Thursday 19 September 2019

சுய தொழில் முனைவோர் ஆகிய பொன்மாரி


என் பெயர் பொன்மாரி நான் தேவிபட்டினம் என்ற சிறு கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன், எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர், கணவர் கூலித் தொழிலாளி அவருடைய வருமாணத்தை வைத்துதான் எங்கள் குடும்பம் வாழ்ந்து வந்தது. இன்றய சூழலில் அந்த வருமாணம் எங்கள் குடும்பதிற்கு போதுமானதாக இல்லை. அப்பொழுது தொலைக்காட்சி விளம்பரம் மூலம்  தமிழ்நாடு திறன் பயிற்சி மேம்பாட்டுத் கழகத்தின் மூலமாக (பிரதம மந்திரியின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் சார்பாக PMKVY 2.0) Skills India Foundation Rajapalayam நிறுவணம் குறுகிய கால திறன் பயிற்சிகளை அளிப்பதாக அறிந்து கொண்டேன்.
அதன் பின் பயிற்சி மையத்திற்கு சென்று விபரங்கல் அனைத்தும் கேட்டு அறிந்து கொண்டேன். பின் Sewing Machine Operator என்ற பயிற்சியை தேர்வு செய்தேன். பயிற்சி காலம் தொடங்கியவுடன் பயிற்சி மையத்திற்கு தொடர்ந்து சென்று பயிற்சிகளை ஆர்வமாகவும், முறையாகக் கற்றுக் கொண்டேண். 340 மணி நேரம் (3 மாதகால ) பயிற்சியில் தையல் பயிற்சி ஆசிரியர் திருமதி .காயத்திரி மேடம் அவர்கள்  தையல் வகைகள், பல்வேறுஆடைகள் வடிவமைத்தல் , எம்ப்ராய்டரி வேலை, அனைத்து வகையான ஆடைகள் அளவெடுத்து , வெட்டிதைப்பது என பல நுணுக்கங்களைக் கற்றுக் கொடுத்தார்.

பயிற்சியின் முடிவில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சியடைந்து  தமிழ்நாடு திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தினால் வழங்கப்பட்ட சான்றிதலைப் பெற்றுக் கொண்டேன். தற்பொழுது ஒரு ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவணத்தில் வீட்டில் இருந்தே நைட்டி தைக்கும் தயல் கலைஞராக பணியாற்றுகிறேன். இதன் மூலம் எந்த வடிவத்தில் வேண்டுமோ அந்த வடிவங்களில் வெட்டி எனது வீட்டிற்கே வந்து தந்து விடுவார்கள் அதற்குத் தேவையான நூல், பட்டன், ஊக்கு அனைத்தையும் த்ந்து விடுவார்கள். இது எனக்கு மிகுஎத மகிழ்ச்சி அளிக்கின்றது. இதன் மூலம் மாத வருமாணமாக மாதம் 7000/- சம்பாதிகிறேன். 

இந்த மாற்றமும் எனது வேலையும் தமிழ்நாடு PMKVY தொழில் திறன் பயிற்சியினால் எனக்கு கிடைத்த மிகப் பெரும் வாய்ப்பு என்றால் மிகையாகாது. Skills India Foundation Rajapalayam நிறுவணத்திற்கும் என்னுடைய மணமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


No comments:

Post a Comment