மலையில்பட்டு எதிர்ஒலிக்கும் குழந்தைகளின் விளையாட்டுக்குரல்கள், மாலைப்
பொழுதை தாண்டியும் ஒலிக்கும் கற்கும் குரல்கள், புதுமையானதைக் கண்டு கொண்ட
பூரிப்பின் உற்சாகம் என குதுகலமாய் நடந்து கொண்டிருந்தன அந்த மாலை நேர கற்றல்
மையங்கள் (குழந்தைகள் திறன் மேம்பாட்டு மையங்கள் –Children Creative Learning
Center).
|
கிட்டம்பாளயம் கிராம CCLC |
ஸ்கில்ஸ் இந்தியாவினால் ஈரோடு மாவட்டம்
கடம்பூர் மலைப்பகுதிகளில் உள்ள கிராமங்களில் உருவாக்கப்பட்டுவரும் குழந்தைகள்
திறன் மேம்பாட்டு மையங்களில்தான் இந்த நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. மலைவாழ்
குழந்தைகளின் கல்வி மற்றும் திறன்களை மேம்படுத்தும் வகையில்
ஏற்படுத்தப்பட்டிருக்கும் இந்த மையங்கள் தற்போது குஜ்ஜம்பாளயம், மாகாளித்தொட்டி,
அணில்நத்தம், கிட்டம்பாளயம், மோடிக்கடவு கிராமங்களில் நடைபெற்று வருகின்றது. பள்ளி
நேரம் முடிந்ததற்கு பின்னரான குழந்தைகளின் நேரம் ஒரு பயனுடைய திறன் மேம்பாட்டை
வளர்க்கும் விதத்திலும் அவர்கள் விரும்பும் பொழுது போக்குகள் நிறைந்ததாகவும்
இருக்க வேண்டும் என்கின்ற வகையில் இவ்வாறான மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அந்த கிராமத்தை சேர்ந்த 10 அல்லது 12 வரை
படித்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் இந்த மையத்திற்கான திறன் ஊக்குவிப்பாளர்களாக
ஸ்கில்ஸ் இந்தியாவினால் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த மையங்களின் கள
ஒருங்கிணைப்பாளராக திரு. நட்ராஜ் அவர்கள் நியமிக்கப் பட்டுள்ளார்.
கோடைகால விடுமுறையினை குழந்தைகள் பயனுடைய முறையில் அமைக்கும் முகமாக
மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு விளையாட்டுக்கள், வேடிக்கை விளையாட்டுக்கள்,
அறிவுசார் நிகழ்வுகள் ஆகியவை நடத்தப் படுகின்றது. 1.4.2013 முதல்
ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த திறன் ஊக்குவிப்பு மையங்கள். கிராமங்களினதும்,
குழந்தைகளினதும் தேவையின் அடிப்படையில் கடினமான பாதைகளும், சூழலும் கொண்ட
கிராமங்களிலும் உருவாக்கப்பட்டுவருகின்றன.
|
குஜ்ஜம்பாளயம் CCLC |
|
மாகாளித் தொட்டி CCLC |
|
குஜ்ஜம்பாளயம் CCLC |
குழந்தைகளுக்கு திறன் ஊக்குவிப்பாளர்களாக
நியமிக்கப்படும் கிராமத்து இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு ஸ்கில்ஸ் இந்தியாவினால்
குழந்தைகளுக்கான திறன் ஊக்குவிப்பு செயற்பாடுகள் தொடர்பான பயிற்சிகள், மாணவர்களைக்
கையாளும் விதம் குறித்த பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.கிராமத்தின் மையப் பகுதியில்
உள்ள பொது இடங்களில் கிராம மக்களின் பார்வையின் கீழ் மையங்கள் நடைபெறுவதற்காக
தெரிவு செய்யப்பட்டு இருக்கின்றது.
|
அணில்நத்தம் கிராம CCLC |
|
அணில் நத்தம் கிராம CCLC |
|
மோடிக் கடவு கிராம CCLC |
|
மோடிக்கடவு கிராம CCLC |
No comments:
Post a Comment