Friday, 14 September 2012

TREE PLANTATION -SKILLS INDIA முடசல் ஓடை ஊரட்சி ஒன்றிய உயர்நிலைப் பள்ளியில் சுற்றுச் சூழல் விழிப்புணர்வு மற்றும் மரம் நடும் விழா:

முடசல் ஓடை கருவாடு ஏலமிடும் தளம்

கிள்ளையில் இருந்து பரங்கிப்பேட்டை செல்லும் வழியில் அமைந்துள்ள கடற்கரையோரக் கிராமம் தான் முடசலோடை சுமார் 200 குடும்பங்களைக் கொண்டுள்ள இந்த ஊர் கருவாட்டு தொழிலுக்கு மிகவும் பெயர் போனது நாமக்கல், ஈரோடு, திருப்பூர் உட்பட்ட மாவட்டங்களில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு தீவணமாக கருவாடுகள் இங்கிருந்துதான் லாறிகள் பலவற்றில் கொண்டு செல்லப் படுகின்றன.

முடசல் ஓடைப் பள்ளி முகவாயில்
இந்த ஊரில் சுனாமிக்கு பின்னரான அரசினதும் தனியார் தொண்டு அமைப்புகளினதும் வீட்டுத்திட்ட பணிகளுக்கு பின்னால் எல்லோரும் குடியிருப்பு வீடுகளில் வசித்து வருகின்றனர். இதனால் எல்லோருக்கும் தேவையான வீட்டு வசதி என்பது இவர்களுக்கு குறைவில்லாத நிலையிலே இருக்கின்றது. இந்த ஊரில் உள்ள உயர் நிலைப் பள்ளியில் இந்த ஊரைச் சேர்ந்த சுமார் 110 மாணவர்கள் வரை படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் கடந்த மாதம் வருகை தந்த SKILLS INDIA வின் கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. அருள்தேவன் அவர்கள் குழந்தைகள் பாராளுமன்றம் என்ற அமைப்பினை தலைமை ஆசிரியர் திரு. சிவகுமார் அவர்களது முன்னிலையிலும் திரு. ஜெயராஜ் அவர்களைப் பொறுப்பாக அமைத்து ஆரம்பித்து வைத்தார்.

மரங்கள் நடுவதற்கான இடத்தினை
 தயார் செய்யும் மாணவர்கள்
இந்த நிலையில் அவர்களது பள்ளி வளாகத்தில் பசுமை மற்றும் சுற்றுச் சூழல் அமைப்பினர் மரக் கன்றுகள் நடவேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். அதன் பேரில் அவர்கள் பள்ளியில் மரக் கன்றுகள் நடுவதற்காக அருள்தேவன் மற்றும் ஒருங்கினைப்பாளர் ஸ்ரீதரன் ஆகியோர் சென்று இருந்தனர். தலைமை ஆசிரியர் இல்லாத நிலையில் பொறுப்பாசிரியர் திரு. ஜெயராஜ் அவர்கள் ஆரம்பித்து வைக்க குழந்தைகள் பாராளுமன்றத்தின் பசுமை மற்றும் சுற்றுச் சூழல் துறையின் அமைச்சர் செல்வன்.திவாகர் தலைமையிலான நிவேதா, அருள்நாதன், பவித்ரா, மாதவன் ஆகியோரும் அவர்களுக்கு துணையாக விளையாட்டுத் துறையின் அமைச்சர் யுவராஜ், மற்றும் அவரது உறுப்பினர்கள் ரவிதரன், கமலி நிவேதா குணால் ஆகியோரும் இணைந்து கொண்டனர்.

மாணவிகள் மரக்கன்றுகளுடன்
 காலை.10.30 மணியளவில் மரக் கண்றுகளை நடுவதற்கான பணி ஆரம்பமானது. முதலில் மரக் கன்றினை நட வேண்டிய இடங்களை ஆசிரியரும் மாணவர்களும் தேர்வு செய்தனர். பின்னர் மரக் கன்று நடத் தேவையான உபகரனங்களை மாணவர்கள் அருகில் இருக்கும் வீடுகளில் இருந்து பெற்று வந்தனர். மாணவிகள் மரக்கன்றுகள் நடும் இடத்திற்கு தேவையான இயற்கை உரங்களான காய்ந்த மாட்டெரு, இலை குளைகள் மற்றும் இரபதமுடையா நல்ல மண்களை கொண்டுவந்து சேர்த்தனர்.

பாதுகாப்பு வேலி அமைக்கும்
 பணியில் மாணவர்கள்
5 இடங்களில் மரக் கன்றுகள் நடுவதற்கான இடம் தெரிவு செய்யப் பட்டு அதனை தயார் படுத்தும் செயலில் மாணவர்களும் ஒருங்கிணைப்பாளர் அருள்தேவன் ஆகியோர் ஈடுபட்டனர், மற்றும் சில மாணவர்களும் ஒருங்கினைப்பாளர் ஸ்ரீதரனும் அந்த மரக் கன்றுகளுக்கான பாதுகாப்பு வேலியினை அடைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டனர். சுமார் 11.30 மணியளவில் எல்லா இடமும் தயாரானது அதன் பின்னர் மதிய உணவின் பின்னர் மாலை வேலையில் மரக் கன்றினை நடலாம் என்று முடிவு எடுக்கப்பட்டு மானவர்கள் வகுப்பிற்கு சென்றுவிட ஆசிரியர் திரு. ஜெயராஜ் அவர்களும் மற்றும் பள்ளியின் உதவி பொறுப்பாசிரியரும் எம்மோடு பேசிய போது நாங்கள் நிறுவனத்தின் மூலம் செய்துவரும் இந்த பசுமை மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு  தொடர்பான செயற்பாடுகளை குறிப்பிட்டோம்.

மரக்கன்றுகள் நடப்படுகின்றன.
அப்போது அவர்கள் சார் கடந்த சுனாமிக்கு பின்னர் இந்த பகுதியில் பெரும்பாலான அடிகுழாய் நீர்கள் உப்புநீராகி விட்டது ஆனால் எங்கள் பள்ளியின் அடிகுழாய் நீர் நல்ல தண்ணிராகவே இருக்கின்றது அதனால் நீங்கள் சொல்வது போன்று மாணவர்களுக்கு சமையல் தோட்டம் அமைத்துக் கொடுக்க கூடிய வசதி உள்ளது இது பற்றி உங்களுக்கு உதவிகள் தேவையென்றால் எங்கள் பள்ளியின் பெற்றோர் குழு தலைவர் திரு. கப்பலோட்டிய தமிழன் அவர்களைச் சென்று பாருங்கள் எனக் கூறினார். மதிய உணவின் பின்னரான சந்திப்பாக திரு. கப்பலோட்டிய தமிழன் அவர்களைச் சந்தித்து நம் நிறுவனத்தினைப் பற்றியும் அதன் செயற்பாடுகள் பற்றியும் அவரிடம் எடுத்துக் கூறிய போது மிகவும் சந்தோசமடந்தார் எங்கள் பள்ளியில் உங்கள் செயற்பாடு தொடர்ச்சியாக இருக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த தோட்டம் அமைப்பதற்கு உங்களுக்கு என்னிடம் இருந்து எவ்வாறான உதவி தேவை படுகின்றது எனக் கேட்டார்.

பாதுகாப்பு வேலி அமைத்தல்
இந்த தோட்டத்துக்கு தேவையான பாதுகாப்பு வேலிக்கு உங்களிடம் வலைகள் ஏதும் இருந்தால் கேட்கலாம் என்று இருந்தோம் எனக் கேட்டோம். அடுத்த நிமிடம் சரி என உறுதியளித்த அவர் அதனை அடைக்க தேவையான கம்புகளையும் தான் வாங்கி தருவதாக கூறினார். நாளைக் காலையில் இவை எல்லாம் பள்ளியில் இருக்கும் எனக் கூறினார்.

ஆசிரியர்கள் முன்னிலையில் மரங்கள் நடப்பட்டன

அவரிடம் இருந்து விடைபெற்று அன்று பிற்பகலில் ஆசிரியர்கள் முன்னிலையில் மாணவர்கள் எல்லோருமாக அந்த மரங்களை வைத்து பாதுகாப்பு வேலி அமைக்கப் பட்டது. அதன் பின்னர் நாளை இங்கு சமையல் தோட்டம் அமைப்பதற்கு பெற்றோர் சங்க தலைவர் பொருட்கள் தருவதாக உறுதியளித்துள்ளார், எனவே அதனை நாங்கள் உங்கள் பள்ளியினில் மாணவர்களின் பங்களிப்போடு அமைப்பதற்கு அனுமதி தரவேண்டும் எனக் கேட்டோம். நாளைக் காலை தலைமை ஆசிரியர் அவர்கள் வந்தவுடன் அனுமதியினைப் பெற்றுக் கொள்ளுங்கள் எனக் கூறினர். அன்று அவர்களிடத்திலிருந்து விடைபெற்றோம்.


பள்ளியின் முகவாயில் அருகில்
 வைக்கப் பட்டிருக்கும் மரக்கன்று

No comments:

Post a Comment