Friday 22 March 2019

தொழில் கல்வியின் மூலம் வாழ்வில் வெற்றி பெற்ற பெண் முத்துலட்சுமி



திருமதி. முத்துலட்சுமி தன்னுடைய வெற்றிக்கதையை விவரிக்கிறார், 9 ஆம் வகுப்பு வரைப் படித்துள்ள நான் மதுரை மணிநகர் என்ற பகுதியில் வசித்து வருகிறேன், திருமணமாகி கணவர் கை விட்ட நிலையில் என்னுடைய மகனுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறேன், மகனின் படிப்பு மற்றும் அன்றாட குடும்பச் செலவுகளைச் சமாளிக்க பெரிதும் சிறமபட்டேன் அதே சமயம் பெற்றோருக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை, 

அந்தச் சூழ்நிலையில் தான் Skills India Foundation KoodalNagar பயிற்சி பயிற்சி மையத்தில் பிரதம மந்திரியின்(PMKVY) திறன் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் குறுகிய கால தையல் தொழில் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதாகவும் தான் கற்றுக் கொண்டதாகவும் என் தோழி கூறினாள்.பின்னர்  கூடல்நகர், சொக்கலிங்கா வீதியில்  உள்ள SkillsIndiaFoundation KoodalNagarபயிற்சி மையத்திற்கு சென்று  விபரங்கள் அனைத்தும் கேட்டு அறிந்து கொண்டேன்.

திட்டம் குறித்து பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் ஜெனட் மேடம் அவர்கள் எடுத்துக்கூறினார்கள்,அவரது வழிகாட்டுதலின் படி சுயதொழில் தையல் பயிற்சி வகுப்பில் சேர்ந்து கொண்டேன்.380 மணி நேரம் (3 மாதகால ) பயிற்சியில் தையல் பயிற்சி ஆசிரியர் திருமதி .ரீடாமேரி மேடம் அவர்கள்  தையல் வகைகள், பல்வேறுஆடைகள் வடிவமைத்தல் , எம்ப்ராய்டரி வேலை, அனைத்து வகையான ஆடைகள் அளவெடுத்து , வெட்டிதைப்பது என பல சுவாரசியமாக தையல் பயிற்சி நடந்தது.

பயிற்சியின் முடிவில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சியடைந்து  மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சினால் வழங்கப்பட்ட சான்றிதழைப் பெற்றுக் கொண்டேன். தற்பொழுது ஒரு ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவணத்தில் தயல் கலைஞராக பணியாற்றுகிறேன். இதன் மூலம் மாத வருமானமாக மாதம் 6000/- சம்பாதிகிறேன்.  இதனால் எனது குடும்ப வருமானம் அதிகரித்துள்ளது. மற்றும் என்னுடைய தன்னம்பிக்கையும் அதிகரித்துள்ளது.

என்னையும் என் போன்று பயிற்சியில் கலந்து கொண்டு பயிற்சியை நிறைவு செய்த பல பயிற்சியாளர்களுக்கும் திறன்பட பயிற்சியளித்த பிரதம மந்திரியின் (PMKVY) திறன் மேம்பாட்டு திட்டத்திற்கும், Skills India Foundation –கூடல் நகர் பயிற்சி மையத்திற்கும் மைய நிர்வாகி  ஜெனட்மேடம் அவர்களுக்கும் , பயிற்சி ஆசிரியார் திருமதி. ரீடா அவர்களுக்கும் என் நன்றிகளை தெரிவிக்கிறேன்.




தொழில் திறன் பயிற்சி மூலம் சாதித்த தாளவாடி திருமதி.மகேஷின் வெற்றிக்கதை



திருமதி.மகேஷ் தன் வெற்றிக்கதையை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்,
நான் 8 ஆம் வகுப்பு வரைப் படித்துள்ளேன், நான் 7/165, ஒசூர் ரோடு, தாளவாடி என்ற பகுதியில் வசித்து வருகிறேன், எனக்குத் திருமணமாகி ஒரு  பெண் குழந்தை உள்ளது, கணவர் மின்சாரத் தொழிலாளி யாக வேலை செய்கிறார், அவரின் மாத வருமனம் ரூபாய் 12000/ வீட்டில் தொலைக்காட்சியைப் பார்த்துப் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்த எனக்கு ஏதாவது கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்து வந்தது, அதற்கான வழிமுறைகள் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தேன், 

அப்பொழுது தான் என் பக்கத்து வீட்டுத் தோழியின் மூலம் Skills India Foundation- Thalavadi பயிற்சி மையத்தில் பிரதம மந்திரியின் (PMKVY) திறன் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் குறுகிய கால தையல் தொழில் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதாக தெரிந்து கொண்டேன். பின்னர்  தாளவாடி ஓசூர் ரோட்டில் உள்ள Skills India Foundation- Thalavadi பயிற்சி மையத்திற்கு சென்று  விபரங்கள் அனைத்தும் கேட்டு அறிந்து கொண்டேன்.

திட்டம் குறித்து பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் திரு.பொன்னுசாமி சார் அவர்கள் எடுத்துக்கூறினார்கள், அவரது வழிகாட்டுதலின் படி சுயதொழில் தையல் பயிற்சி வகுப்பில் சேர்ந்து கொண்டேன். 380 மணி நேரம் (3 மாத கால ) பயிற்சியில் தையல் பயிற்சி ஆசிரியர் திருமதி .சுதா மேடம் அவர்கள்  தையல் வகைகள், பல்வேறு ஆடைகள் வடிவமைத்தல் , எம்ப்ராய்டரி வேலை, அனைத்து வகையான ஆடைகள் அளவெடுத்து , வெட்டி தைப்பது என பல சுவாரசியமாக தையல் பயிற்சி நடந்தது.

பயிற்சியின் முடிவில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சியடைந்து  மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சினால் வழங்கப்பட்ட சான்றிதழைப் பெற்றுக் கொண்டேன். பின்னர் வீட்டில் ஒரு தையல் மிசின் ஒன்றை வாங்கி தைக்க ஆரம்பித்தேன். இப்பொழுது அருகில் வசிக்கும் மக்களிடமும் இருந்து வரும் ஆடர்களை நேர்த்தியாக தைத்து கொடுத்து வருகிறேன் , மாதம் ஒன்றிற்கு 7600/- மேல் வருமானம் கிடைக்கிறது, இதன் மூலம் என்னுடைய குடும்ப வருமானம் அதிகரித்துள்ளது.  இப்பொழுது என் குடும்பம் மகிழ்ச்சியாக உள்ளது. இதன் மூலம் என்னுடைய தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது.

என்னையும் என் போன்று பயிற்சியில் கலந்து கொண்டு பயிற்சியை நிறைவு செய்த பல பயிற்சியாளர்களுக்கும்  திறன்பட பயிற்சியளித்த பிரதம மந்திரியின் (PMKVY) திறன் மேம்பாட்டு திட்டத்திற்கும், Skills India Foundation - Thalavadi பயிற்சி மையத்திற்கும் மைய நிர்வாகி திரு.பொன்னுசமி சார் அவர்களுக்கும் , பயிற்சி ஆசிரியார் திருமதி. சுதா அவர்களுக்கும் என் நன்றிகளை தெரிவிக்கிறேன். 

Thursday 21 March 2019

டெய்லராக இருக்கும் திருமதி. மகேஸ்வரி யின் வெற்றிக்கதை




தொழில் திறன் கல்வி கற்று டெய்லராக வேலை செய்து கொண்டு இருக்கும் திருமதி. மகேஸ்வரி தனக்குக் கிடைத்த வெகுமதியயை விவரிக்கிறார்.

கௌதமேஸ்வரர் வடக்கு நாராயண வீதி, தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த நான் 12 ஆம்வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளேன்.இதனால் சரியான வேலையும் கிடைக்கவில்லை. கணவர் பிரிண்டிங் பிரஸ்ஸில் 8000/- சம்பளத்தில் வேலை செய்து வருகிறார் அந்த வருமானமே நான்கு பேர் கொண்ட எங்கள் குடும்பத்திற்கு உணவிற்கும் இதர செலவினங்களுக்கும் ஆதாரம். அப்பொழுதுதான் நாம் மேலே ஏதாவது தொழில் கல்வி படிக்க வேண்டும் என்று தீவிரமாக முயற்சி செய்து கொண்டிருந்தேன்.

அந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் Skills India Foundation-Kumbakonam பயிற்சி மையத்தில் பிரதம மந்திரியின் (PMKVY) திறன் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் குறுகிய கால தொழில் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதாக எங்கள் உள் ஊரில் உள்ள டிவி யில் விளம்பரம் பார்த்தேன்.அவர்களைத் தொடர்புகொண்டு பயிற்சி மையத்திற்கு சென்று  விபரங்கள் அனைத்தும் கேட்டு அறிந்து கொண்டேன்.

பயிற்சி மைய நிர்வாகி திருமதி-சரண்யா மேடம் அவர்களின் வழிகாட்டலில் எனது கல்வித் தகுதிற்கு ஏற்றால்போல் Self Employed Tailor சுயதொழில் தையல் பயிற்சி வகுப்பில் சேர்ந்து கொண்டேன்.380 மணி நேரம் (3 மாதகால ) பயிற்சியில் தையல் பயிற்சி ஆசிரியர் திருமதி.நிர்மலாதேவி மேடம் அவர்கள்  தையல் வகைகள், பல்வேறுஆடைகள் வடிவமைத்தல் , எம்ப்ராய்டரி வேலை, அனைத்து வகையான ஆடைகள் அளவெடுத்து , வெட்டிதைப்பது என பல சுவாரசியமாக தையல் பயிற்சி நடந்தது.

பயிற்சியின் முடிவில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சியடைந்து  மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சினால் வழங்கப்பட்ட சான்றிதலைப் பெற்றுக் கொண்டேன். பின்னர் வீட்டில் ஒரு தையல்மிசின் ஒன்றை வாங்கி தைக்க ஆரம்பித்தேன். இப்பொழுது அருகில் வசிக்கும் மக்களிடமும் இருந்து வரும்ஆடர்களை நேர்த்தியாக தைத்து கொடுத்து வருகிறேன் , மாதம் ஒன்றிற்கு 9000/மேல் வருமானம் கிடைக்கிறது,இதன் மூலம் என்னுடைய குடும்ப வருமானம் அதிகரித்துள்ளது.  இப்பொழுது என் குடும்பம் மகிழ்ச்சியாகஉள்ளது.

என்னையும் என் போன்று பயிற்சியில் கலந்து கொண்டு இன்று பணி புரிந்து வருகின்ற பல ஏழை மாணவர்களின் வாழ்வை மாற்றிய மத்திய அரசின் PMKVY திட்டத்திற்கும் , பயிற்சி வழங்கிய Skills India Foundation Kumbakonam பயிற்சி மையத்திற்கும் எனது பயிற்சி ஆசிரியருக்கும் எனது நன்றிகள்


மைசூர்-ஹேமாவதியின் வெற்றிக்கதை



திருமதி. ஹேமாவதி தனக்குக் கிடைத்த வெற்றியை பகிர்ந்து கொள்கிறார். கர்நாடக மாநிலம், மைசூர், சங்கீதா கார்னர் பகுதியில் வசித்து வரும் நான் B.Sc Computer Science படித்துள்ளேன்.எனக்கு திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தை உள்ளான், கணவர் தனியார் நிறுவணத்தில் துணை மேலாளர் ஆக பணியாற்றுகிறார், பட்டப் படிப்பு படித்துள்ள எனக்கு ஏதாவது வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தது.

இந்த சூழ்நிலையில் Skills India Foundation- KAMysore பயிற்சி மையத்தில் மத்திய அரசின் பிரதமர் திறன் மேம்பாட்டு திட்ட தொழில் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதாக தன்னுடன் கல்லூரியில் படித்த தோழி திருமதி. சசிகலா மூலம் தெரிந்து கொண்டேன் அதன் பின்னர் பயிற்சி மையம் சென்று தொழில் பயிற்சி விபரங்களை கேட்டறிந்து , Domestic Data entry Operator பயிற்சியை தேர்ந்து எடுத்தேன்.

440 மணிநேரம் கொண்ட பயிற்சியை 4 மாத காலம் தொடர்ச்சியாக பயிற்சிக்கு வருகை தந்து  திறம்பட அனைத்து செயல்முறை விளக்கங்களையும் தெரிந்துகொண்டேன். பயிற்சி ஆசிரியர் திருமதி. அம்பிகா அவர்கள் எல்லோருக்கும் எளிதாக புரிந்து கொள்ளும்படியாக செயல்முறை மற்றும் விளக்க வகுப்புகளை நடத்தினார். 

பயிற்சியின் போது நடை பெற்ற யோக தினம், விளையாட்டு விழா,ஆகியவற்றில் கலந்து கொண்டு பல பரிசுகளையும் பெற்றுள்ளேன் பயிற்சியின் முடிவில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சியடைந்து ,மத்திய அரசின் சான்றிதலைப் பெற்றுக் கொண்டேன் ,அதன் பின்னர் பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு, வேலை கிடைத்து Data entry Operator ஆக பணியாற்றி வருகிறேன்

இந்த தொழில் திறன் பயிற்சி என்னை மேலும் உற்சாகப்படுத்தியிருக்கிறது,  எனக்கு இந்த வாய்பை அளித்த Skills India Foundation -KAMysore தொழில் பயிற்சி மையத்திற்கும், பயிற்சி ஆசிரியர் மற்றும் மத்திய அரசின் PMKVY திட்டத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.