Sunday 16 September 2012

National Children's Science Congress-2012-தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு -2012 க்கான ஈரோடு மாவட்ட அளவிலான 3ம் கட்டக் கலந்தாய்வு.



 மாநில தலைவர் முனைவர். என். மணி
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக ஈரோடு மாவட்ட அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு-2012 க்கான 3ம் கட்டக் கலந்தாய்வானது சத்தியமங்கலம் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது.தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆகும்.பல்கலைக்கழக பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள், சிறந்த கல்வியாளர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர்களை உறுப்பினர்களாகவும் தன்னார்வ தொண்டர்களாகவும் கொண்டு இயங்கி வருகின்றது. இந்திய அரசின் NCSTC இல் உறுப்பினராகவும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் உள்ளது.

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு என்ற குழந்தைகளுக்கான ஓர் அறிவியல் ஆய்வு நிகழ்வு, 1973 ம் ஆண்டிலிருந்து கடந்த 19 ஆண்டுகள் இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் நடத்தப்பட்டு வருகின்றது, இந்திய அரசின் தொழில்நுட்ப துறையும் , தேசிய அறிவியல் தொழில்நுட்ப பரிமாற்றக் குழுமமும், மற்றும் Rashtriya Vigyan Evan Prodyogiki Sanchar Parishad  ஆகியன இணைந்து நடத்துகின்றன. மாநிலங்களின் அறிவியல் தொழில் நுட்பக்கழகம், தன்னார்வ இயக்கங்கள் இதில் பங்கேற்று இதனை ஒருங்கிணைத்து நடத்தி வருகின்றன.
மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர்.
 சோ. மோகனா
அந்த வகையில் 2012 ம் ஆண்டுக்கான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள குழந்தைகளைப்  பங்கு கொள்ளச் செய்வதற்காக தன்னார்வ தொண்டர்களுடனான சந்திப்பினை  தன்னார்வ நிறுவனத்துடன் சேர்ந்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் 15.09.2012 அன்று ஏற்பாடு செய்திருந்தது. இதில் சத்திய மங்கலம் மலைப் பகுதி கிராமங்களிலும் அங்குள்ள பள்ளிகளிலும் பணியாற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களான READ NGO, Aide et Action NGO, SKILLS INDIA, SUDAR NGO, ஆகிய நிறுவனங்களின் தன்னார்வ தொண்டர்கள் 34 பேர் கலந்து கொண்டார்கள்

மாவட்ட மட்டத்தில் 3ம் கட்டமாக நடைபெறும் இந்த கலந்தாய்வில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர். சோ. மோகனா, மாநில தலைவர் முனைவர். என். மணி ஆகியோரும் ஈரோடு மாவட்ட தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் ஒருங்கினைப்பாளர் திருமதி. P.ரேவதி ஆகியோர் கலந்து கொண்டனர். கலந்தாய்வினை எயிட் எட் ஆக்சன் நிறுவனத்தின் திரு. முரளி அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.

ஈரோடு மாவட்ட  தலைவர்  திரு  உமாசாங்கர்
பின்னர் மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர். சோ. மோகனா அவர்கள் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பற்றியும் அதன் செயற்பாடுகள் பற்றியும் அதில் ஈடுபட்டிருக்கும் தன்னார்வ தொண்டர்கள் மற்றும் அமைப்புக்கள் பற்றியும் விளக்கம் அளித்தார், இந்த அறிவியல் இயக்கத்தின் சார்பாக வருடா வருடம் நடைபெறும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு பற்றியும் அதன் மூலம் குழந்தைகளுக்கு கிடைக்கின்ற பெருமைகள், பாராட்டுக்கள் மற்றும் குழந்தைகள் அடையும் பயன்களைப் பற்றி பேசினார்.

மாநாட்டுக்கான ஒருங்கிணைப்பாளர்
 திருமதி. P. ரேவதி
அதன் போது குழந்தைகள் அறிவுசார் திறனை வளர்க்கும் இந்த ஆய்வு செயற்பாடானது மாணவர்களை தேசிய அளவில் ஒரு பாராட்டினையும், அவர்களின் வாழ்க்கையினை மாற்றும் ஒரு செயற்பாடாகவும் அமையும் இதில் 10 முதல் 17 வயது வரை உள்ள குழந்தைகள் இதில் பங்கேற்கலாம். பங்கேற்பதற்கான ஒரே தகுதி வயது மட்டும்தான், பள்ளிக் குழந்தைகள், பள்ளி சாராக் குழந்தைகளும், இரவுப் பள்ளியில் படிப்பவர்களும், படிப்பை இடைவிட்ட குழந்தைகள் கூட பங்கேற்கலாம். இந்த ஆய்வு செயற்பாட்டில் பங்கு கொள்ளும் குழந்தைகள் அறிவியல் தொழில்நுட்பக் குழுமத்தால் அறிவித்த மைய்யப் பொருள் பற்றி சுமார் மூன்று மாதகாலம் குழுவாக ஆய்வு செய்யவேண்டும். குழுவின் எண்னிக்கை 2-5 பேர் மட்டுமே. குழந்தைகள் குழு ஆய்வினை சுமார் 3 மாதம் ஒரு வழிகாட்டி ஆசிரியரின் துணையுடன் செய்ய வேண்டும்.

நா. ஸ்ரீதரன்,SKILLS INDIAதன்னார்வ  கலந்தாய்வு   

இந்த ஆய்வுகள் எப்போதும் அவர்கள் வாழ்கின்ற உள்ளூர் பகுதி பற்றியதாகவோ அல்லது அந்த பகுதி சார்ந்த பிரச்சனையாகவோ இருக்க வேண்டும். இங்கிருக்கும் ஒருவர் மற்ற மாவட்டம் பற்றி ஆய்வு செய்யக் கூடாது என்றும் ஆய்வின் தலப்புக்கள் தன்னிலை விளக்கமுடையதாய் அமைய வேண்டும் என்றும் இந்த ஆய்வானது உயிர் ஆபத்து உடையதாகவோ, ஆபத்து விளைவிக்கும் பொருட்கள் தொடர்பானதாகவோ அல்லது மனிதன் உணவு, பாணம் தொடர்பானதாக இருத்தல் கூடாது என்று கூறினார். இந்த ஆண்டுக்கான ஆய்வின் தலைப்பாக ஆற்றல் என்னும் தலைப்பு வழங்கப் பட்டிருக்கின்றது இதன் கீழ் 6 வகையான உபதலைப்புக்கள் வழங்கப் பட்டுள்ளன இவை ஒவ்வொன்று தொடர்பாக ஒவ்வொரு மாணவரும் ஆய்வினை மேற்கொள்ளலாம் என்று கூறினார். இந்த ஆய்வு செயற்பாடுகளானது பொதுவாக தனியார் பள்ளிகளையும் நகரங்களில் உள்ள அரசு பள்ளிகளையும் சென்று அடைந்திருக்கின்றது ஆனால் மலைப் பிரதேசங்களில் உள்ள குழந்தைகளை இது முழுமையாக சென்றடையவில்லை என்பதனாலையே இந்த கலந்தாய்வினை இன்று ஏற்பாடு செய்திருக்கின்றோம் மலைக் கிராமங்களில் பணிபுரியும் நீங்கள் இவர்களை ஊக்கப் படுத்துவதன் மூலம் இந்த ஆய்வில் அங்குள்ள குழந்தைகளையும் பங்குபெறச் செய்யலாம் என்று கூறி முடித்தார்.

அதன் பின்னர் பேசிய மாநில ஒருங்கிணைப்பாளர் முனைவர். என். மணி அவர்கள் எங்கள் தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் பல்வேறு அரசு துறைப் பணியாளர்களும் , பேராசிரியர்கள் விஞ்ஞானிகளும் தன்னார்வலர்களாக இருக்கின்றனர், உண்மையில் இந்த வாய்ப்பானது ஒவ்வொரு குழந்தைக்கும் கிடைத்த பெரிய களமாகும் பேராசிரியர். சோ. மோகனா போன்றோர் இந்த குழந்தைகள் ஆய்வு நடவடிக்கைக்காக அயராது பாடுபடுகின்றனர், எம்முடன் இந்த மாவட்டத்தின் அறிவியல் மாநாட்டுக்கான ஒருங்கிணைப்பாளர் திருமதி P.ரேவதி அவர்களும் வருகை தந்திருக்கின்றார் முதல் இரண்டு கட்டங்களாக ஈரோடு மாவட்ட மட்டத்தில் கலந்தாய்வு நடைபெற்றது பல்வேறு பள்ளிகளிலும் அமைப்புகளிலும் இருந்து பலர் கலந்து கொண்டனர் அதன் பின்னர் மலைக்கிராமங்களில் வசிக்கும் குழந்தைகளின் கைகளிலும் இது சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் எயிட் எட் ஆக்சனின் திரு, முரளி அவர்கள் ஏற்பாட்டின் பேரில் இங்கு 3வது கட்டமான கலந்தாய்வு நடைபெற்று வருகின்றது. இதனை நீங்கள் குழந்தைகள் இடத்தில் சொல்வதற்கு அதிகம் படித்து டாக்டர் பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டு என்ற அவசியமில்லை ஒரு அளவான படிப்பு இருந்தாலே போதுமானது என்று கூறினார்.

அவரைத் தொடர்ந்து ஈரோடு மாவட்ட குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்கான ஒருங்கிணைப்பாளர் திருமதி. P. ரேவதி அவர்கள் இந்த ஆய்வு தலைப்பானது 2 வருடங்களுக்கு ஒருமுறை மாற்றமடையும் அந்த வகையில் இந்த ஆண்டின் தலைப்பாக ஆற்றல் என்னும் தலைப்புக் கொடுக்கப் பட்டுள்ளது எனவும் அதன் கீழ் உள்ள ஒவ்வொரு உபதலைப்பிலும் ஆய்வினை மேற்கொள்ளலாம் என்று கூறினார், அத்தோடு இதற்கான விண்ணப்பங்களை வரும் ஒரு வாரத்தினுள் முடித்து ஆய்வினைப் பற்றிய தகவலை தர வேண்டும் என்று குறிப்பிட்டார் இந்த ஆய்வு தொடர்பான கையேடு ஒன்று உள்ளது அதனை எல்லோரும் பெற்றுக்கொண்டு அதனைப் பற்றிய விளக்கத்தினை பள்ளிகளில் ஆசிரியர்களிடமும் குழந்தைகளிடமும் தெரிவியுங்கள் எனக் குறிப்பிட்டார்.

அதன் பின்னர் பேராசிரியர்- மோகனா அவர்கள் ஆய்வறிக்கையின் வடிவம் பற்றியும் அதனை எளிமையாக வடிவமைக்கும் முறை பற்றியும் ஆய்வு தலைபுகள் ஒவ்வொன்றினதின் கீழ் வரும் வினாக்கள் எப்படியானதாக இருக்கவேண்டும் என்பது பற்றிய பங்கேற்பாளர்களின் கேள்வ்களுக்கு விளக்கமளித்தார் அதன் பின்னர் வந்திருந்த அனைவருக்கும் கையேடுகளையும் விண்ணப்பம் செய்வதற்கான படிவங்களியும் ஆசிரியர் P.ரேவதி அவ்ர்கள் வழங்கினார் அதைல் உள்ள சந்தேகங்கள் குறித்து தெரிந்து கொள்ள 6 குழுக்கள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு குழுவும் ஓவ்வொரு தலைப்பினை படித்து விட்டு அதில் புரியாததைப் பற்றி கேட்கும் படி கூறினார். கொடுக்கப்பட்ட 30 நிமிட நேரத்தில் வாசித்து முடித்த பங்கேற்பாளர்கள் அதில் புரியாத விடையங்களைக் கேட்டு அறிந்தனர் அது தொடர்பாக பேராசிரியர் மோகனா அவர்களும் அறிவியல் தாத்தா என்று அழைக்கப்படும் திரு.உமாசாங்கர் அவர்களும் விடையளித்தனர். பின்னர் கலந்து கொண்ட ஒவ்வொரு தொண்டு நிறுவன அமைப்பும் இந்த ஆய்வறிக்கையினை மாணவர்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

        

No comments:

Post a Comment