Thursday, 19 September 2019

ஹெப்சிபா டிசைனர்


என் பெயர் C.J.ஹெப்சிபா, நான் கன்னியாகுமரி மாவட்டம் எச்சவிலுகோணம்,பலுக்கள் பகுதியை சார்ந்தவர்,  நான் 12 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளேன், திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர், கணவர் எங்கள் பகுதியில் கூலி வேலைகளுக்கு செல்பவர், இவ்வாறு சிறு சிறு போராட்டங்களுடன் குடும்பம் நடந்து கொண்டிருந்ததுது. குழந்தைகளும், கணவரும் வெளியில் சென்றவுடன் நான் அன்றாட வீட்டு வேலைகள் முடித்துவிட்டு தொலைக்காட்சிப் பெட்டியில் தஞ்சம் ஆகி விடுவேன். இப்படியே சென்றால் குடும்பத்தில் பெரிய அளவில் முன்னேற்றமோ வருவாயோ இல்லை அதனால் எதாவது வேலைக்குச்  செல்ல வேண்டும் என்ற உந்துதல் என்னுள் இருந்தது, ஆனால் அதற்கான தொழில் பயிற்சி என்னிடம் இல்லை,

அப்பொழுதுதான் Skills India Foundation- Malaiyadi பயிற்சி மையத்தில் பிரதம மந்திரியின் (PMKVY) திறன் மேம்பாட்டு திட்டத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின்  மூலம் குறுகிய கால இலவச தையல் தொழில் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதாக தொலைக்காட்சி விளம்பரம் மூலம் தெரிந்து கொண்டேன். பின்னர்  பயிற்சிமையம் சென்று பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் திரு. ராஜா ரெக்சின் அவர்களின் மூலம் விவரங்கள் அனைத்தையும் தெரிந்து கொண்டேன்.

28/05/2019 அன்று தொடங்கிய பேட்ஜில் எனது பயிற்சி வகுப்புகள் ஆரம்பமானது 380 மணி நேரம் (2 மாத கால ) பயிற்சியில் தையல் பயிற்சி ஆசிரியர் திருமதி .பிகா புஷ்பா மேடம் அவர்கள்  தையல் வகைகள், பல்வேறு ஆடைகள் வடிவமைத்தல் , எம்ப்ராய்டரி வேலை, அனைத்து வகையான ஆடைகள் அளவெடுத்து , வெட்டி தைப்பது என பல தையல் பயிற்சி கற்றுக் கொடுத்தார். பயிற்சியின் போது நிறைய தோழிகளும் கிடைத்தனர். பயிற்சியில் ஒரு பகுதியாக தொழில்சாலை களுக்கு அழைத்து சென்று பயிற்சி அளித்தது மிகவும் பயனுள்ளதாக உள்ளது.பயிற்சியின் போது நடைபெற்ற ரம்ஜான் கொண்டாட்டம் மிகுந்த உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் தந்தது.
பயிற்சியின் முடிவில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சியடைந்து  மத்திய திறன் மேம்பாடு மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாடு கழகத்தின் மூலம் வழங்கப்பட்ட சான்றிதலைப் பெற்றுக் கொண்டேன். நான் பயிற்சியின் போது புதிய டிசைன்களில் ஆடைகளை வடிவமைப்பதில் அதிக ஆர்வம் கொண்டிருந்ததால் அதில் அதிக பயிற்சிகளை எடுத்துக்கொண்டேன். இப்போது ஹெப்சிபா டிசைனர் என்ற பொட்டிக்‌ஷாப் ஆரம்பித்து வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு ஆடைகளில் புது புது டிசைன்களில் தைத்து கொடுப்பதினால் நிறைய வாடிக்கையாளர்களையம் பெற்று எனது நிறுவணத்தை லாபகரமாகவும் நடத்தமுடிகிறது. மாதம் 18000/- த்திற்கு மேல் வருமாணம் கிடைக்கும் புதிய தொழிலமைந்தது பெறுமையாக உணர்கிறேன். இதன் மூலம் என் குடும்ப வருமாணம் அதிகரித்துள்ளது. எனது குடும்பமும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

எனக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்த தமிழ்நாடு ஸ்கில் டெவலப்மெண்ட் கார்ப்ரேசனுக்கும்(TNSDC), Skills India Foundation Malaiyadikum , பயிற்சி ஒருங்கிணைப்பாளர் திரு. ரெக்சிலினுக்கும் மற்றும் எனது பயிற்சி ஆசிரியை திருமதி. பிகா மேடத்திற்குமெனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

3 comments: