சமீபத்தில் படித்த சுற்றுப் புறச் சூழலில் ஏற்படும் மாற்றம் தொடர்பான ஒரு ஆய்வுக்கட்டுரை சிறப்பான எடுத்துக்காட்டுகளுடன் கொடுக்கப்பட்டிருக்கின்றது.. உங்களின் பார்வைக்காக..
சுற்றுப்புற சூழலையும் மனிதனின் வாழ்க்கையையும் தட்ப வெட்ப நிலை
மாற்றமும், புவி வெப்பமடைதலும் பாதிக்கின்றன.வெப்பநிலையை பதிவுசெய்யும்
கருவிகள் கொண்டு தட்பவெட்ப நிலை மாற்றத்தை கணக்கீட்டு பெற்ற முடிவுகள்,
கடல் மட்டம் உயர்வதற்கும், வடதுருவத்தில் பனியளவு குறைவதற்கும் ஆதாரங்களாக
உள்ளது. IPCC நான்காம் மதிப்பீடு அறிக்கை, "உலகளாவிய சராசரி வெப்பநிலை
இருபதாம் நூற்றாண்டின் இடைக்காலம் முதல் உயர்வடைந்துள்ளது [பெரும்பாலான
இடங்களில்] என்பதற்கு காரணம் மனிதனால் அதிக அளவில் பயன் படுத்தப்படும்
பைங்குடில் வளிமங்களால் தான்." என்று தெரிவிக்கிறது. வருங்கால தட்ப வெட்ப
நிலை மாற்றங்கள் பூமியை இன்னும் வெப்பமடைய செய்யும்(அதாவது, உலகளாவிய
இடைப்பட்ட வெப்பநிலை மேல் போக்கில் சென்று கொண்டிருக்கிறது), கடல் மட்டத்தை
உயர செய்யும், தீவிர தட்பவெட்பநிலையை உண்டாக்கும் நிகழ்வுகளை அடிக்கடி
ஏற்பட செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தட்ப வெட்ப நிலை மாற்றத்தை
அடிப்படையாக கொண்டிருக்கிறது சூழல் மண்டலம். மனிதர்கள் வருங்கால தட்ப வெட்ப
நிலை மாற்றத்துக்கு ஏற்றவாறு தங்களை மாற்றி அமைத்துக்கொள்ள சிரமப்படுவர்
என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.இந்த தடப் வெட்ப மாற்றங்களால் நடை
பெறவிருக்கும் அபாயங்களை தடுக்க நிறைய நாடுகள், பைங்குடில் வளிமங்களை
குறைக்க சட்டம் கொண்டு ஆதரிக்க பொது கொள்கைகள் கொண்டுள்ளன.
மேலோட்டம்
கடந்த நூற்றாண்டில், உலக சராசரி தட்பவெட்ப நிலையில் அதாவது புவி
வெப்பமடைதலில் மேல்நோக்கிய போக்கு இருப்பதாக தட்பவெட்ப நிலை கருவிகள் பதிவு
செய்துள்ளன.ஆர்க்டிக் சுருங்குதல், ஆர்க்டிக் மீதேன்
வெளியிடுதல்,நிரந்தரமான பனிக்கட்டி பகுதிகளிலிருந்து மண்ணுக்குரிய
கார்பன்களை வெளியிடுதல் மற்றும் கடலோர வண்டல்களிலிருந்து வெளியாகும்
ஆர்க்டிக் மீதேன், கடல் மட்டம் உயர்வு ஆகிய மாற்றங்கள் காணப்பட்டு
வருகின்றன். இந்த நூற்றாண்டில் உலக சராசரி தட்ப வெப்பம் அதிகரிக்கக் கூடும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது. மழை பொழிவதிலும் மற்ற தட்ப வெட்ப
நிலைகளிலும் அதிக அளவு மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்நோக்கப்படுகிறது.உலக
அளவிலிருந்து வட்டார அளவுக்கு நமது பார்வையை திருப்பும் போது அதில்
நடக்கக்கூடிய தட்ப வெட்ப மாற்றங்களைப் பற்றி நம்மிடம் தெளிவான செய்திகள்
இல்லை. தட்ப வெட்ப மாற்றத்தின் அளவையும் தீவிரத்தையும் பொறுத்தே பூமி
வெப்பமடைய நேரிடுகிறது. இந்த தட்ப வெட்ப மாற்றங்களினால் சில மாற்றம் செய்ய
முடியாத இயற்பியல் சார்ந்த விளைவுகள் ஏற்படுகின்றன. இருபத்தியோராம்
நூற்றாண்டின் முடிவுக்கு முன்னாள் கடல் மட்ட உயரம், 18 இலிருந்து 59 cm ஆக
உயரும் என்று நம்பப்படுகிறது.(7.1 - 23.2 இன்சஸ்) அறிவியலை ஆதாரமாக கொண்டு
புரிந்து கொள்ளாததால் பனி தகடுகள் எவ்வாறு கடல் மட்டத்தை உயர்த்துகின்றன
என்பதை நம்மால் தெரிந்துகொள்ள முடிவதில்லை. வான் கோள வட்டத்தின் கவிழ்
பரப்பின் மெரிடியனல் ஓவர்டர்னிங் சிற்குலேஷன் வேகம் இந்த நூற்றாண்டுக்குள்
குறையும் என்று நம்பப்பட்டாலும், அட்லேண்டிக் மற்றும் ஐரோப்பாவில் தட்ப
வெப்பம் பூமி வெப்பமடைவதால் அதிகமாகவே இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
1-4 °C வெட்பத்தில் (1990-2000 ஆண்டு கணக்கில் பார்க்கும் போது)
கிரீன்லாந்து பனி தகடு முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு ஒரு சில
நூற்றாண்டுகளிலிருந்து ஒரு ஆயிரம் ஆண்டுக்குள் உருகக்கூடும்.இதனுடன் மேற்கு
அண்டார்க்டிகா பனி தகடு லேசாக உருகிக்கொண்டு இருப்பதால் கடலின் மட்ட அளவு
4-6 மீ அல்லது அதற்கும் மேலாக உயரக்கூடும்.
தட்ப வெட்பத்தின் மாற்றத்தினால் மனிதனால் ஏற்படும் விளைவுகள் இது
தான் என்று தெளிவர சுட்டிக்காட்ட முடிவதில்லை.சில பகுதிகளும் வட்டாரங்களும்
இதனால் நன்மையை அடையும் ஒப்பது சில இடங்கள் தீமையை அதிக அளவில்
சந்திக்கின்றன.வெப்பமடைதலின் அளவு அதிகமாகும் பட்சத்தில் (2-3 °C யை விட
அதிகமாக இருக்கும் பொழுது, அதாவது 1990 அளவுகளை பொருத்து) இதனால்
ஏற்படக்கூடிய நல்ல விளைவுகளை விட தீமைகள் தான் அதிகம் ஆகின்றன. கீழ் நில
நடுக்கோடுகள் மற்றும் வளர்ச்சியடையாத பகுதிகள் இரண்டிலும் தட்ப வெட்ப நிலை
மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகள் அபாயகரமானவையாக இருக்கின்றன.மனிதனால்
உருவாக்கப்பட்ட புதிய் அமைப்புகளால் இந்த தட்ப வெட்ப நிலை மாற்றத்தினால்
ஏற்படும் விளைவுகளுக்கு தன்னை அவனால் மாற்றி அமைத்துக்கொள்ள முடிகிறது.
ஆனால் மாற்றி அமைத்துக் கொள்வதற்கான செலவை பற்றிய விவரம் இன்னும்
கண்டுபிடிக்கப்படவில்லை. அது மிகவும் அதிகமாகவே இருக்கும் என்று
நம்பப்படுகிறது. தட்ப வெட்ப நிலை மாற்றத்தினால் அநேக உயிரின வகைகள் அழிவது
மட்டுமில்லாமல் சூழல் மண்டலங்களின் வேற்றுமைத்தன்மையும்
குன்றுகிறது.உயிரியல் மற்றும் புவியியர்பியல் அமைப்புகளைக்கொண்டு
மாற்றியமைப்பது மனித அமைப்புகளை விட சுலபமானவை.
தீவிர வானிலை
தட்ப வெட்ப மாற்றங்களைப் பற்றிய வருங்கால போக்கைப்பற்றி IPCC
அறிக்கை நிறைய குறிகளை சொல்லி உள்ளது. நிலபகுதிகளில் வெப்ப அலைகளின்
எண்ணிக்கை அதிகரிக்கும் மேலும்,
* அதிக அளவில் நிலங்கள் வறட்சியை சந்திக்கும்* வெப்பமண்டல புயல்கள் அதிக அளவில் உண்டாகும்.* கடல் மட்டத்தின் அளவும் பல நிகழ்வுகளினால் அதிகரிக்கின்றது. (சுனாமியைபோல் அல்லாத நிகழ்வு)
தீவிர வானிலையை கொண்டு வரும் சூறாவளியின் ஆற்றல், சூறாவளி தீவிரத்தின்
ஆற்றலை வீணாக்கும் குரிகாட்டியையும் அதிகரிக்கிறது. கெர்ரி இமானுவேல்
சூறாவளி ஆற்றல் வீணாகுவதுக்கு வெப்பத்துடன் தொடர்பு உண்டு என்றும், புவி
வெப்பமாகுவதுடனும் தொடர்பு உண்டு என்றும் எழுதி இருக்கிறார். தற்சமயம்
நடக்கும் நிகழ்வுகளைக்கொண்டு கெர்ரியால் நடத்தப்பட்ட ஆய்வு, கடந்த சில
ஆண்டுகளில் புவி வெப்பமடைதலுக்கும் ஆற்றல் வீணாகுவதற்கும் எந்த சம்மந்தமும்
இல்லை என்று உறுதியாக கூறுகிறது. சூறாவளியை உருப்படிவமாகக் கொண்டு
செய்யப்பட்ட ஆய்வுகளும் இதே முடிவுகளை தான் தந்தன. வெப்பம் அதிகமிருக்கும்
நீரில் உருவாகும் சூறாவளிகள் ,அதிக அளவு CO2ஐ தங்களுள் அதிக அளவு
தீவிரத்தன்மையை கொண்டுள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த
மாதிரியின் மூலம் சூறாவளிகள் அடிக்கடி வரும் ஆற்றலையும் இழக்கின்றன என்றும்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும், சூறாவளியின் அளவு, வகை 4
அல்லது 5-ஐ எட்டியுள்ளது. இதன் காற்று வேகம், மோடி ஒன்றுக்கு 56 மீட்டராக
உள்ளது. 1970 களில் 20% மாக இருந்தது 1990 களில் 35% மாக உயர்ந்துள்ளது.
இருபதாம் நூற்றாண்டில் US இல சூறாவளிகளால் உண்டாகும் குளுமை 7% மாக
உயர்ந்துள்ளது. அட்லேண்டிக் மல்டி டிகேடல் ஆசிலேஷனை எதிர்த்து புவியின்
வெப்பம் இதை எவ்வளவு தூரம் பாதிக்கிறது என்பது தெளிவாக புரியவில்லை. காற்று
சாய்வளவில் அதாவது wind shearஇனால் கடல் மேற்பரப்பு வெப்பம் அதிகரித்தால்,
அதனால் சூறாவளியின் மீது சிறு பாதிப்பு இருக்கும் அல்லது பதிப்பே
இல்லாமலும் போகும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹோயோஸ்மற்றும்
குழுவினர் (2006), 1970-2004 கலீல் வகை 4 மற்றும் 5 சூறாவளிகள்
அதிகரித்ததுக்கு காரணம் கடல் மேற்பரப்பு வெப்பம் தான் காரணம் என்று ஆதாரம்
திரட்டியுள்ளனர்.
தீவிரமாகும் வானிலையினால் அதிக அபாயங்கள் நடக்க நேரிடுகிறது. இது
மக்கள் தொகை அதிகமாகுவதினால் நடக்கிறது என்றும், தட்ப வெப்ப நிலை மாற்றத்தை
விட சமுக மாற்றங்களால் தான் ஏற்படுகின்றது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
வேர்ல்ட் மீடியாராலாஜிகள் ஆர்கனைசேஷன், “வெப்பமண்டலங்களில் உண்டாகும் புயல்
தட்ப வெப்பத்துக்கு மனிதனின் செயல்கள் காரணமாக இருக்கலாம் என்று கூற எந்த
ஆதாரமும் இல்லை.”, என்று விளக்குகிறது.மேலும், “இதுவரை , ஒரு வெப்பமண்டல
புயல் கூட தட்ப வெப்ப மாற்றத்தினால் உருவாக வில்லை”, என்றும்
குறிப்பிடுகிறது.
பனிப்பாறைகள் குறைந்து மறைந்து போகுதல்
வரலாற்றில் பின்னோக்கி பார்க்கும் போது அதாவது 1550 இலிருந்து 1850
வரையான ஆண்டுக்காலத்தில் மிகவும் குளுமையான சமயத்தில் பனிப்பாறைகள்
உருவாகின. இந்த சமயத்தை குறுகிய பனிக்காலம் என்று அழைக்கலாம். 1940 ஆம்
ஆண்டு வரை உலகமெங்கும் இருந்த பனிப்பாறைகள் தட்ப வெப்பம் அதிகரிக்கும் போது
குறையத் தொடங்கின.உலகம் எங்கும் லேசாக 1950 ஆம் ஆண்டு முதல் 1980 ஆம்
ஆண்டு வரை குளிரத் தொடங்கியதால் க்லேஸியர் ரிட்ரீட் பல நிகழ்வுகளில்
குறையத்தொடங்கி இருந்தது.1980 ஆம் ஆண்டு முதல் பனிப்பாறைகள் குறைவு மிகவும்
விரைவாக நடக்கத் துவங்கியுள்ளது. இதனால் உலகிலுள்ள பல பெரும்
பனிப்பாறைகளின் இருப்பு அச்சுறுத்தப்பட்டுள்ளன.1995 ஆம் ஆண்டு முதல் இந்த
செய்முறை அதிவேகமாக நடை பெற்று வருகின்றது
.
ஆர்க்டிக் மற்றும் அண்டார்க்டிக் பகுதிகளிலுள்ள பனித்தொப்பிகள்
மற்றும் பனித்தகடுகளை விட்டுவிட்டு, உலகமெங்கும் மீதியுள்ள பனிப்பாறைகள் 19
ஆம் நூற்றாண்டு முதல் 50% குறைந்துள்ளது. தற்சமயம் பனிப்பாறைகளின் குறைவு
அன்டேஸ், அல்ப்ஸ், பைரிநீஸ், இமாலயம், ராக்கி மலைகள் மற்றும் மேற்கு
கேச்கேடுகளில் அதிக அளவில் இருக்கின்றன.
இந்த பனிப்பாறைகள் தொலைவதினால் நிலச்சரிவுகள் உண்டாகின்றன,
வெள்ளங்கள் உண்டாகின்றன, மலைமேல் இருக்கும் பனி ஏரிகள் நிரம்பி வழிகின்றன,
ஆண்டு போன்ருக்கு நதியின் நீரோட்டமும் மாற்றமடைகிறது.பனிப் பாறைகளிலிருந்து
வெளிவரும் தண்ணீரின் அளவு கோடைக்காலத்தில் பனிப்பாறைகளின் அளவிப்போலவே
குறைந்து வருகின்றன. இது உலகம் முழுவதிலும் பலப் பகுதிகளில் காணப்பட்டு
வருகின்றது. பனிப்பாறைகள் மீது சேகரிக்கப்படும் பனி மூடுதலினால் பனி
உருகுவதில்ல்லை. இதனால், அதிகமாக குளிர் இருக்கும் ஆண்டுகளில் மலைகளில்
இருக்கும் பனிப்பாறைகள் தனக்குள்ளேயே தண்ணீரை வைத்துக் கொள்கின்றன. வெப்பம்
அதிகமாகவும் காய்ந்தும் இருக்கும் ஆண்டுகளில், பனியில் இருந்து உருகி
வரும் நீரின் அளவு அதிகமாகிறது. அந்த இடத்தில் இருக்கும் குளிர் அளவும்
குறைந்தே இருக்கிறது.
மத்திய, தெற்கு, கிழக்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய ப்பகுதிகளில்
ஓடும் முக்கிய நதிகள் காய்ந்து இருக்கும் காலக்கட்டத்தில் ஹிந்து குஷ்
மற்றும் இமாலய பனிப்பாறைகளில் இருந்து உருகி வருகின்றன.அதிக அளவில்
உருகுகின்ற பனி பல ஆண்டு காலத்திற்கு நேரோட்டத்தை தருகிறது. பிறகு,
"பூமியில், மக்கள் தொகை அதிகமிருக்கும் இடங்களில் தண்ணீர் பற்றாகுறை
ஏற்படுகின்றது." இது மூலமாக இருக்கும் பனிப்பாறைகள் மறைவதினால்
ஏற்படுகின்றது. திபெத்திய மெட்டு நிலம் பணியை சேமித்து வைத்துக்கொள்வதில்
உலகிலேயே மூன்றாவது இடத்தை பிடித்து உள்ளது. இங்கு உள்ள வெப்பங்கள்
மீதியுள்ள சீனாவை விட நான்கு மடங்கு அதிகமாக விரைந்து ஏறி
வருகின்றது.பனிப்பாறைகளும் இங்கு உலகில் எங்கும் இல்லாத் அளவுக்கு அதிக
அளவில் குறையத் தொடங்கி உள்ளன.
கங்கை, இந்து நதி, பிரமபுத்திரா, யாங்க்சீ, மீகாங், சல்வீன் மற்றும்
எல்லோ போன்ற ஆசியாவின் மிகப்பெரிய ஆறுகளின் மூலமாக இருக்கின்றது இமாலய
பனிப்பாறைகள். இவை வெப்ப அதிகரிப்பினால் 2035 ஆம் ஆண்டுக்குள் மறைந்து
போகும் என்று நம்பப்படுகிறது.ஏறத்தாழ 2.4 பில்லியன் மக்கள் இமாலய நதிகளின்
வடி நிலத்தில்வாழ்ந்து வருகின்றனர். வரும் ஆண்டுகளில் இந்தியா, சீனா,
வங்காளதேசம், பாகிஸ்தான், நேபாளம் மற்றும் மியான்மரில்
வெள்ளப்பெருக்கேடுப்பும் வறட்சியும் மாறி மாறி வரும் என்று
சொல்லப்படுகிறது.இந்தியாவில் மட்டும் கங்கை 500 மில்லியன் மக்களுக்கு
குடிக்க மற்றும் வேளாண்மை செய்ய தண்ணீர் அளிக்கிறது. பருவ காலங்களுக்கு
ஏற்றவாறு பனி உருகும் போது அதிலிருந்து பெறுகின்ற அதிக நீரினால்
மேற்கிந்தியாவுக்கு அதிக வாளாண்மை உற்பத்தி கிட்டியது.
வட மேற்கு அமெரிக்கா, பிரான்ஸ் ஜோசப் லேண்ட், ஆசியா, ஆளப் மலைகள்,
பைரிநீஸ், இண்டநேசியா, ஆபிரிக்கா, தென் அமேரிக்காவில் லேசாக வப்பமடையும்
பகுதிகள் மற்றும் வெப்பமாகும் மண்டலங்களில் இருக்கும் பனிப்பாறைகள்
உருகுவதினால் 19 ஆம் நூற்றாண்டு முதல் உலகமெங்கும் வெப்ப அளவு அதிகரித்து
உள்ளது.இந்த மலைப் பனிப்பாறைகள் உருகுவதினால் வருங்காலத்தில் நீரின்
மூலங்களுக்கு என்ன செய்வோம் என்ற கவலை எழுந்துள்ளது.வட மேற்கு
அமெரிக்காவில் உள்ள 47 மேற்கு கேஸ்கேடு பனிப்பாறைகள் மறைந்துவருவதாக
கண்காணிப்பு சொல்கிறது.
No comments:
Post a Comment