Wednesday 24 October 2018

Million Pink Campaign (10 இலட்சம் தொழிலாளர்களுக்கான புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்.


விழிப்புணர்வுக் குழுவினர்(Skills India)
நோயற்றவாழ்வே குறைவற்ற செல்வம். ஏழையாக இருப்பதை விட மோசமானது நோயுற்ற உடலோடு காலங்களிப்பது. நோய்கள் நம்மீது வந்துவிடாதபடி இருக்க எவ்வளவோ முயற்சிகள் மருந்துகள் எடுத்து நம்மை நாம் பாதுகாத்து கொள்கின்றோம். பொதுவாகவே நம்மில் பலருக்கு ஒருவரிடம் இருந்து அடுத்தவருக்கு தொற்றக்கூடிய நோய்கள் பற்றிய விழிப்புணர்வு அதிகம் (எயிட்ஸ்,பால்வினை நோய்கள்,வைரசுகளால் பரவும் நோய்கள்) என பல்வேறு தொற்று நோய்குறித்து அறிந்தும் அதை வராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்கின்றோம்.

களப்பணியில் தன்னார்வலர்கள்.
ஆனால் தனிமனிதர் ஒவ்வொருவருடைய உடலியல் செயற்பாடுகளால் ஏற்படும் தொற்றா நோய்குறித்த விளிப்புணர்வு நம்மில் பலரிடையே இருப்பது இல்லை என்பது ஜதார்த்தம். நடுத்தர மற்றும் மேல்வகுப்பை சேர்ந்த மக்களிடையே இருக்கும் தமது உடலில் உள்ள நோய்கள் குறித்தும் தொற்றா நோய் குறித்துமான விழிப்புணர்வு அடித்தட்டு மக்களிடையே இருப்பது இல்லை என்பது உண்மை. அந்த வகையில்தான் சமீபத்திய இந்திய மருத்துவ கழகத்தின் ஆய்வு இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இலட்சம் பெண்களில் வருடத்துக்கு 30-34 பேர் வரை கர்ப்பவாய் புற்றுநோயினால் இறக்கின்றனர் என்ற செய்தியை வெளியிட்டு இருக்கின்றது. அத்துடன் தொற்றா நோய்ப்பிரிவில் பெண்களின் இறப்பு வீதத்துக்கு முதல் காரணமாக கர்ப்பவாய் புற்றுநோயும் இரண்டாவது காரணமாக மார்பக புற்று நோயும் இருப்பதாக அதிர்ச்சியூட்டும் செய்தியை வெளியிட்டு இருக்கின்றது.
சென்னை
                                                





இதன் அடிப்படையில் ஆய்வு செய்தபோது நாட்டின் பெரும்பாண்மையக இருக்கும் அடித்தட்டு மக்களிடம் இது குறித்தான விழிப்புணர்வு இன்னும் சென்று அடையாததே காரணம் எனகண்டறியப்பட்டுள்ளது. இதனடிப்படையில்தான் தமிழக அரசின் சுகாதார அமைச்சகம்(TNHSP) அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பெண்களுக்கு ஏற்படும் மார்பகபுற்றுநோய் மற்றும் கர்ப்பவாய் புற்றுநோய் குறித்த அறிகுறிகளை ஆய்வு மேற்கொள்ளக்கூடிய வசதியினை செய்திருக்கின்றது. இருந்தும் இது குறித்த மக்கள் மத்தியிலான விழிப்புணர்வு அளவு போதாத நிலையிலே இருக்கின்றது.


கோயம்பத்தூர்

                                                    

          

  













 இந்த நிலையில்தான் ஸ்கில்ஸ் இந்தியா (Skills India Foundation) தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள சாதாரண மக்களிடம் சென்றடைய கூடிய வகையிலான புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் ஒன்றை கடந்த மே மாதம் 01ம்தேதி ஏற்பாடு செய்திருந்தது. ஒவ்வொரு குடும்பத்தின் ஒரு அங்கத்தவராவது ஏதாவது ஓர் இடத்தில் தொழில் செய்பவராக இருப்பார் என்ற வகையிலும் அடத்தட்டு மக்களின் ஆதாரசக்தியாக விளங்கும் தொழிலாளர்களிடம் இருந்து இந்த நிகழ்வினை ஆரம்பிப்பது என்ற முடிவில் தொழிலாளர் தினமான மே.01 அன்று ஆரம்பிக்கப்பட்டது.


திருப்பூர்



 

                                                





மதுரை





தமிழகத்தின் இரும்புத்தொழிற்சாலை நகரான கோயம்பத்தூரில் இருந்து ஆரம்பமான இந்த சூறாவளி விழிப்புணர்வு பிரச்சாரம் கோவை,திருப்பூர்,மதுரை,திருச்சி,சென்னை போன்ற வளர்ந்த தொழில்நகரங்களில் நடைபெற்று வருகின்றது. ஸ்கில்ஸ் இந்தியா நிறுவனத்தின் பணியாளர்கள், மற்றும் தன்னார்வ பணியாளர்கள், மாணவர்கள் என பலதரப்பட்டவர்களால் முன்னெடுத்துச்செல்லப்படும் இந்த விழிப்புணர்வு பிரச்சாரமானது 28/06/2013 இன்றுவரை 340 தொழிற்சாலைகளில் 56000 தொழிலாளர்களுக்கு மேல் விழிப்புணர்வு நடத்தப்பட்டு வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கின்றது. விழிப்புணர்வு பெற்ற தொழிற்சாலைகளினதும் ,தொழிலாளர்களினதும் பாராட்டுக்களுக்கும் நன்றிகளுக்கும் மத்தியில் இந்த நிகழ்வினை சிறப்பான முறையில் நடத்திக் கொண்டு இருக்கின்றார். இதன் மாநில பிரச்சார ஒருங்கிணைப்பாளர் திரு.நா.சிறிதரன்.

தொழில்நகரங்களின் ஒவ்வொரு இடத்திலும் இந்த பிரச்சாரநிகழ்வினை ஆரம்பித்து குறைந்தது 10 இலட்சம் தொழிலாளர்களை நேரடியாக விழிப்புணர்வு அளிக்கவேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இந்த விழிப்புணர்வு பணியினை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். தொழிற்சாலைகளில் உள்ள வேலைகளுக்கு மத்தியிலும் அவர்கள் எங்களது புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்வுக்கு நேரம் ஒதுக்கி தருவது என்பது அந்த நிறுவனம் தொழிலாளர் நலன் மீது வைத்திருக்கின்ற பற்றினைக் காட்டுகின்றது.அதன் பின்னரான நேரடி விழிப்புணர்வின் போது தொழிலாளர்கள் கேட்கின்ற சந்தேகங்களும் அவர்கள் ஆர்வத்துடன் இதுபற்றி கேட்டு அறிந்து கொள்வதும் இந்த நிகழ்வை இன்றுவரை தன்னார்வ பணியாளர்களால் வெற்றிகரமாக கொண்டு செல்வதற்கு காரணமாக இருக்கின்றது.

இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தினை Pink Campaign என்று அழைபதற்கான காரணம் குறித்துக் கேட்ட போது பொதுவாக பிங் என்பது பெண்களைக் குறிக்கும் நிறம் மட்டுமல்ல பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய்க்கான ரிப்பன் பிங்க் நிறத்தில் காணப்படும் அதனால் இந்த பிரச்சாரத்தினை பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய் குறித்து கூறப்படுவதனால் இதற்கு இந்த பெயர் வைக்கப்பட்டிருப்பதாக கூறினார்.ஆனாலும் இதில் ஆண்களுக்கு புகையிலைப் பொருட்கள் மற்றும் அதிகமாக புகைப்பிடிப்பவர்களுக்கு ஏற்படும் வாய்ப்புற்று நோய் குறித்தும் இந்த விழிப்புணர்வில் தன்னார்வ பணியாளர்களால் விளக்கமளிக்கப் பட்டு வருகின்றது என தெரிவித்தார்.

இந்த பிரச்சாரம் மலைப் பகுதிகளில் வாழ்கின்ற பழங்குடியின மக்களிடமும் சென்று சேரும் வகையில் அவர்களது பகுதிகளில் நடக்கும் 100 நாள் திட்டப் பணிகளின் இடைவேளையில் இது பற்றி அவர்களுக்கு விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகின்றது. இந்த வருடத்தின் இறுதிக்குள் 10 இலட்சம் தொழிலாளர்களுக்கான விழிப்புணர்வு பிரச்சாரம் என்ற இலக்கை அடைய வேண்டிய செயற்பாடுகளை மேற்கொள்ளப்பட்டுருகின்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்வினை தங்கள் பணிபுரியும் தொழிற்சாலையிலோ அல்லது தங்களது நிர்வாகத்துக்கு உட்பட்ட தொழிற்சாலையிலோ நடத்துவதற்கு விரும்பும் நிறுவனங்கள் எம்மை தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களைப் பெறலாம்…
தொடர்புக்கு:
நா.சிறிதரன், மாநில பிரச்சார ஒருங்கிணைப்பாளர்
ஸ்கில்ஸ் இந்தியா தொண்டு நிறுவனம்
மின்னஞ்சல்:campaign.skillsindia@gmail.com 
அலைபேசி:07598273044

No comments:

Post a Comment