“கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்”
பயிற்சியின் முடிவில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சியடைந்து மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சினால் வழங்கப்பட்ட சான்றிதலைப் பெற்றுக் கொண்டேன். பின்னர் வீட்டில் ஒரு தையல் மிசின் ஒன்றை வாங்கி அதன் மூலம் கடைகளிலும் அருகில் வசிக்கும் மக்களிடமும் இருந்து வரும் ஆடர்களை நேர்த்தியாக தைத்து கொடுத்து வருகிறேன் , மாதம் ஒன்றிற்கு 7000/- மேல் வருமானம் கிடைக்கிறது , அத்தோடு தையல் பயிற்சியோடு கற்றுக் கொண்ட கைவேலைப்பாடு , மற்றும் அலங்கார பொருட்கள் தயாரித்து கடைகளுக்கும் , ஆன் லைனில் ஓடர்களுக்கும் கொடுத்து வருகிறேன். இதன் மூலமும் மாதம் ஒன்றிற்கு 4000முதல் 6000 ரூபாய் வரை மாதம் ஒன்றிற்கு வருமானம் கிடைக்கிறது.
என்னையும் என் போன்று பயிற்சியில் கலந்து கொண்டு பயிற்சியை நிறைவு செய்த பல நூறு பயிற்சியாளர்களுக்கும் திறன்பட பயிற்சியளித்த Skills India Foundation -Rajapalayam பயிற்சி மையத்திற்கும் மைய நிர்வாகி திரு.மணிவண்ணன் சார் அவர்களுக்கும் , பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் திருமதி. சுபா மேடம் அவர்களுக்கும் , பயிற்சி ஆசிரியார் திருமதி. கவிதா அவர்களுக்கும் என் நன்றிகளை தெரிவிக்கிறேன்.
பவித்திராவை மாற்றிய தாரக மந்திரமும் இதுதான் , தனது கைத்தொழில் திறமையால் இன்று சுய தொழில் செய்து வருமானம் ஈட்டிவரும் பவித்ரா தனது சுய வேலைவாய்ப்புப் பற்றி கூறிய போது.
என் பெயர் பவித்ரா ,வயது-25 , விருதுநகர் மாவட்டம் ,ராஜபாளயத்தில் உள்ள ஸ்ரீரெங்கபாளையம் என்னும் ஊரில் வசித்து வருகிறேன். 12 ம் வகுப்புவரை படித்துவிட்டு அதன் பின்னர் மேற்கொண்டு படிக்க வீட்டில் வசதி இல்லாத காரணத்தால் பட்டப் படிப்பு படிக்காமல் ,திருமணம் செய்து கொண்டேன்.
எனது கணவர் தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணி புரிகிறார் , ஒரு பெண் குழந்தை என 3 பேரும் வாடகை வீடு ஒன்றில் குடியிருந்து வருகிறோம், எனது கணவரின் வருமானத்தில் வாடகை வீட்டில் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் குடும்ப செலவுகளை சமாளித்து வந்தேன். நான் வீட்டில் இருந்து தினமும் வீணாக பொழுதைப் போக்கிவருவதாக ஒரு குற்ற உணர்வு எப்போதும் இருக்கும் , கணவருக்கு உறுதுணையாக நாமும் ஏதாவது சம்பாதிக்க வேண்டும் என்று நீண்டகாலம் முயற்சித்து வந்தேன்.
அந்த நிலையில்தான் ராஜபாளையம் சங்கரன்கோவில் வீதியில் உள்ள லயன்ஸ் கட்டிட வளாகத்தில் இயங்கிவரும் Skills India Foundation - Rajapalayam பயிற்சி மையத்தில் மத்திய அரசின் பிரதம மந்திரி திறன் மேம்பாட்டுதிட்டம் மூலம் இலவச தொழில் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதாக விளம்பர பேனர் ஒன்றில் பார்த்தேன்.
திட்டம் குறித்து பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் திருமதி .சுபா மேடம் அவர்கள் எடுத்துக்கூறினார்கள், அவரது வழிகாட்டுதலின் படி சுயதொழில் தையல் பயிற்சி வகுப்பில் சேர்ந்து கொண்டேன். 380 மணி நேரம் (3 மாத கால ) பயிற்சியில் தையல் பயிற்சி ஆசிரியர் திருமதி .கவிதா மேடம் அவர்கள் தையல் வகைகள், பல்வேறு ஆடைகள் வடிவமைத்தல் , எம்ப்ராய்டரி வேலை, அனைத்து வகையான ஆடைகள் அளவெடுத்து , வெட்டி தைப்பது என பல சுவாரசியமாக தையல் பயிற்சி நடந்தது.
பயிற்சியின் இடையில் பயிற்சி மையத்தில் நடைபெறும் யோகா வகுப்புகள், கலை நிகழ்வுகள் , திறன் போட்டிகள் என அனைத்திலும் ஆர்வத்தோடு கலந்து கொண்டேன் அதில் எனது கைத்திறன் பொருட்களை செய்து கண்பித்து பரிசில்களையும் பெற்றேன், எனது ஆர்வத்திற்கு பயிற்சி ஆசிரியர் கவிதா மேடம் , என்னோடு பயிற்சியில் கலந்து கொண்ட செல்வலக்சுமி இருவரும் பெரும் ஆதரவாக இருந்தார்கள்.
திறன் போட்டி-2018 இல் எனது கைவேலைப் பொருட்களை நடுவர்கள் ஆய்வு செய்த போது. |
திறன் போட்டியில் வெற்றி சான்றிதல் பெற்றபோது |
திறன் போட்டி -2018 இல் நாங்கள் தைத்த ஆடைகளோடு எனது குழுவினருடன் எடுத்த படம் |
எனது கை வேலை சொகுசு தலையணை |
வீட்டில் இருந்து வீணாக பொழுது போய் கொண்டிருந்த காலம் போய் இப்போது நேரம் கிடைக்கும் நேரம் எல்லாம் எனது தொழில் திறனால் எனது வீட்டுக்கு தேவையான வருமானத்தை ஈட்ட முடிவதை நினைத்து மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் வாழ்க்கையின் பாதையை மாற்றியதில் பிரதம மந்திரியின் திறன் மேம்பாடு பயிற்சி திட்டத்திற்கு பெரும் பங்களிப்பு இருக்கிறது.
என்னையும் என் போன்று பயிற்சியில் கலந்து கொண்டு பயிற்சியை நிறைவு செய்த பல நூறு பயிற்சியாளர்களுக்கும் திறன்பட பயிற்சியளித்த Skills India Foundation -Rajapalayam பயிற்சி மையத்திற்கும் மைய நிர்வாகி திரு.மணிவண்ணன் சார் அவர்களுக்கும் , பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் திருமதி. சுபா மேடம் அவர்களுக்கும் , பயிற்சி ஆசிரியார் திருமதி. கவிதா அவர்களுக்கும் என் நன்றிகளை தெரிவிக்கிறேன்.
No comments:
Post a Comment