Monday, 18 February 2019

PMKVY திறன் பயிற்சியால் அழகுகலை நிபுணர் ஆன ஈரோடு- மாலினி பிரியங்கா.


படித்த படிப்பிற்கான வேலைகிடைக்காமல் அன்றாட பொருளாதாரச் சிக்கலில் தவித்து வந்த ஈரோடு மாவட்டம், கொல்லம்பாளையத்தை சேர்ந்த மாலினி பிரியங்காவின் வாழ்வில் மற்றத்தை ஏற்படுத்திய தொழில்த்திறன் பயிற்சி குறித்து கூறியது.

இளநிலை கணிணி அறிவியல் பட்டம் பெற்ற நான் படிப்பின் பின்னர் திருமணமாகி ஒரு குழந்தையின் தாய் , எனது கணவர் மெக்கானிக்காக பணி புரிந்து வருகிறார், மாத வருமானம் 12000 ரூபாயில் விட்டு செலவுகள் மற்றும் இதர செலவுகளை மிகுந்த சிரமத்துடன் செய்து வந்தேன்.

நான் படித்து படிப்பிற்கு ஏற்ற வேலை தேடி கிடைக்காத நிலையில் வேறு ஏதேனும் தொழில் ஆரம்பிக்கலாம் என்ற நோக்கத்தில் பல்வேறு முயற்சிகள் செய்துகொண்டு இருந்தேன் அந்த நேரத்தில் பத்திரிகை விளம்பரம் ஒன்றில் ஈரோடு Skills India Foundation-Erode பயிற்சி மையத்தில் இலவச பிரதம மந்திரியின் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெறுவதாக பார்த்தேன். நேராக சென்று பயிற்சி மைய நிர்வாகி ஸ்டீபன்ராஜ் சார் அவர்களிடம்  , பயிற்சிகள் குறித்தும் பயிற்சியின் பின்னான தேர்வு குறித்தும் ,சான்றிதல் குறித்தும் தெரிந்து கொண்டேன்.

அதில் உதவி அழகுகலை நிபுணர் பயிற்சி எனக்கு பிடித்துப் போக அதற்காக  விண்ணப்பித்தேன் 2 ½  மாத காலம் (290 மணி நேரம்) பயிற்சி நடத்தப்பட்டது பயிற்சி ஆசிரியர் வாஹிதா பேகம் அவர்கள் மிகவும் திறன்பட செயன்முறை விளக்கங்களோடு நேர்த்தியாக எங்களுக்கு கற்றுத்தந்தார்கள். பயிற்சியின் போது சமீனா,பவி, அர்ச்சானா ஆகியோர் எனக்கு நல்ல தோழிகள் ஆனார்கள். பயிற்சிக் காலத்தில் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகள் ,கலைத்திறன் போட்டிகள் அனைத்திலும் ஆர்வத்தோடு கலந்துகொண்டேன்.

பயிற்சியின் முடிவில் நடத்தப்பட்ட செயன்முறை மற்றும் எழுத்துத் தேர்வில் தேர்ச்சியடந்து மத்திய அரசின் சான்றிதலைப் பெற்றுக் கொண்டேன், பயிற்சி மையத்தினால் வழங்கப்பட்ட அறிவுரையின் படி ஒரு அழகுக்கலை பார்லர் ஒன்றில் 3 மாதகாலம் பணியாற்றினேன், பின்னர் எனது வீட்டுடன் சேர்ந்த  அரை ஒன்றில் அழகுக்கலை பார்லருக்கான பொருட்கள் கொள்முதல் செய்து தற்போது சுயமாக அழகுகலை பார்லர் நடத்தி வருகிறேன் நாள் ஒன்றிற்கு 500 ரூபாய் குறைவில்லாமல் மாதம் ஒன்றிற்கு செலவுகள் போக 10000 ரூபாய்வரை வருமானம் ஈட்ட முடிகிறது. அத்துடன் திருமணம், சடங்கு போன்றவற்றிற்கான   பெண் அலங்காரம் செய்வதன் மூலம் முகூர்த்த காலங்களில் தனியாக வருமாணம் ஈட்ட முடிகின்றது. வீட்டில்  இருந்தபடியே வேலை என்பதால் என் குழந்தையையும் வீட்டு வேலைகளையும் பார்த்துக் கொள்ள முடிகிறது.

இன்று எங்கள் குடும்பத்தை நல்ல நிலையில் கொண்டு செல்ல எனது வருமானமும் பெரும் உதவியாக இருக்கிறது, இந்த மகிழ்ச்சிகரமான மாற்றங்களை என் வாழ்வில் ஏற்படுத்திய மத்திய அரசின் (PMKVY) பிரதம மந்திரி திறன் மேம்பாட்டு திட்டத்திற்கும், Skills India Foundation-Erode பயிற்சி மையத்திற்கும்  பயிற்றுவித்த ஆசிரியருக்கும் எனது நன்றிகளை தெரிவிக்கின்றேன்.


No comments:

Post a Comment