Tuesday 11 December 2018

முன்னேற்றத்திற்கு வழிவகுத்துக் கொண்ட வளையப்பட்டி உமாராணி


என்னுடைய குடும்பத்தில் மொத்தம் ஐந்து பேர், தந்தை டிரைவர் ஆக பணியாற்றுகிறார் அதன் மூலம் மாத வருமாணமாக 6000/ கிடைக்கும். 12ஆம் வகுப்பு வரை படிதுள்ள நான் குடும்ப சூழ்நிலை காரணமாக உயர் கல்வி படிக்க முடியவில்லை அதனால் அருகில் உள்ள ஜவுளிக் கடையில் பணிபுரிந்து வந்தேன் அதிலும் சொற்ப வருமாணம் தான் கிடைத்தது மேலும் என்னுடைய முனேற்றம் என்பது சிறிதும் இல்லை. அதனால் வேறு ஏதேனும் படிக்க வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

அந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் Skills India Foundation-Kumbakonam பயிற்சி மையத்தில் பிரதம மந்திரியின் (PMKVY) திறன் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் குறுகிய கால தொழில் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதாக எங்கள் ஊரில் உள்ள விளம்பர சுவரொட்டியில் பார்த்தேன்.அவர்களைத் தொடர்புகொண்டு பயிற்சி மையத்திற்கு சென்று  விபரங்கள் அனைத்தும் கேட்டு அறிந்து கொண்டேன்.

பயிற்சி மைய நிர்வாகி திருமதி-சரண்யா மேடம் அவர்களின் வழிகாட்டலில் எனது கல்வித் தகுதிற்கு ஏற்றால்போல் Retail Sales Associate பயிற்சியை தேர்வு செய்து படித்து வந்தேன், எங்கள் எனது பயிற்சி ஆசிரியர் திருமதி. காயத்திரி அவர்கள் சிறப்பான முறையில் எங்களுக்கு வகுப்புகளை நடத்தினார்,  வியாபாரத் துறை சார்ந்த படிப்பு என்பதால் பல கடைகள் அழைத்து சென்று செயன்முறை பயிற்சி அளித்தனர்  320 மணி நேரம் கொண்ட பயிற்சியானது 3 மாதகாலம் தொடர்ச்சியாக சென்று கற்று வந்தேன்.

பயிசியின் முடிவில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சியடைந்து மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சும் , இந்திய ஹெல்த் கேர் செக்டார் ஸ்கில் கவுண்சிலும் வழங்கும் சான்றிதலைப் பெற்றுக் கொண்டேன்.  அதன் பின்னர்  பயிற்சி மையத்தின் வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் திரு .ராமநாதன் சார் அவர்கள்  எனக்கு கும்பகோணத்தில்  உள்ள டிப்பார்ட்மெண்ட் ஸ்டோரில் computer Operater ஆக பணி புரிந்து வருகிறேன்.

மாதம் ஒன்றிற்கு 7000/- வருமானத்தில் என் குடும்பத்தினருக்கு என்னாலான பொருளாதார உதவியை செய்யக் கூடிய நிலையில் இருக்கிறேன். இந்த மற்றமும் எனது வேலையும் PMKVY தொழில் திறன் பயிற்சியினால் எனக்கு கிடைத்த மிகப் பெரும் வாய்ப்பு என்றால் மிகையாகாது.

என்னையும் என் போன்று பயிற்சியில் கலந்து கொண்டு இன்று பணி புரிந்து வருகின்ற பல ஏழை மாணவர்களின் வாழ்வை மாற்றிய மத்திய அரசின் PMKVY திட்டத்திற்கும் , பயிற்சி வழங்கிய Skills India Foundation Kumbakonam பயிற்சி மையத்திற்கும் எனது பயிற்சி ஆசிரியருக்கும் எனது நன்றிகள்

Wednesday 5 December 2018

தொழில் திறன் கல்வியால் வாழ்க்கையின் வெற்றி படிக்கட்டுகளில் அடி எடுத்து வைத்திருக்கும் ஈரோடு- திருமதி . துளசிமணி

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கு இல்லை என்பதை ஒத்துக்கொள்என்ற வரிகளை நிருபித்துக் காட்டியிருக்கிறார் தொழில் திறன் கல்வியால் வாழ்க்கையின் வெற்றி படிக்கட்டுகளில் அடி எடுத்து வைத்திருக்கும் ஈரோடு- திருமதி . துளசிமணி

 என் பெயர் துளசிமணி, என்கணவர் மற்றும் நான் மட்டும் உள்ள என் குடும்பத்தில். கணவர் சொந்தமாக சிறு தொழில் ஒன்றை செய்து வருகிறார், அவர் வேலைக்கு சென்ற பின் எனது ஓய்வு நேரத்தில் சிறிய அளவில் அழகு சாதன கைவினைப் பொருட்கள் செய்து விற்பனை செய்வதன் மூலம் சிறிய அளவில் வருமாணம் ஈட்டி வந்தேன். ஆனால் அந்த வருமாணம் என்னுடைய சுய முன்னேற்றத்திற்கு போதுமானதாக இல்லை.

டிப்பளமோ படித்துள்ள எனது படிப்பிற்கான வேலையும் தேடி எங்கு அலைந்தும் கிடைக்க வில்லை அந்த நிலையில் ஈரோடு மாவட்டம் ப்ரப் ரோட்டில்  CSI வளாகத்தில் இயங்கிவரும் ஸ்கில்ஸ் இந்தியா பவுண்டேசனில்   PMKVY பிரதம மந்திரியின் திறன் மேம்பாட்டுத்திட்டத்தின் மூலம் தொழில் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவது குறித்து தொலைக்காட்சி விளம்பரத்தில் பார்த்தேன்.

அதன் பின்னர் பயிற்சி மையம் சென்று மையத்தின் நிர்வாகி ஸ்டீபன் ராஜ் அவர்களின் வழிகாட்டுதலின் படி உதவி அழகுகலை நிபுணர் பயிற்சி வகுப்பில் சேர்ந்து 3 மாதகாலம் (290 மணி நேர பயிற்சி) பயிற்சியில் கலந்து கொண்டேன் , பயிற்சிக்காலத்தில் தொழில்முனைவோருக்கான பயிற்சி , திறன் போட்டிகள் , கலை நிகழ்வுகள் என அனைத்து நிகழ்வுகளும் சிறப்பான முறையில் நடந்தது  மறுபடியும் சில காலம் கல்லூரியில் படித்தது போன்று உணர்வு.

பயிற்சியின்  போது எனது அழகுக்கலை பயிற்சி ஆசிரியர் திருமதி.வாஹிதா பேஹம் அவர்கள் எங்கள் அனைவருக்கும் திறன்பட அனைத்து வகையான தெரப்பிகள் மற்றும் அலங்காரங்களையும் கற்றுக் கொடுத்தார். பயிற்சியின் முடிவில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சியடைந்து பின்னர் பயிற்சி வளாக மையத்தில் நடபெற்ற வேலைவாய்ப்பு தேர்வில் தெரிவாகி தற்போது  ஈரோடு நகரப் பகுதியில் இயங்கிவரும் பியூட்டி பார்லரில் மாதம் ஒன்றிற்கு 6000/- ரூபாய் வருமானத்துடன் பணியில் இருக்கிறேன். அது மட்டுமல்லாமல் பிரைடல் மேக்கப் ,மெஹந்தி போன்ற வெளி வேலைகளுக்கும் சென்று சம்பாத்தியம் செய்ய முடிகிறது. இதன் மூலம் என்னுடைய தன்னம்பிக்கையும் அதிகரித்துள்ளது.

என் குடும்ப சூழ்நிலையில் எனது வேலையும் வருமானமும் எனக்கு மிகப்பெரும் பங்களிப்பாகவும் என் எதிர்காலத்தில் வேலை இல்லாத சூழ்நிலை ஏற்படின் சுயமாக தொழிலை ஆரம்பித்து செய்யும் அளவிற்கு திறமை உள்ளவளாகவும் இந்த தொழிற் பயிற்சி  மாற்றியுள்ளது என்றால் மிகையில்லை.


இந்த பயிற்சியினை வழங்கிய ஸ்கில்ஸ் இந்தியா பவுண்டேசன் ஈரோடு பயிற்சி மையத்திற்கும் , மைய நிர்வாகி ஸ்டீபன் ராஜ் சார் அவர்களுக்கும், பயிற்சி ஆசிரியர் வாஹிதா பேஹம் அவர்களுக்கும் , வேலை வாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் திருமதி அம்சா மேடம் அவர்களுக்கும் மத்திய அரசின்  திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

Tuesday 4 December 2018

தொழில் திறன் கல்வியால் வாழ்க்கையில் சாதித்த – கரிசல்குளம் ஜெயா


என் பெயர் ஜெயா 4, பாண்டியன் வீதி, விழாங்குடி, மதுரை என்ற முகவரி யில் வசித்து வருகிறேன். நான், என்கணவர் மற்றும் இரண்டு குழந்தைகள் என நான்கு பேர் கொண்டது என் குடும்பம். கணவர் சொந்தமாக சிறு தொழில் ஒன்றை செய்து வருகிறார், அவரின் வருமானத்தில் தான் எங்களது குடும்பம் நடத்தினோம்.


    12ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த எனக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை அதனால் நான் வீட்டு வேலையை முடித்துவிட்டு வீட்டில் பொழுதை களித்துக் கொண்டிருந்தேன், என்னுடைய வாழ் நாள் இப்படியே கழிந்து விடுமோ என்ற மனஅழுத்ததில் இருந்தேன். அப்பொழுது தான் என் வாழ்வில் வசந்தம் என்னுடைய பழைய பள்ளி தோழி மூலம் வந்தது.

 என்னுடைய தோழி Skills India Foundation KoodalNagar  பயிற்சி மையத்தில் பிரதம மந்திரியின்(PMKVY) திறன் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் குறுகிய கால தையல் தொழில் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதாகவும் தான் கற்றுக் கொண்டதாகவும் கூறினாள். பின்னர்  கூடல்நகர், சொக்கலிங்கா வீதியில்  உள்ள  Skills India Foundation Koodal Nagar    பயிற்சி  மையத்திற்கு சென்று விபரங்கள்   அனைத்தும் கேட்டு அறிந்து கொண்டேன்.

      திட்டம் குறித்து பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் ஜெனட்மேடம்அவர்கள் எடுத்துக்கூறினார்கள்,அவரது வழிகாட்டுதலின் படி சுயதொழில் தையல் பயிற்சி வகுப்பில் சேர்ந்து கொண்டேன்.380 மணி நேரம் (3 மாதகால ) பயிற்சியில் தையல் பயிற்சி ஆசிரியர் திருமதி .ரீடாமேரி மேடம் அவர்கள்  தையல் வகைகள், பல்வேறுஆடைகள் வடிவமைத்தல் , எம்ப்ராய்டரி வேலை, அனைத்து வகையான ஆடைகள் அளவெடுத்து , வெட்டிதைப்பது என பல சுவாரசியமாக தையல் பயிற்சி நடந்தது.

பயிற்சியின் முடிவில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சியடைந்து  மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சினால் வழங்கப்பட்ட சான்றிதலைப் பெற்றுக் கொண்டேன். தற்பொழுது ஒரு ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவணத்தில் தயல் கலைஞராக பணியாற்றுகிறேன். இதன் மூலம் மாத வருமாணமாக மாதம் 6000/- சம்பாதிகிறேன்இதனால் எனது குடும்ப வருமாணம்அதிகரித்துள்ளது. மற்றும் என்னுடைய தன்னம்பிக்கையும் அதிகரித்துள்ளது.

என்னையும் என் போன்று பயிற்சியில் கலந்து கொண்டு பயிற்சியை நிறைவு செய்த பல பயிற்சியாளர்களுக்கும் திறன்பட பயிற்சியளித்த பிரதம மந்திரியின் (PMKVY) திறன் மேம்பாட்டு திட்டத்திற்கும், Skills India Foundation –Koodal Nagar பயிற்சி மையத்திற்கும் மைய நிர்வாகி  ஜெனட்மேடம் அவர்களுக்கும் , பயிற்சி ஆசிரியார் திருமதி. ரீடா அவர்களுக்கும் என் நன்றிகளை தெரிவிக்கிறேன்.


தொழில் திறன் கல்வியால் தயக்கதை தவிடு பொடியாக்கிய – கூடல் நகர் செல்வி


என் பெயர் செல்வி , செல்லயா வீதி, கூடல் நகர், மதுரை என்ற முகவரியில் வசித்து வருகிறேன். நான், என் கணவர் மற்றும் இரண்டு குழந்தைகள் என நான்கு பேர் கொண்டது என் குடும்பம்

கணவர் மின்சார வாரியத்தில் ஊழியராக இருந்து ஓய்வு பெற்றவர், அவரின் ஓய்வூதியத்தில் தான் எங்களது குடும்பம் நடத்தினோம் 11  ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த எனக்கு எதிலும் ஒரு தயக்கம் இருக்கும் அதனால் நான் வீட்டை விட்டு வெளியே செல்லவதையே தவிர்ப்பேன். இந்த நிலையில் தான் ரோஸி என்பவர் மூலம் Skills India Foundation-Koodal Nagar பயிற்சி  மையத்தில் பிரதம மந்திரியின்(PMKVY) திறன் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் குறுகியகால தையல் தொழில் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதாக கூறினார்.

பின்னர்  கூடல் நகர்,  சொக்கலிங்கா வீதியில் உள்ள Skills India Foundation Koodal Nagar பயிற்சி மையத்திற்கு சென்று  விபரங்கள் அனைத்தும் கேட்டு அறிந்து கொண்டேன். திட்டம் குறித்து பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் ஜெனட்மேடம் அவர்கள் எடுத்துக்கூறினார்கள், அவரது வழிகாட்டுதலின் படி சுயதொழில் தையல் பயிற்சி வகுப்பில் சேர்ந்து கொண்டேன். 380 மணி நேரம் (3 மாதகால ) பயிற்சியில் தையல் பயிற்சி ஆசிரியர் திருமதி .ரீடாமேரி மேடம் அவர்கள்  தையல் வகைகள், பல்வேறுஆடைகள் வடிவமைத்தல் , எம்ப்ராய்டரி வேலை, அனைத்து வகையான ஆடைகள் அளவெடுத்து , வெட்டிதைப்பது என பல சுவாரசியமாக தையல்  பயிற்சி நடந்தது.

பயிற்சியின் முடிவில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சியடைந்து  மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சினால் வழங்கப்பட்ட சான்றிதலைப் பெற்றுக் கொண்டேன். தற்பொழுது ஒரு ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தையல் கலைஞராக பணியாற்றுகிறேன். இதன் மூலம் மாத வருமானமாக மாதம் 6000/- சம்பாதிகிறேன்.  இதனால் எனது குடும்ப சூழலில் சற்று முன்னேற்றமான பாதை காணப்படுகிறது. மற்றும் எந்த வித தயக்கமும் இன்றி என்னால் வெளியில் சென்று வர முடிகிறது.

என்னையும் என் போன்று பயிற்சியில் கலந்து கொண்டு பயிற்சியை நிறைவு செய்த பல பயிற்சியாளர்களுக்கும் திறன்பட பயிற்சியளித்த பிரதம மந்திரியின் (PMKVY) திறன் மேம்பாட்டு திட்டத்திற்கும், Skills India Foundation –கூடல் நகர் பயிற்சி மையத்திற்கும் மைய நிர்வாகி  ஜெனட்மேடம் அவர்களுக்கும் , பயிற்சி ஆசிரியார்திருமதி. ரீடா அவர்களுக்கும் என் நன்றிகளை தெரிவிக்கிறேன்.