காலஓட்டத்தின் வேகத்துக்கு ஈடுகொடுத்து செல்ல எல்லோராலும் முடிவதில்லை. புதுமைகளும், தொழில்நுட்ப மாற்றங்களும் நொடிக்கு நொடி மாறிக்கொண்டு இருக்கும் இந்த காலப் பகுதியில் மாறிவரும் தொழிநுட்பத்தின் ஆரம்ப கட்டங்களையாவது தெரிந்திராமல் இருந்தால் நாம் ஏதோ இந்த உலகத்தை விட்டு தள்ளிப் போனதான உணர்வு தோண்றுகின்றது. அதுதான் இன்றைய இளந்தலமுறை Twitter,Facebook என்று இருக்கும் காலத்தில் பள்ளிகளுக்கு கொடுக்கப்பட்ட கணிணிகளை தூசிபடியாமல் வைத்திருக்கும் மலைவாழ் பகுதி குழந்தைகளின் கல்வியில் தொழில்நுட்ப சாதனங்கள் என்பது எட்ட நின்று எட்டிப்பார்க்கும் விந்தைப் பொருளாகவே தோன்றுகின்றது.
இதன் ஒரு பகுதியாகவே மாகாளித்தொட்டி, மாக்கம்பாளையம் கிராமங்களில் உள்ள மாணவர்களுக்கான ஒருநாள் பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருந்தோம். நாங்கள் கற்றுக்கொடுக்க எவளவோ இருக்கும் என்ற நினைப்பில் சென்ற எங்களின் எண்ணங்களை தகர்த்து எறிந்து வெகு சீக்கிரத்தில் அவர்கள் ஒவ்வொன்றையும் புரிந்து கொண்டது.. ஆச்சரியத்தின் உச்சி. அதன் காரணம் அவர்களது குழந்தைதனம். குழந்தைகளாக இருக்கும் போது எதையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் இருக்கும் ஆர்வம். அந்த ஆர்வம் அவ்ர்கள் மனதில் என்னால் இதனை இலகுவாக இயக்க முடியும் என்ற நம்பிக்கையும், இது பற்றி தெரிந்தவன் என்ற தைரியத்தையும் அவர்களுக்கு அளிக்கின்றது.
|
மாக்கம்பாளையம் மாணவர்கள் காணொளி இயக்குவது குறித்து ஆர்வத்துடன் பார்வையிடுகின்றனர் |
|
மாணவர்களுக்கு காணொளி குறித்து விளக்கம் அளிக்கும் பயிற்சியாளர் சிறிதரன். |
அதன் பின்னர் அவர்கள் எங்களை வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்துக் குவித்தனர்.அவர்கள் எல்லோரிடமும் தொழில்நுட்ப வார்த்தைகள் சரளமாக வந்து விழுந்தன,( மிட் சாட், லாங் சாட், கவர் ஆகல, சூம் பண்ணவா?, என அவர்கள் கேட்டுக் கேட்டு செய்கின்ற போது மகிச்சியின் நரம்புகள் நம்மிடையே பற்றிக் கொள்கின்றது.ஆனால் இந்த பருவம் தாண்டி விட்டால் அவர்கள் இதை கற்றுக் கொள்வார்கள் என்பதில் நம்பிக்கை இல்லை.யாரோ ஒருவர் தொழிலுக்காக கற்றுக்கொள்ளலாம் அதை விடுத்து அவ்ர்கள் வளர்ந்த இடம் அவ்ர்களை தயக்கத்துடன் ஒதுங்கிச்செல்ல வைக்கும்.
|
மாக்கம்பாளையம் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படம் எடுப்பது குறித்த பயிற்சி. |
|
சக மாணவர் படம் எடுப்பதை ஆர்வத்துடன் பார்க்கும் மாணவர்கள் |
No comments:
Post a Comment