மீனா புவனேஸ்வரி, வயது -28, ஈரோடு நகரப் பகுதியில் வசித்து வருகிறார், லாப் டெக்னிசியன் படித்துவிட்டு வேலை ஏதும் கிடைக்காமல் , குடும்ப வாழ்வை பார்த்து கொண்டிருந்த இவர் தற்போது சுயமாக அழகுகலை நிபுணராக சாதித்து வருகிறார். தனது வாழ்வை மாற்றிய தொழில்திறன் கல்வி குறித்து அவர் கூறியது.
லாப் டெக்னிசியன் படித்து முடித்து பல நாட்கள் வேலை தேடி அலைந்தும் அதற்கேற்றால் போல் வேலை கிடைக்கவில்லை ,இந்த நிலையில் திருமணமாகி இரு குழந்தைகள் இருக்கின்றார்கள், எனது கணவரின் வருமானத்திலே குடும்ப செலவுகளை சமாளித்து வருகிறோம். படித்து வேலை இல்லாமல் இருப்பது எனக்கு வேதனையாகவும் என் குடும்ப செலவுகளை சமாளிக்க கடினமாகவும் இருந்தது.
இந்த நிலையில் ஈரோடு CSI வளாகத்தில் இயங்கிவரும் Skills India Foundation-Erode பயிற்சி மையத்தில் மத்திய அரசின் பிரதம மந்திரியின் திறன் மேம்பாட்டு திட்டத்தில் தொழில்பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதாக பத்திரிகை விளம்பரம் ஒன்றில் பார்த்தேன். பயிற்சி மையத்திற்கு சென்று மைய தலமை நிர்வாகி ஸ்டீபன்ராஜ் சார் அவர்களிடம் சென்று பயிற்சி விபரங்களைக் கேட்டு அறிந்து அதில் உதவி அழகுகலை நிபுணர் பயிற்சியில் சேர்ந்து கொண்டேன்.
290 மணிநேர பயிற்சியானது 3 மாதகாலத்தில் சிறப்பான முறையில் எல்லா வகையான தெரப்பிகளையும் மையத்தின் பயிற்சி ஆசிரியர் வாஹிதா பேகம் அவர்கள் கற்றுக்கொடுத்தார்கள். பயிற்சிக்காலத்தில் மையத்தில் நடைபெற்ற கலைத்திறன் போட்டிகள், விளையாட்டுகளில் ஆர்வத்தோடு கலந்து கொண்டேன். பயிற்சிக்காலத்தில் என்னோடு பயிற்சியில் கலந்துகொண்ட சுதா, சுமதி, புனிதா, திவ்யா ஆகியோர் நல்ல நண்பர்கள் ஆனார்கள் பயிற்சியின் முடிவில் நடத்தப்பட்ட தேர்வில் தேர்ச்சியடைந்து மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சின் சான்றிதலைப் பெற்றுக்கொண்டேன்.
இந்த தொழில்திறன் பயிற்சியானது எனக்கு சுயமாக அழகுகலை செய்வதற்கான திறனை வளர்த்திருந்தது ,அதன் அடிப்படையில் சுயமாக அழகுகலைக்கு தேவையான பொருட்களை வாங்கி வீட்டில் இருந்தபடியே செய்துவருகிறேன். எனது அருகில் வசிப்பவர்கள் மற்றும் அந்த ஊரில் உள்ள பெண்கள் என்று மாதம் ஒன்றிற்கு 100 பேருக்கு குறைவில்லாமல் என்னிடம் வந்து தெரப்பி செய்கின்றனர் இதன் மூலம் மாதம் ஒன்றிற்கு 8000/- முதல் 10000/- வரை சராசரியாக வருமானம் ஈட்டுகிறேன்.
இந்த திறன் பயிற்சி எனக்கு தன்னம்பிக்கையும் நிரந்தர வருமானத்திற்கான வழியையும் கொடுத்திருக்கின்றது, என்னை போல் இதில் பங்குகொண்ட என் தோழிகளும் சுயமாக தொழில் செய்து வருகின்றனர், எனது வாழ்வை மாற்றிய மத்திய அரசின் PMKVY திட்டத்திற்கும் ,Skills India Foundation- Erode பயிற்சி மையத்திற்கும் எனது பயிற்சி ஆசிரியருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
No comments:
Post a Comment