சத்திய மங்கலம் மலைகிராம பள்ளிகளில் ஸ்கில்ஸ் இந்தியாவினால் மேற்கொள்ளப்பட்டுவரும் செயற்திட்டப் பணியில் மாணவர்களின் கல்வி, விளையாட்டு, உடல்நலம் மற்றும் சுகாதார செயற்பாடுகளை ஊக்குவிக்கும் செய்ல்முறைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்வில் குழந்தைகளின் உடல்நலம் மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஸ்கில்ஸ் இந்தியா பணியாற்றும் பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு அளிக்கப் பட்டது.
பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் கைகளின் செயற்பாடுகள் ஒவ்வொன்றினாலும் கைகளில் கிருமிகள் எப்படி இலகுவாக தொற்றிக் கொள்கின்றது என்றும் அதனால் நமது உடல் நலனில் ஏற்படும் பாதிப்புக்கள். கிருமிகள் நம் வயிற்றுக்குள் சென்று வயிற்றோட்டம் மற்றும் பிற நோய் தாக்கங்களை உருவாக்குகின்றது என்பதை உடன் வந்த மருத்துவ பணியாளர்கள் விளக்கினர், பின்னர் மாணவர்களுக்கு கைகளை எப்படிக் கழுவுவது என்பதை எல்லோரும் தெரிந்து கொள்ளும் படியாக மாணவர்கள் அனைவரும் வரிசையில் நிற்கவைத்து அவர்களுக்கு செயன்முறைப் பயிற்சி அளிக்கப்பட்டது.
மாணவர்கள் தங்களது கைகளை பயிற்சியாளர் சொவதற்கேற்ப கழுவுகின்றனர்.. |
சுத்தமான கைகளின் அழகை ரசிக்கும் சிறுமி. |
மாணவர்கள் பயிற்சியாளர் செய்வதைப் போன்று தாமும் செய்து கைகளைச் சுத்தமாக்கினர். இதே போல் சாப்பாட்டிற்கு முன்பாகவும் பின்பாகவும், மலசலங்கள் கழித்ததன் பிறகும் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும் என்றும் உணவு பண்டங்கள் ஏதேனும் சாப்பிடும் போது கைகள் சுத்தமாக இருக்கின்றதா என்பதை கவணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இதை ஓவொரு நாளும் வீட்டிலும் பள்ளியிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என பள்ளி ஆசிரியர்களிடம் கூறப்பட்டது.
No comments:
Post a Comment