Monday 18 February 2019

திறன் பயிற்சியால் அழகுக்கலை நிபுணராக மிளிரும் ஈரோடு- பாக்கியலட்சுமி


திருமதி. பாக்கியலட்சுமி தன்னுடைய வெற்றிக்கதையை பகிர்ந்து கொள்கிறார். ஈரோடு, கொள்ளம்பாளையத்தை சேர்ந்த நான் B.Sc கணினி பட்டதாரி, பட்டப் படிப்பு முடிந்ததும் எனக்கு திருமணம் நடை பெற்றது, என் கணவர் தங்க நகை செய்யும் தொழில் செய்து வருகிறார், அதன் மூலம் மாதம் ரூபாய் :12000/- வருமாம் கிடைக்கிறது.

எங்களுக்கு ஒரு குழந்தை மற்றும் என் மாமியார் என என் குடும்பத்தில் மொத்தம் 4 பேர். இந்த சூழ்நிலையில் நானும் ஏதாவது வேலை செய்தால் குடும்ப வருமானத்தை அதிகரிக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது அப்பொழுது தான் ஈரோடு  CSI வளாகத்தில் உள்ள Skills India Foundation- Erode பயிற்சி மையத்தில் மத்திய அரசின் பிரதம மந்திரி திறன் மேம்பாட்டு திட்ட தொழில் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதாக பத்திரிகை விளம்பரத்தில் படித்தேன். அதன் பின்னர் பயிற்சி மையம் சென்று தொழில் பயிற்சி விபரங்களை கேட்டறிந்து ,உதவி அழகுக்கலை நிபுணர்  பயிற்சியை தேர்ந்து எடுத்தேன்.

290 மணிநேரம் கொண்ட பயிற்சியை 2.5 மாத காலம் தொடர்ச்சியாக பயிற்சிக்கு வருகை தந்து  திறம்பட அனைத்து செயல்முறை விளக்கங்களையும் தெரிந்துகொண்டேன். பயிற்சி ஆசிரியர் திருமதி. வாஹிதா பேகம் அவர்கள் எல்லோருக்கும் இலகுவாக புரிந்து கொள்ளும்படியாக செயல்முறை மற்றும் விளக்க வகுப்புகளை நடத்தினார்.

பயிற்சியின் முடிவில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சியடைந்து ,மத்திய அரசின் சான்றிதலைப் பெற்றுக் கொண்டேன் , அதன் பின்னர் பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு, வேலை கிடைத்து Assisstant Beautician ஆக பணி செய்து வருகிறேன் மாதம் ஒன்றிற்கு 10000/- வரை சம்பளம் கிடைக்கிறது. இந்த வருமானம் சொந்தமாக பார்லர் வைத்தால் மேலும் அதிகரிக்கும் என்பதை மகிழ்ச்சியுடன்  தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த தொழில் திறன் பயிற்சி என்னை மேலும் உற்சாகப்படுத்தியிருக்கிறது,  எனக்கு இந்த வாய்பை அளித்த Skills India Foundation -Erode தொழில் பயிற்சி மையத்திற்கும், பயிற்சி ஆசிரியர் மற்றும் மத்திய அரசின் PMKVY திட்டத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ராமநாதபுரம்-இன்பராஜன் வாழ்வை மேம்படுத்திய தொழில்திறன் பயிற்சி

இஞ்சினியரிங் படித்துவிட்டு நிறுவனம் ஒன்றில் குறைந்த சம்பளத்தில் பணிபுரிந்து வந்த இன்பராஜன் தொழில் திறன் பயிற்சி மூலம் சுயமாக தொழில் செய்து சாதித்து வருகிறார் அவர் வாழ்வை மேம்படுத்திய தொழில்திறன் பயிற்சி குறித்து அவர் கூறியது.


இராமநாதபுரம் மாவட்டம் பரமகுடி எனது ஊர் , இஞ்சினியரிங் படித்து முடித்துவிட்டு வேலை தேடி ஈரோடு வந்து கிடைத்த வேலை ஒன்றில் மாதம் 10,000 ரூபாய் சம்பளத்தில் பணிபுரிந்துவந்தேன். எனது தந்தை ஊரில் விவசாயம் செய்கிறார் மழையை நம்பிய விவசாயம் மாதம் 3000 முதல் 5000 ரூபாய் வரைதான் வருமானம் ஈட்ட முடியும் இந்த நிலையில் எனது வருமானம் எனது வீட்டுக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தாலும் முழுத் தேவைகளையும் பூர்த்தி செய்ய போதுமானதாக இருக்கவில்லை.

அந்த நிலையில் வேறு நல்ல வேலை ஒன்றை தேடிக் கொண்டு இருந்தேன் அப்போதுதான் பத்திரிகை விளம்பரம் ஒன்றில் வேலைவாய்ப்புடன் கூடிய மத்திய அரசின் (PMKVY) பிரதம மந்திரியின் திறன் மேம்பட்டு பயிற்சி வகுப்புகள் ஈரோடு Skills India Foundation தொழில் பயிற்சி மையத்தில் நடைபெறுவதாக கூறப்பட்டு இருந்தது.

தொழிற்பயிற்சி மையத்திற்கு சென்று CCTV Installation Technician பயிற்சிக்கு விண்ணப்பித்து ,400 மணி நேர பயிர்சியில் கலந்து கொண்டேன், நாள் ஒன்றிற்கு 8 மணிநேரமாக 2 மாதகால பயிற்சியை செயன்முறை விளக்கங்களுடன் ஆசிரியர் உமா மகேஸ்வரி அவர்கள் திறம்பட கற்றுக் கொடுத்தார்கள்.

பயிற்சியின் நிறைவில் நடத்தப்பட்ட தேர்வில் தேர்ச்சியடைந்து , மத்திய அரசின் சான்றிதலைப் பெற்றுக் கொண்டேன் , பயிற்சியின் போது அறிமுகமான நண்பர்கள் சதிஷ்குமார், விமல் ஆகியோரின் உதவியுடன் CCTV Instalation தொழிலை மேற்கொண்டு வருகிறேன் , CCTV பொருத்துவதுடன் அதற்கு தேவையான கருவிகள்  மொத்தமாக கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகிறேன் இவற்றின் மூலம் மாதம் ஒன்றிற்கு 15000 ரூபாய்க்கு குறையாமல் வருமானம் ஈட்ட முடிகிறது. இன்னும் தொழிலுக்கான இடங்கள் அதிகரிக்கும் போது மாத வருமானம் அதிகரிக்கும்.

குறைந்த சம்பளத்தில் எனது மற்றும் குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய சிரமப்பட்டு வந்த எனக்கு இந்த பயிற்சி மூலம் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. என்னை தொழில் முனைவோராகவும் மாற்றி இருக்கிறது, இந்த மாற்றத்தை ஏற்படுத்திய மத்திய அரசுக்கும், பிரதம மந்திரியின் திறன் மேம்பாட்டு பயிற்சி மைய்யத்திற்கும் , கற்றுத் தந்த ஆசிரியருக்கும் நன்றிகளை தெரிவிக்கின்றேன்.

PMKVY திறன் பயிற்சியால் அழகுகலை நிபுணர் ஆன ஈரோடு- மாலினி பிரியங்கா.


படித்த படிப்பிற்கான வேலைகிடைக்காமல் அன்றாட பொருளாதாரச் சிக்கலில் தவித்து வந்த ஈரோடு மாவட்டம், கொல்லம்பாளையத்தை சேர்ந்த மாலினி பிரியங்காவின் வாழ்வில் மற்றத்தை ஏற்படுத்திய தொழில்த்திறன் பயிற்சி குறித்து கூறியது.

இளநிலை கணிணி அறிவியல் பட்டம் பெற்ற நான் படிப்பின் பின்னர் திருமணமாகி ஒரு குழந்தையின் தாய் , எனது கணவர் மெக்கானிக்காக பணி புரிந்து வருகிறார், மாத வருமானம் 12000 ரூபாயில் விட்டு செலவுகள் மற்றும் இதர செலவுகளை மிகுந்த சிரமத்துடன் செய்து வந்தேன்.

நான் படித்து படிப்பிற்கு ஏற்ற வேலை தேடி கிடைக்காத நிலையில் வேறு ஏதேனும் தொழில் ஆரம்பிக்கலாம் என்ற நோக்கத்தில் பல்வேறு முயற்சிகள் செய்துகொண்டு இருந்தேன் அந்த நேரத்தில் பத்திரிகை விளம்பரம் ஒன்றில் ஈரோடு Skills India Foundation-Erode பயிற்சி மையத்தில் இலவச பிரதம மந்திரியின் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெறுவதாக பார்த்தேன். நேராக சென்று பயிற்சி மைய நிர்வாகி ஸ்டீபன்ராஜ் சார் அவர்களிடம்  , பயிற்சிகள் குறித்தும் பயிற்சியின் பின்னான தேர்வு குறித்தும் ,சான்றிதல் குறித்தும் தெரிந்து கொண்டேன்.

அதில் உதவி அழகுகலை நிபுணர் பயிற்சி எனக்கு பிடித்துப் போக அதற்காக  விண்ணப்பித்தேன் 2 ½  மாத காலம் (290 மணி நேரம்) பயிற்சி நடத்தப்பட்டது பயிற்சி ஆசிரியர் வாஹிதா பேகம் அவர்கள் மிகவும் திறன்பட செயன்முறை விளக்கங்களோடு நேர்த்தியாக எங்களுக்கு கற்றுத்தந்தார்கள். பயிற்சியின் போது சமீனா,பவி, அர்ச்சானா ஆகியோர் எனக்கு நல்ல தோழிகள் ஆனார்கள். பயிற்சிக் காலத்தில் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகள் ,கலைத்திறன் போட்டிகள் அனைத்திலும் ஆர்வத்தோடு கலந்துகொண்டேன்.

பயிற்சியின் முடிவில் நடத்தப்பட்ட செயன்முறை மற்றும் எழுத்துத் தேர்வில் தேர்ச்சியடந்து மத்திய அரசின் சான்றிதலைப் பெற்றுக் கொண்டேன், பயிற்சி மையத்தினால் வழங்கப்பட்ட அறிவுரையின் படி ஒரு அழகுக்கலை பார்லர் ஒன்றில் 3 மாதகாலம் பணியாற்றினேன், பின்னர் எனது வீட்டுடன் சேர்ந்த  அரை ஒன்றில் அழகுக்கலை பார்லருக்கான பொருட்கள் கொள்முதல் செய்து தற்போது சுயமாக அழகுகலை பார்லர் நடத்தி வருகிறேன் நாள் ஒன்றிற்கு 500 ரூபாய் குறைவில்லாமல் மாதம் ஒன்றிற்கு செலவுகள் போக 10000 ரூபாய்வரை வருமானம் ஈட்ட முடிகிறது. அத்துடன் திருமணம், சடங்கு போன்றவற்றிற்கான   பெண் அலங்காரம் செய்வதன் மூலம் முகூர்த்த காலங்களில் தனியாக வருமாணம் ஈட்ட முடிகின்றது. வீட்டில்  இருந்தபடியே வேலை என்பதால் என் குழந்தையையும் வீட்டு வேலைகளையும் பார்த்துக் கொள்ள முடிகிறது.

இன்று எங்கள் குடும்பத்தை நல்ல நிலையில் கொண்டு செல்ல எனது வருமானமும் பெரும் உதவியாக இருக்கிறது, இந்த மகிழ்ச்சிகரமான மாற்றங்களை என் வாழ்வில் ஏற்படுத்திய மத்திய அரசின் (PMKVY) பிரதம மந்திரி திறன் மேம்பாட்டு திட்டத்திற்கும், Skills India Foundation-Erode பயிற்சி மையத்திற்கும்  பயிற்றுவித்த ஆசிரியருக்கும் எனது நன்றிகளை தெரிவிக்கின்றேன்.


தொழில் திறன் பயிற்சியால் சாதிக்கும் ஈரோடு-சுபத்திரா


சுபத்திரா , ஈரோடு மாவட்டம், சிதம்பரம் காலணியில் வசித்துவருபவர் மத்திய அரசின் PMKVY தொழில்த்திறன் பயிற்சியால் தான் சாதித்த கதை பற்றி கூறுகிறார்.

நான் கல்லூரியில் இளநிலை பட்டம் முடித்தஇருக்கிறேன் ,திருமணம் ஆகிவிட்டத்து ,எனக்கு ஒரு குழந்தை இருக்கின்றது ,எனது கணவர் தனியார் மருத்துவனை ஒன்றில் Lab technician ஆக பணி புரிகிறார், மாதம் 10,000 ரூபாய் வருமாணம் கொண்ட எங்களது குடும்பத்திற்கு வீட்டு வாடகை , மாத செலவுகள் , குழந்தையின் படிப்பிற்கு என்று போதுமானதாக இருக்கவில்லை. வீட்டின் வருமானத்தைப் பெருக்க நானும் வேலைக்கு செல்லலாம் என்று  பல இடங்களில் வேலை தேடி அலைந்தேன், 6000 ரூபாய்க்கு மேல் சம்பளம் கிடைக்கவில்லை கிடைத்தாலும் அதிக நேரமும் தூரமும் உள்ளதாக அமைந்தது.

வீட்டில் குழந்தையை விட்டு இருவரும் வெளியில் வேலை செய்யமுடியாத சூழலில்  இருந்தேன், அந்த நேரத்தில் தான் தொலைக்காட்சி விளம்பரத்தில் Skills India Foundation –Erode பயிற்சி மையம் இலவச பிரதம மந்திரியின் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெறுவதாக பார்த்தேன். நானும் எனது தோழி பிந்துவும் இணைந்து பயிற்சி மையம் சென்று விசாரித்தோம் , பயிற்சி மைய நிர்வாகி ஸ்டீபன் ராஜ் சார் அவர்கள் , பயிற்சிகள் குறித்தும் பயிற்சியின் பின்னான தேர்வு குறித்தும் ,சான்றிதல் குறித்தும் எடுத்து கூறினார்.

இருவரும்  தையல் பயிற்சிக்கு விண்ணப்பித்தோம் 3 மாத காலம் (380 மணி நேரம்) பயிற்சி நடத்தப்பட்டது , பயிற்சி ஆசிரியர் புஸ்பம் அவர்கள் மிகவும் திறன்படவும் நேர்த்தியாகவும் எங்களுக்கு கற்றுத்தந்தார்கள். பயிற்சியின் போது சங்கீதா, ஸ்டெல்லா ஆகிய இருவர் எனக்கு நல்ல தோழிகள் ஆனார்கள்.

பயிற்சியின் முடிவில் நடத்தப்பட்ட செயன்முறை மற்றும் எழுத்துத் தேர்வில் தேர்ச்சியடந்து மத்திய அரசின் சான்றிதலைப் பெற்றுக் கொண்டேன், பயிற்சி மையத்தினால் வழங்கப்பட்ட அறிவுரையின் படி எனது பெயரில் ஒரு தையல் கடை ஒன்றை MSME இல் பதிந்து கொண்டேன், அதன் பின்னர் வங்கிக் கடன் மூலம் தையல் மிசின் ஒன்றை வாங்கி தற்போது கம்பனிகள் மூலம் வரும் work order களை செய்து கொடுத்து வருகிறேன் ,அத்துடன் அருகில் இருப்பவர்களுக்கும் தேவையான உடைகளை தைத்துக் கொடுத்து வருகிறேன் , இதன் மூலம் மாதம் ஒன்றிற்கு 10000 ரூபாய்வரை என்னால் வருமானம் ஈட்ட முடிகிறது. அத்துடன் வீட்டில்  இருந்தபடியே வேலை என்பதால் என் குழந்தையையும் வீட்டு வேலைகளையும் பார்த்துக் கொள்ள முடிகிறது.

எனது வருமானமும் சேர்த்து இன்று எங்கள் குடும்பத்தை நல்ல நிலையில் கொண்டு செல்ல முடிகிறது, இந்த மகிழ்ச்சிகரமான மாற்றங்களை என் வாழ்வில் ஏற்படுத்திய மத்திய அரசின் (PMKVY) பிரதம மந்திரி திறன் மேம்பாட்டு திட்டத்திற்கும், Skills India Foundation-Erode பயிற்சி மையத்திற்கும்  பயிற்றுவித்த ஆசிரியருக்கும் எனது நன்றிகளை தெரிவிக்கின்றேன்.