என் பெயர் பிரசன்னா, நான்
ராஜபாளையத்தில் தாய்,தந்தையுடன் வசித்து வருகிறேன், தந்தை தனியார் தொழிற்சாலையில் ஊழியராகப்
பணியாற்றுகிறார். B.Sc வரைப் படித்துள்ள எனக்கு மேற்கொண்டு படிக்க குடும்ப பொருளாதார
சூழ்நிலை ஏதுவாக இல்லை,ஏதாவது வேலைக்கு செல்ல வேண்டும் என்றால் முன் அனுபவம் எதுவும்
இல்லததால் வேலை கிடைப்பதில் தொய்வுநிலை. அப்பொழுது தொலைக்காட்சி விளம்பரம் மூலம் தமிழ்நாடு திறன் பயிற்சி மேம்பாட்டுத் கழகத்தின்
மூலமாக (பிரதம மந்திரியின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் சார்பாக PMKVY 2.0) Skills
India Foundation ssRajapalayam நிறுவணம் குறுகிய கால திறன் பயிற்சிகளை அளிப்பதாக அறிந்து
தொழில் திறனை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது, அதோடு நின்று விடாமல்பயிற்சி
மையத்திற்கு சென்று விபரங்கல் அனைத்தும் கேட்டு அறிந்து கொண்டேன். பின் Self
Employed Tailor என்ற பயிற்சியை தேர்வு செய்தேன்.
பயிற்சி காலம் தொடங்கியவுடன்
பயிற்சி மையத்திற்கு தொடர்ந்து சென்று பயிற்சிகளை ஆர்வமாகவும், முறையாகக் கற்றுக் கொண்டேண். 380 மணி நேரம் (3 மாதகால ) பயிற்சியில் தையல் பயிற்சி ஆசிரியர் திருமதி .கவிதா மேடம் அவர்கள் தையல் வகைகள், பல்வேறுஆடைகள் வடிவமைத்தல் , எம்ப்ராய்டரி வேலை, அனைத்து வகையான ஆடைகள் அளவெடுத்து , வெட்டிதைப்பது என பல நுணுக்கங்களைக் கற்றுக் கொடுத்தார்.
இதன் மூலம் என்னால் திறம்பட பயிற்சியை கற்றுக்கொள்ள முடிந்தது.
பயிற்சியின் முடிவில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சியடைந்து தமிழ்நாடு திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சினால் வழங்கப்பட்ட சான்றிதலைப் பெற்றுக் கொண்டேன். தற்பொழுது Skills India Foundation ssRajapalayam நிறுவணம் ஏற்பாடு
செய்த வளாகத் தேர்வு(Placement) மூலம் ஒரு ஆயத்த ஆடை ஏற்றுமதி
நிறுவணத்தில் மேற்பார்வையாளராகப் பணிகிடைத்துள்ளது இதன் மூலம் மாத சம்பளமாக 8000/- கிடைக்கிறது, அதுமட்டுமில்லாமல் ஓய்வு நேரங்களில் வீட்டில் இருந்தே
அண்டை வீடுகளுக்குத் அனைத்து வகையான ஆடைகளையும் தைத்துக் கொடுக்கிறேன். இதன் மூலம்
மாத வருமாணமாக மாதம் 3000/- சம்பாதிகிறேன். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி
அளிக்கின்றது. இதன் மூலம் குடும்பம் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறது.
இந்த வாய்ப்பு தமிழ்நாடு
PMKVY
தொழில் திறன் பயிற்சியினால் எனக்கு கிடைத்தது என்றால் மிகையாகாது. Skills India Foundation ssRajapalayam நிறுவணத்திற்கும் என்னுடைய மணமார்ந்த
நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.