கரன் கோவில் வீதியில் செயல்பட்டுவரும் ஸ்கில்ஸ் இந்தியா பவுண்டேசன்  தொழில் பயிற்சி மையத்தில் இருந்து  மத்திய அரசின் பிரதம மந்திரி திறன் மேம்பாட்டு திட்டம் பற்றி எடுத்துக் கூற மையத்தின் மக்கள் பயிற்சி ஒருங்கிணைப்பு குழுவினர் வந்து இருந்தனர்.

அவர்களின் வழிகாட்டுதலுடன் மத்திய அரசின்  PMKVY திட்டத்தில் நான் சுயதொழில் தையல் பயிற்சியில் 16-02-2018 அன்று இணைந்து கொண்டேன். 380 மணி நேரம் கொண்ட 3 மாதகாலப் பயிற்சியில் தையல் ஆசிரியர் திருமதி கவிதா அவர்கள் அடிப்படைத் தையலில் இருந்து அனைத்து தையல் வகைகளையும் ,எல்லா வகையான ஆடைகள் அளவு எடுத்தல், வெட்டுதல் ,தைத்தல் ,எம்ப்ரோய்டரி என அனைத்தையும் திறன்பட கற்றுக் கொடுத்தார்.
பயிற்சியின் முடிவில் நண்பர்களோடு எடுத்துக்கொண்ட படம்.

என்னுடன் பயிற்சியில் கலந்து கொண்ட சங்கிலிவீரா , முத்துலக்சுமி நல்ல நண்பர்கள் ஆனார்கள், பயிற்சியின் போது நடைபெற்ற யோகா பயிற்சிகள் ,கலை நிகழ்ச்சிகள் ,கோலப் போட்டி , தொழில் முனைவோர் பயிற்சி என பள்ளிக் கால படிப்பை படித்து முடித்ததைப் போல ஒர் மகிழ்ச்சி. பயிற்சியின் முடிவில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சியடைந்து  மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் மூலம் வழங்கப்படும் சான்றிதலைப் பெற்றுக்கொண்டேன். 

இன்று நான் கற்றுக் கொண்ட தையல் பயிற்சியின் மூலம் வீட்டில் இருந்தே மாதம் ஒன்றிற்கு 7500 ரூபாய் வரை வருமானமாக பெற்றுவருகிறேன், எனக்கும் என் குடும்பத்தினருக்கும் தேவையான உடைகளை நானே தைத்துக் கொள்வதால் செலவுகள் குறைகிறது, என்னையும் என்னை போன்று பயிற்சியில் கலந்து கொண்ட நண்பர்களின் வாழ்கையிலும் மாற்றத்தைக் கொண்டுவந்த  பிரதம மந்திரி திறன் மேம்பாட்டுத் திட்டத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள், அத்துடன்  எனக்கு பயிற்சி அளித்த ஸ்கில்ஸ் இந்தியா ராஜபாளையம் பயிற்சி மையத்திற்கும் அதன் நிர்வாக தலைவர் மணிவண்ணன் சார்  ,ஒருங்கிணைப்பாளர் சுபா மேடம், பயிற்சி ஆசிரியர் கவிதா மேடம் ஆகியோருக்கும் நன்றிகள். 

என்னைப் போல்  ஏழ்மை நிலையில் இருக்கும்  இன்னும் பலரது வாழ்வு நிலை மாற உதவ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இராஜ பாளையம் திருமதி.ராஜகுருவின் வெற்றிக் கதை

 “உன்னால் எதையும் வெற்றிகரமாக ஆரம்பிக்க முடியாது , ஆனால் ஆரம்பிப்பது வெற்றிகரமாக முடியும்”

திருமதி .ராஜகுரு சுய தொழில் முனைவோராக மாறிய வெற்றிக் கதையினை இப்படித்தான் ஆரம்பித்தார். 

என் பெயர் ரஜகுரு ,வயது- 32 ,நான் 10 ம் வகுற்புக்கு மேல் படிக்கவில்லை , அதன் பின்னர் திருமணமாகி 2 பிள்ளைகள் என்று 4 பேர் கொண்ட குடும்பமாக வாழ்ந்து வருகிறோம். என் கணவர்  சலூன் ஒன்றில் முடி வெட்டும் வேலை செய்து கொண்டு இருக்கிறார். 2 பிள்ளைகளின் படிப்பு ,வீட்டுச் செலவு,வாடகை என எல்லாவற்றையும் அவரது மாதம் 8000/- வருமானத்தை வைத்து சமாளிக்க முடியாமல் தினம் தோறும் கவலையோடு இருந்தேன்.

என் படிப்புக்கு ஏற்ற வேலை செய்யவோ அல்லது சுயமாக ஏதும் செய்ய வாய்ப்பும் இல்லாத நிலையில்   இருந்த போதுதான் ராஜபாளையம் சங்கரன் கோயில் வீதியில்  ,லயன்ஸ் கட்டிட வளாகத்தில் இயங்கும் ஸ்கில்ஸ் இந்தியா பவுண்டேசன் அமைப்பு நடத்தும் (PMKVY) பிரதம மந்திரி திறன் மேம்பாட்டு திட்ட பெயர்பலகையை பார்த்து ,திட்டம் பற்றி  பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் திருமதி .சுபா அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.

அதன் படி கடந்த 16-02-2018 அன்று சுய வேலைக்கான தையல் பயிற்சியில் இணைந்து 3 மாதங்கள் 380 மணி நேர பயிற்சியினைக் கற்றுக் கொண்டேன். பயிற்சிக் காலத்தில் பயிற்சி ஆசிரியர் திருமதி.கவிதா அவர்களின் வழிகாட்டுதலோடு பலவகையான உடைகள் டிசைன் செய்யவும், வெட்டுவதற்கும்,தைப்பதற்கும் தெரிந்து கொண்டேன்,  அத்துடன் பயிற்சி மையத்தினால் நடத்தப்பட்ட யோகா பயிற்சி, இலவச தொழில் முனைவோர் பயிற்சி ,கலை திறன்,விளையாட்டுப் போட்டிகள் என ஒரு கல்லூரியில் படித்ததைப் போல மகிழ்வாக பயிற்சிக் காலம் முடிவடைந்தது ,என்னுடன் பயிற்சியில் கலந்து கொண்ட சக பயிற்சியாளர்கள் கணக்மணி, ரேவதி ஆகியோர் எனக்கு பயிற்சிக் காலத்தில் நல்ல நண்பர்கள் ஆனார்கள்.

பயிற்சியின் முடிவில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சியடைந்து , மத்திய அரசின்  தொழில் முனைவோர் மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சகத்தினால் வளங்கப்பட்ட சான்றிதலைப் பெற்றுக் கொண்டேன். 

குடும்பத்தில் இரு பிள்ளைகளை வைத்துக்கொண்டு  தினம்தோறும் குடும்ப செலவுக்கு கஸ்டப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் நான் கற்றுக் கொண்ட  தையல் பயிற்சியினால் எனது வீட்டில் இருந்தே மாதம் ஒன்றிற்கு 7000/- ரூபாய் வரை வருமானம் கிடைக்கின்றது.  அத்துடன் இன்னும் சிலரை இணைத்துக்கொண்டு தனியாக தையல் கடை ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளேன்.

சராசரி குடும்ப தலைவி என்ற நிலையில் இருந்து தற்போது ஒரு சுய தொழில் செய்து வருமாணம் பெறும் பெண்ணாக என் மாற்றத்தைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் , இதற்கு காரணமான மத்திய அரசின் பிரதம மந்திரி திறன் மேம்பாட்டுத் திட்டத்திற்கும் அதன் மூலம் பயிற்சியளித்த ஸ்கில்ஸ் இந்தியா பவுண்டேசன் நிறுவனத்திற்கும்,பயிற்சி மையத்தின் தலமை ஆசிரியன் திரு.மணிவண்ணன் சார் அவர்களுக்கும் , பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர்  திருமதி. சுபா மேடம் அவர்களுக்கும் ,பயிற்சி ஆசிரியர் கவிதா மேடம் அவர்களுக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

Wednesday 24 October 2018

திருநெல்வேலி ,சிவகிரி-வீரலக்சுமி வெற்றியின் கதை



என் பெயர் .வீரலக்சுமி வயது-27, நான் 12 வது வரை படித்திருக்கிறேன், எனக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கிறார்கள், நான் ,சபரிமலையபுரம் வீதி, சிவகிரி வட்டம், திருநெல்வேலி மாவட்டத்தில் வசித்து  வருகிறேன், எனது கணவர் சொந்தமாக சிறிய இனிப்பு பண்டங்கள் விற்கும் கடை ஒன்றை நடத்தி வருகிறார், அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் எங்களது குடும்பத்தின் செலவுகளை கடினமான முறையில் சமாளித்து வந்தேன்

அதிகமாக படிக்கவில்லை என்ற கவலை என்னிடம் எப்போதும் இருக்கும் படித்திருந்தால் எனது குடும்பத்திற்காக நானும் எதும் சம்பாதிக்க முடியும் என்று நினைத்துக் கொள்வேன்

இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம்-2018 எங்களது ஊருக்கு  ராஜபாளையம் சங்கரன் கோவில் வீதியில் இயங்கும் ஸ்கில்ஸ் இந்தியா பவுண்டேசன்  நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமதி. சுபா மேடம் அவர்கள் வந்திருந்தார்கள் , அவர் எனக்கு மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தினால் நடத்தப்படும் பிரதம மந்திரியின் திறன் மேம்பாட்டுத் திட்டம் குறித்தும் அதில் சேர்வதற்கான வழிகள் குறித்தும் விளக்கம் அளித்தார்

பயிற்சி மையத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய போது.

அவரது வழிகாட்டலின் பெயரில் நான் கடந்த 16-02-2018 அன்று  இந்த திட்டத்தின் மூலம் நடத்தப்பட்டுவரும் சுயவேலை தையல் பயிற்சியில் என்னை இணைத்துக் கொண்டேன்.   நாள் ஒன்றிற்கு 4 மணி நேரமாக  மொத்தம் 380 மணி  நேரம் நடத்தப் பட்ட இந்த பயிற்சியில் எனது  பயிற்சி ஆசிரியர் திருமதி கவிதா  அவர்கள் திறன் பட தையல் கலையின் அனைத்து நுட்பங்களையும்,பல்வேறு உடைகள் தைப்பதற்கும் எங்களுக்கு பயிற்சியளித்தார் அத்துடன் யோகா பயிற்சி , தொழில் முனைவோருக்கான பயிற்சி என பலவற்றைக் கற்றுக் கொண்டேன்.
பயிற்சியின் நிறைவில் நண்பர்களோடு எடுத்துக் கொண்ட குழுப்படம்




உலக சுற்றுச்சூழல் தினம் அன்று மரம் நட்டபோது.












பயிற்சியின்முடிவில் நடத்தப்பட்ட தேர்வில் தேர்ச்சியடந்து மத்திய அரசினால் வழங்கப்பட்ட  சான்றிதலைப் பெற்றுக் கொண்டேன்தற்போது எனது வீட்டில் சுயமாக தையல் மிசின் ஒன்றை வைத்து எனது ஊரில் உள்ள மக்களுக்கு உடைகள் தைத்து கொடுத்து மாதம் ஒன்றிற்கு 6000 ரூபாய் வரை சம்பாதித்து வருகிறேன். வீட்டில் இருந்து வெட்டியாக தொலைக் காட்சி முன்பு உட்கார்ந்து பொழுதைப் போக்கி கொண்டிருந்த காலம் போய் நானும் இப்பொழுது சுயமாக சம்பாதிகும் நிலையை பெருமையாக உணர்கின்றேன் எதிர்காலத்தில் தனியாக ஒரு தையல் கடை ஆரம்பித்து மேலும் சிலருக்கு வேலைவாய்ப்பு அளித்து எனது முதலீட்டைப் பெருக்க தீர்மாணித்து இருக்கிறேன்.
பயிற்சியின் நிறைவில் சான்றிதல் பெற்றுக்கொண்ட போது.

எனது குழந்தைகளுக்கு தேவையான உடைகளை  நானே தைத்துக் அவர்களுக்கு போட்டு அழகு பார்ப்பது அளவில்லா மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த திட்டத்தினை செயற்படுத்திவரும் ஸ்கில்ஸ் இந்தியா பவுண்டேசன் -ராஜபாளையம் நிறுவனத்திற்கும் அதன் ஒருங்கிணைப்பாளர்கள் ,பயிற்சி ஆசிரியர்கள் மற்றும் மத்திய அரசிற்கும் எனது நன்றிகளை தெரிவிக்கின்றேன்.

  “ வாய்ப்புகள் தானாக நடக்காது  நாம்தான் அதை உருவாக்க வேண்டும்


Million Pink Campaign (10 இலட்சம் தொழிலாளர்களுக்கான புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்.


விழிப்புணர்வுக் குழுவினர்(Skills India)
நோயற்றவாழ்வே குறைவற்ற செல்வம். ஏழையாக இருப்பதை விட மோசமானது நோயுற்ற உடலோடு காலங்களிப்பது. நோய்கள் நம்மீது வந்துவிடாதபடி இருக்க எவ்வளவோ முயற்சிகள் மருந்துகள் எடுத்து நம்மை நாம் பாதுகாத்து கொள்கின்றோம். பொதுவாகவே நம்மில் பலருக்கு ஒருவரிடம் இருந்து அடுத்தவருக்கு தொற்றக்கூடிய நோய்கள் பற்றிய விழிப்புணர்வு அதிகம் (எயிட்ஸ்,பால்வினை நோய்கள்,வைரசுகளால் பரவும் நோய்கள்) என பல்வேறு தொற்று நோய்குறித்து அறிந்தும் அதை வராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்கின்றோம்.

களப்பணியில் தன்னார்வலர்கள்.
ஆனால் தனிமனிதர் ஒவ்வொருவருடைய உடலியல் செயற்பாடுகளால் ஏற்படும் தொற்றா நோய்குறித்த விளிப்புணர்வு நம்மில் பலரிடையே இருப்பது இல்லை என்பது ஜதார்த்தம். நடுத்தர மற்றும் மேல்வகுப்பை சேர்ந்த மக்களிடையே இருக்கும் தமது உடலில் உள்ள நோய்கள் குறித்தும் தொற்றா நோய் குறித்துமான விழிப்புணர்வு அடித்தட்டு மக்களிடையே இருப்பது இல்லை என்பது உண்மை. அந்த வகையில்தான் சமீபத்திய இந்திய மருத்துவ கழகத்தின் ஆய்வு இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இலட்சம் பெண்களில் வருடத்துக்கு 30-34 பேர் வரை கர்ப்பவாய் புற்றுநோயினால் இறக்கின்றனர் என்ற செய்தியை வெளியிட்டு இருக்கின்றது. அத்துடன் தொற்றா நோய்ப்பிரிவில் பெண்களின் இறப்பு வீதத்துக்கு முதல் காரணமாக கர்ப்பவாய் புற்றுநோயும் இரண்டாவது காரணமாக மார்பக புற்று நோயும் இருப்பதாக அதிர்ச்சியூட்டும் செய்தியை வெளியிட்டு இருக்கின்றது.
சென்னை
                                                





இதன் அடிப்படையில் ஆய்வு செய்தபோது நாட்டின் பெரும்பாண்மையக இருக்கும் அடித்தட்டு மக்களிடம் இது குறித்தான விழிப்புணர்வு இன்னும் சென்று அடையாததே காரணம் எனகண்டறியப்பட்டுள்ளது. இதனடிப்படையில்தான் தமிழக அரசின் சுகாதார அமைச்சகம்(TNHSP) அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பெண்களுக்கு ஏற்படும் மார்பகபுற்றுநோய் மற்றும் கர்ப்பவாய் புற்றுநோய் குறித்த அறிகுறிகளை ஆய்வு மேற்கொள்ளக்கூடிய வசதியினை செய்திருக்கின்றது. இருந்தும் இது குறித்த மக்கள் மத்தியிலான விழிப்புணர்வு அளவு போதாத நிலையிலே இருக்கின்றது.


கோயம்பத்தூர்

                                                    

          

  













 இந்த நிலையில்தான் ஸ்கில்ஸ் இந்தியா (Skills India Foundation) தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள சாதாரண மக்களிடம் சென்றடைய கூடிய வகையிலான புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் ஒன்றை கடந்த மே மாதம் 01ம்தேதி ஏற்பாடு செய்திருந்தது. ஒவ்வொரு குடும்பத்தின் ஒரு அங்கத்தவராவது ஏதாவது ஓர் இடத்தில் தொழில் செய்பவராக இருப்பார் என்ற வகையிலும் அடத்தட்டு மக்களின் ஆதாரசக்தியாக விளங்கும் தொழிலாளர்களிடம் இருந்து இந்த நிகழ்வினை ஆரம்பிப்பது என்ற முடிவில் தொழிலாளர் தினமான மே.01 அன்று ஆரம்பிக்கப்பட்டது.


திருப்பூர்



 

                                                





மதுரை





தமிழகத்தின் இரும்புத்தொழிற்சாலை நகரான கோயம்பத்தூரில் இருந்து ஆரம்பமான இந்த சூறாவளி விழிப்புணர்வு பிரச்சாரம் கோவை,திருப்பூர்,மதுரை,திருச்சி,சென்னை போன்ற வளர்ந்த தொழில்நகரங்களில் நடைபெற்று வருகின்றது. ஸ்கில்ஸ் இந்தியா நிறுவனத்தின் பணியாளர்கள், மற்றும் தன்னார்வ பணியாளர்கள், மாணவர்கள் என பலதரப்பட்டவர்களால் முன்னெடுத்துச்செல்லப்படும் இந்த விழிப்புணர்வு பிரச்சாரமானது 28/06/2013 இன்றுவரை 340 தொழிற்சாலைகளில் 56000 தொழிலாளர்களுக்கு மேல் விழிப்புணர்வு நடத்தப்பட்டு வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கின்றது. விழிப்புணர்வு பெற்ற தொழிற்சாலைகளினதும் ,தொழிலாளர்களினதும் பாராட்டுக்களுக்கும் நன்றிகளுக்கும் மத்தியில் இந்த நிகழ்வினை சிறப்பான முறையில் நடத்திக் கொண்டு இருக்கின்றார். இதன் மாநில பிரச்சார ஒருங்கிணைப்பாளர் திரு.நா.சிறிதரன்.

தொழில்நகரங்களின் ஒவ்வொரு இடத்திலும் இந்த பிரச்சாரநிகழ்வினை ஆரம்பித்து குறைந்தது 10 இலட்சம் தொழிலாளர்களை நேரடியாக விழிப்புணர்வு அளிக்கவேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இந்த விழிப்புணர்வு பணியினை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். தொழிற்சாலைகளில் உள்ள வேலைகளுக்கு மத்தியிலும் அவர்கள் எங்களது புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்வுக்கு நேரம் ஒதுக்கி தருவது என்பது அந்த நிறுவனம் தொழிலாளர் நலன் மீது வைத்திருக்கின்ற பற்றினைக் காட்டுகின்றது.அதன் பின்னரான நேரடி விழிப்புணர்வின் போது தொழிலாளர்கள் கேட்கின்ற சந்தேகங்களும் அவர்கள் ஆர்வத்துடன் இதுபற்றி கேட்டு அறிந்து கொள்வதும் இந்த நிகழ்வை இன்றுவரை தன்னார்வ பணியாளர்களால் வெற்றிகரமாக கொண்டு செல்வதற்கு காரணமாக இருக்கின்றது.

இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தினை Pink Campaign என்று அழைபதற்கான காரணம் குறித்துக் கேட்ட போது பொதுவாக பிங் என்பது பெண்களைக் குறிக்கும் நிறம் மட்டுமல்ல பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய்க்கான ரிப்பன் பிங்க் நிறத்தில் காணப்படும் அதனால் இந்த பிரச்சாரத்தினை பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய் குறித்து கூறப்படுவதனால் இதற்கு இந்த பெயர் வைக்கப்பட்டிருப்பதாக கூறினார்.ஆனாலும் இதில் ஆண்களுக்கு புகையிலைப் பொருட்கள் மற்றும் அதிகமாக புகைப்பிடிப்பவர்களுக்கு ஏற்படும் வாய்ப்புற்று நோய் குறித்தும் இந்த விழிப்புணர்வில் தன்னார்வ பணியாளர்களால் விளக்கமளிக்கப் பட்டு வருகின்றது என தெரிவித்தார்.

இந்த பிரச்சாரம் மலைப் பகுதிகளில் வாழ்கின்ற பழங்குடியின மக்களிடமும் சென்று சேரும் வகையில் அவர்களது பகுதிகளில் நடக்கும் 100 நாள் திட்டப் பணிகளின் இடைவேளையில் இது பற்றி அவர்களுக்கு விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகின்றது. இந்த வருடத்தின் இறுதிக்குள் 10 இலட்சம் தொழிலாளர்களுக்கான விழிப்புணர்வு பிரச்சாரம் என்ற இலக்கை அடைய வேண்டிய செயற்பாடுகளை மேற்கொள்ளப்பட்டுருகின்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்வினை தங்கள் பணிபுரியும் தொழிற்சாலையிலோ அல்லது தங்களது நிர்வாகத்துக்கு உட்பட்ட தொழிற்சாலையிலோ நடத்துவதற்கு விரும்பும் நிறுவனங்கள் எம்மை தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களைப் பெறலாம்…
தொடர்புக்கு:
நா.சிறிதரன், மாநில பிரச்சார ஒருங்கிணைப்பாளர்
ஸ்கில்ஸ் இந்தியா தொண்டு நிறுவனம்
மின்னஞ்சல்:campaign.skillsindia@gmail.com 
அலைபேசி:07598273044