Thursday 15 November 2018

ஈரோடு-சையது அசாம் - வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்திய தொழில் திறன் பயிற்சி.

சையது அசாம் 27 வயது , மெகானிகல் எஞ்சினியரிங் பட்டைய படிப்பை முடித்துவிட்டு நல்ல வேலைக்காக காத்திருக்கும் இளைஞர், ஈரோடு முத்துசாமி காலனியில் வசித்து வருகிறார்,  தொழில் திறன் பயிற்சியினால் தனது வாழ்வில் ஏற்பட்ட மாற்றம் குறித்து இவ்வாறு விவரிக்கிறார்.


 12 பேர் கொண்ட  எங்கள் குடும்பத்தில் வேலை சென்று வருமானம் ஈட்டும் நிலையில் இருக்கும் 3 பேரில் நானும் ஒருவன் , தந்தை ரயில்வேயில் கூலியாக வேலை பார்த்து சம்பாதித்து வந்தார் , இடையில் ஏற்பட்ட உடல்நலக் குறைவால் இறந்து போக குடும்பத்தை தாங்கும் நிலையில் இருக்கும் எனக்கு நான் பார்த்து வரும் தனியார் நிறுவன வேலை மூலமான வருமானம் போதுமானதாக இருக்கவில்லை.

சுயமாக தொழில் செய்யும் நோக்கோடு பல தொழில்களை செய்ய ஆரம்பித்து அதில் வெற்றி பெற முடியாத நிலையில் , ஈரோடு Skills India Foundation-Erode பயிற்சி மையத்தில் (PMKVY) பிரதம மந்திரி திறன் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் இலவச  தொழிற்பயிற்சிகள் நடைபெறுவதாக தொலைக் காட்சியில் வந்த விளம்பரத்தின் மூலம் அறிந்து கொண்டேன்.

அதில் CCTV Installation Technician தொழில் பயிற்சி எனக்கு மிகவும் பிடித்ததாகவும் எனது சுய தொழில் முயற்சிக்கு உகந்ததாக இருக்கும் என்னும் நோக்கில் தேர்வு செய்து , பயிற்சி மைய்யத்திற்கு சென்று எனது பெயரினை பதிவு செய்து திட்டத்தில் இணைந்து கொண்டேன். பயிற்சி மையத்தில் மைய பொறுப்பாளர் ஸ்டீபன் ராஜ் சார் அவர்கள் , திட்டம் குறித்தும் அதன் பயன்கள் குறித்தும் தெளிவாக எங்கள் பயிற்சி குழுவுக்கு எடுத்துக் கூறினார்.

அதன் பின்னாரான 400 மணி நேரம் கொண்ட பயிற்சியானது 4 மாதகாலம் தொடந்து பயிற்சிக்கு வந்து முளுமையான முறையில் கற்றுக் கொண்டேன்.  பயிற்சி  மைய ஆசிரியர் திருமதி-உமா மகேஸ்வரி அவர்கள் தரமான முறையில் செயல்முறை மற்றும் விளக்கங்களை எடுத்து வகுப்பினை  எங்கள் எல்லோருக்கும் புரியும் படியாக நடத்தினார். 

பயிற்சி காலத்தில் என்னோடு பயிற்சியில் சேர்ந்த திரு.சந்திர சேகரன், திரு.மாணிக்கம் ஆகியோர் நல்ல நண்பர்களானார்கள், பயிற்சியின் முடிவில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சியடைந்து  மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகமும் , எலக்ரோனிக் செக்டார் ஸ்கில் கவுண்சிலும் - Electronic Sector Skill Council வழங்கிய சான்றிதலைப் பெற்றுக் கொண்டேன்.

அதன் பின்னர்  சுயமாக தற்போது CCTV Installation பணிகளை செய்து வருகிறேன், மாதம் ஒன்றிற்கு 15000 க்கு குறைவில்லாமல் வருமானம் ஈட்ட முடிகிறது . முன்பு 10000/- சம்பளத்தில் வீட்டு செலவுகளை சமாளிக்க முடியாமல் தினறிய எனக்கு இது நல்ல உற்சாகத்தை கொடுத்து இருக்கிறது. இன்னும் எனது  பணி புரியும் இடங்களை அதிகப்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு 30000/- வரை வருமானம் ஈட்டும் அளவிற்கு என்னை உயர்த்திக் கொள்ள முயற்சித்து வருகிறேன்..

இந்த பயிற்சி என்னை போன்றவர்களை ஊக்கப்படுத்தியதுடன் சுயமாக தொழில் செய்யக்கூடிய அளவிற்கு தகமையை கொடுத்திருக்கிறது.  இந்த பயிற்சியை திறம்பட எங்களுக்கு அளித்த திருமதி-உமா மகேஸ்வரி ஆசிரியருக்கும், மற்றும் Skills India Foundation-Erode பயிற்சி மைய நிர்வாகிகளுக்கும் , மத்திய அரசின் PMKVY திட்டத்திற்கும் எனது நன்றிகளை தெரிவிக்கிறேன்.

No comments:

Post a Comment