Thursday 15 November 2018

தொழில் திறன் பயிற்சியால் சுயதொழிலில் சாதிக்கும் -ஈரோடு ஹரிசங்கர்

ஹரிசங்கர் ,வயது-32 ,B.E படித்துவிட்டு அதற்கான வேலை கிடைக்காமல் கிடைத்த வேலையை செய்து வருமானம் ஈட்டி வந்த இவர் தற்போது சுயமாக  தொழில் செய்து சம்பாதித்து வருகிறார் அவரது வாழ்வை மாற்றிய தொழில் திறன் பயிற்சி குறித்து விவரிக்கிறார்.

நான் ஈரோடு மாவட்டம் கரிமேடு பகுதியில் வசித்து வருகிறேன், திருமணம் ஆகி இரு குழந்தைகள் இருக்கிறார்கள், படித்த படிப்புக்கு ஏற்ற வேலை இல்லாத நிலையில் கிடைத்த வேலையை செய்து மாதம் ஒன்றிற்கு 10,000 சம்பளமாக பெற்றுவந்தேன். அது எனது குடும்பச் செலவுகளுக்கும் பிள்ளைகளின் படிப்பிற்கும் போதுமானதாக இருக்கவில்லை. 

வேறு ஏதேனும் தொழில் செய்யலாம் என பல காலம் முயற்சி செய்து வந்தேன் , அந்த நிலையில் ஈரோடு  CSI வளாகத்தில் உள்ள Skills India Foundation- Erode பயிற்சி மையத்தில் மத்திய அரசின் பிரதமர் திறன் மேம்பாட்டு திட்ட தொழில் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதாக எனது நண்பன் பத்திரிகை விளம்பரதில் பார்த்ததாக கூறினான். அதன் பின்னர் இருவரும் பயிற்சி மையம் சென்று தொழில் பயிற்சி விபரங்களை கேட்டறிந்து ,CCTV Installation Technician பயிற்சியை தேர்ந்து எடுத்தேன்.

400 மணிநேரம் கொண்ட பயிற்சியை 3 மாத காலம் தொடர்ச்சியாக பயிற்சிக்கு வருகை தந்து  திறம்பட அனைத்து செயல்முறை விளக்கங்களையும் தெரிந்துகொண்டேன். பயிற்சி ஆசிரியர் திருமது. உமா மகேஸ்வரி அவர்கள் எல்லோருக்கும் இலகுவாக புரிந்து கொள்ளும்படியாக செயல்முறை மற்றும் விளக்க வகுப்புகளை நடத்தினார்.

பயிற்சியின் முடிவில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சியடைந்து ,மத்திய அரசின் சான்றிதலைப் பெற்றுக் கொண்டேன் , அதன் பின்னர் சுயமாக CCTV Installation பணிகளை செய்து வருகிறேன் மாதம் ஒன்றிற்கு 15000- 20000 வரை வருமானம் ஈட்ட முடிகிறது. அடுத்து சொந்தமாக CCTV Installation பொருட்கள் விற்பனை மற்றும் சேவை கடை ஒன்றை ஆரம்பிக்க திட்டமிட்டு இருக்கிறேன். 

இந்த தொழில் திறன் பயிற்சி என்னை மேலும் உற்சாகப்படுத்தியிருக்கிறது சுய தொழில் செய்து சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கும் என்னை போன்றவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருக்கிறது ,  எனக்கு இந்த வாய்பை அளித்த Skills India Foundation -Erode தொழில் பயிற்சி மையத்திற்கும், பயிற்சி ஆசிரியர் மற்றும் மத்திய அரசின் PMKVY திட்டத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

No comments:

Post a Comment