Thursday 19 September 2019

திருமதி. பிரியதர்சினியின் முற்போக்கு சிந்தனை


என் பெயர் R.பிரியதர்சினி, நான் கன்னியாகுமரி மாவட்டம் மூவத்துகோணம்,பலுக்கள் பகுதியை சார்ந்தவர்,  நான் 12 ஆம் வகுப்பு வரை படித்துள்ளேன், நான்கு பேர் கொண்ட எங்கள் குடும்பத்தில் இரண்டு குழந்தைகள், கணவர், மற்றும் நான். கணவர் எங்கள் பகுதியில் விவசாய வேலைகளுக்கு செல்பவர், கணவரின் வருமாணத்தில் குடும்பம் நடந்து கொண்டிருந்ததுது. நானும் எனது கணவருடன் சேர்ந்து விவசாய வேலைகளுக்குச் செல்வேன். ஆனால் விவசாய வேலைகள் வருடம் முழுவதும் இருப்பதில்லை அதனால் இதற்கு மாற்றாக வேறு தொழிலையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் என்னுள் இருந்தது.

அப்பொழுதுதான் Skills India Foundation- Malaiyadi பயிற்சி மையத்தில் பிரதம மந்திரியின் (PMKVY) திறன் மேம்பாட்டு திட்டத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின்  மூலம் குறுகிய கால இலவச தையல் தொழில் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதாக தொலைக்காட்சி விளம்பரம் மூலம் தெரிந்து கொண்டேன். பின்னர்  பயிற்சிமையம் சென்று பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் திரு. ராஜா ரெக்சின் அவர்களின் மூலம் விவரங்கள் அனைத்தையும் தெரிந்து கொண்டேன்.

28/05/2019 அன்று தொடங்கிய பேட்ஜில் எனது பயிற்சி வகுப்புகள் ஆரம்பமானது 380 மணி நேரம் (2 மாத கால ) பயிற்சியில் தையல் பயிற்சி ஆசிரியர் திருமதி .பிகா புஷ்பா மேடம் அவர்கள்  தையல் வகைகள், பல்வேறு ஆடைகள் வடிவமைத்தல் , எம்ப்ராய்டரி வேலை, அனைத்து வகையான ஆடைகள் அளவெடுத்து , வெட்டி தைப்பது என பல தையல் பயிற்சி கற்றுக் கொடுத்தார். பயிற்சியின் போது சலீலா, மற்றும் பிந்து என்ற தோழிகளும் கிடைத்தனர். பயிற்சியில் ஒரு பகுதியாக தொழில்சாலை களுக்கு அழைத்து சென்று பயிற்சி அளித்தது மிகவும் பயனுள்ளதாக உள்ளது.பயிற்சியின் போது நடைபெற்ற ரம்ஜான் கொண்டாட்டம் மிகுந்த உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் தந்தது.
பயிற்சியின் முடிவில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சியடைந்து  மத்திய திறன் மேம்பாடு மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாடு கழகத்தின் மூலம் வழங்கப்பட்ட சான்றிதலைப் பெற்றுக் கொண்டேன். இப்பொழுது வீட்டிலேயே ஒரு பகுதியில் தையல் கடை ஆரம்பித்து தைத்து வருகிறேன் எனது வாடிக்கையாளர்களில் நிறயப்பேர் கல்லூரி மாணவிகள் அதனால் எனக்க்கு தொடர்ச்சியாக ஆடைகள் தைக்க ஆர்டர் கிடைக்கிறது  இதனால் மாதம் 12000/- த்திற்கு மேல் வருமாணம் கிடைக்கிறது. இதன் மூலம் என் குடும்ப வருமாணம் அதிகரித்துள்ளது. எனது குடும்பமும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

எனக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்த தமிழ்நாடு ஸ்கில் டெவலப்மெண்ட் கார்ப்ரேசனுக்கும்(TNSDC), Skills India Foundation Malaiyadikum , பயிற்சி ஒருங்கிணைப்பாளர் திரு. ரெக்சிலினுக்கும் மற்றும் எனது பயிற்சி ஆசிரியை திருமதி. பிகா மேடத்திற்குமெனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment