Monday 18 February 2019

ராமநாதபுரம்-இன்பராஜன் வாழ்வை மேம்படுத்திய தொழில்திறன் பயிற்சி

இஞ்சினியரிங் படித்துவிட்டு நிறுவனம் ஒன்றில் குறைந்த சம்பளத்தில் பணிபுரிந்து வந்த இன்பராஜன் தொழில் திறன் பயிற்சி மூலம் சுயமாக தொழில் செய்து சாதித்து வருகிறார் அவர் வாழ்வை மேம்படுத்திய தொழில்திறன் பயிற்சி குறித்து அவர் கூறியது.


இராமநாதபுரம் மாவட்டம் பரமகுடி எனது ஊர் , இஞ்சினியரிங் படித்து முடித்துவிட்டு வேலை தேடி ஈரோடு வந்து கிடைத்த வேலை ஒன்றில் மாதம் 10,000 ரூபாய் சம்பளத்தில் பணிபுரிந்துவந்தேன். எனது தந்தை ஊரில் விவசாயம் செய்கிறார் மழையை நம்பிய விவசாயம் மாதம் 3000 முதல் 5000 ரூபாய் வரைதான் வருமானம் ஈட்ட முடியும் இந்த நிலையில் எனது வருமானம் எனது வீட்டுக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தாலும் முழுத் தேவைகளையும் பூர்த்தி செய்ய போதுமானதாக இருக்கவில்லை.

அந்த நிலையில் வேறு நல்ல வேலை ஒன்றை தேடிக் கொண்டு இருந்தேன் அப்போதுதான் பத்திரிகை விளம்பரம் ஒன்றில் வேலைவாய்ப்புடன் கூடிய மத்திய அரசின் (PMKVY) பிரதம மந்திரியின் திறன் மேம்பட்டு பயிற்சி வகுப்புகள் ஈரோடு Skills India Foundation தொழில் பயிற்சி மையத்தில் நடைபெறுவதாக கூறப்பட்டு இருந்தது.

தொழிற்பயிற்சி மையத்திற்கு சென்று CCTV Installation Technician பயிற்சிக்கு விண்ணப்பித்து ,400 மணி நேர பயிர்சியில் கலந்து கொண்டேன், நாள் ஒன்றிற்கு 8 மணிநேரமாக 2 மாதகால பயிற்சியை செயன்முறை விளக்கங்களுடன் ஆசிரியர் உமா மகேஸ்வரி அவர்கள் திறம்பட கற்றுக் கொடுத்தார்கள்.

பயிற்சியின் நிறைவில் நடத்தப்பட்ட தேர்வில் தேர்ச்சியடைந்து , மத்திய அரசின் சான்றிதலைப் பெற்றுக் கொண்டேன் , பயிற்சியின் போது அறிமுகமான நண்பர்கள் சதிஷ்குமார், விமல் ஆகியோரின் உதவியுடன் CCTV Instalation தொழிலை மேற்கொண்டு வருகிறேன் , CCTV பொருத்துவதுடன் அதற்கு தேவையான கருவிகள்  மொத்தமாக கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகிறேன் இவற்றின் மூலம் மாதம் ஒன்றிற்கு 15000 ரூபாய்க்கு குறையாமல் வருமானம் ஈட்ட முடிகிறது. இன்னும் தொழிலுக்கான இடங்கள் அதிகரிக்கும் போது மாத வருமானம் அதிகரிக்கும்.

குறைந்த சம்பளத்தில் எனது மற்றும் குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய சிரமப்பட்டு வந்த எனக்கு இந்த பயிற்சி மூலம் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. என்னை தொழில் முனைவோராகவும் மாற்றி இருக்கிறது, இந்த மாற்றத்தை ஏற்படுத்திய மத்திய அரசுக்கும், பிரதம மந்திரியின் திறன் மேம்பாட்டு பயிற்சி மைய்யத்திற்கும் , கற்றுத் தந்த ஆசிரியருக்கும் நன்றிகளை தெரிவிக்கின்றேன்.

No comments:

Post a Comment