Friday 14 September 2012

பரங்கிப் பேட்டை ஊரட்சியின் கீழ் உள்ள கலைஞர் நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் SKILLS INDIA’வினால் குழந்தைகள் பாராளுமன்றம் அமைக்கப் பட்டது.


SKiLLS INDiA தொண்டு நிறுவனம் கடலூர் மாவட்டத்தின் பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள கிராமங்களின் கல்வி வளர்ச்சிப் திட்டப் பணிகளில் தன்னை இணைத்துப் பணியாற்றி வருகின்றது. அந்த வகையில் பள்ளி மாணவர்களிடம் கல்வி, விளையாட்டு, சுகாதாரம், சுற்றுச் சூழல், பேரிடர் மேலாண்மை போன்ற செயற்பாடுகளில் மேலதிக திறனை வளங்குவதற்காகவும் அதற்காக அவர்களை தகமை படுத்தும் செயற்பாடுகளை ஆற்றி வருகின்றது.


இவற்றில் ஒரு செயற்பாடாக குழந்தைகளின் கல்வி, விளையாட்டு, உடல்நலம் மற்றும் சுற்றுச் சூழல் குறித்து மாணவர்களை ஒரு அமைப்பு ரீதியாக செயற்படுத்தும் முறையாக குழந்தைகள் பாராளுமன்றம் என்னும் மாணவர்களுக்கான குழுச் செயற்பாட்டு அமைப்பினை பள்ளிகளில் அமைத்து அதன் மூலம் அவர்களின் திறமைகளை ஒவ்வொரு துறையிலும் வளர்க்கின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது. கடந்த 10.09.2012 அன்று பரங்கிப் பேட்டை ஊராட்சியின் கீழ் உள்ள கலைஞர் நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் பாராளுமன்றம் நிறுவப்பட்டது.

அன்று காலை கலைஞர் நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் பாராளுமன்றம் அமைப்பதற்கான செயற்பாட்டினை கடலூர் மாவட்டத்தின் SKiLLS INDiA தன்னார்வ தொண்டு நிறுவன மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.அருள்தேவன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். காலை10.00 மணியளவில் நிறுவனத்தின் சார்பாக திரு.அருள்தேவன் அவர்களும், ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. ஸ்ரீதரன் அவர்களும் பள்ளிக்கு வருகை தந்தனர் அவர்களைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி. மங்கயற்கரசி அவர்கள் வரவேற்றார்.

பின்னர் காலை 10.30 மணியளைவில் பள்ளியின் அனைத்து மாணவர்களும் வரவழைக்கப்பட்டு அவர்கள் அனைவருக்கும் ஏற்கனவே அந்த பள்ளியில் கொடுக்கப் பட்ட பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது எடுக்கப்பட்ட ஒளிப் பதிவுகள் குறும் ஆவணப் படாமாக போட்டு காட்டப்பட்டது. அத்துடன் அவர்கள் பகுதியில் மாணவர்களின் கல்வி நிலை பற்றி எடுக்கப் பட்ட ஆவணப் படமும் திரையிடப் பட்டது. இதனை பார்வையிட்ட மாணவர்களுக்கு அவ்ர்களை திரையில் பார்த்தது அளவில்லாத மகிழ்ச்சியாக இருந்தது அத்தோடு மாணவர்களின் கல்வி செயற்பாட்டினை ஊக்குவிக்கும் பாடல்கள் போன்றன திரையிடப்பட்டது.


அதன் பின்னர் 5ம்- வகுப்பில் இருந்து 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் மாத்திரம் அமர்த்தி அவர்களுக்கு குழந்தைகள் பாராளுமன்றம் அமைப்பது தொடர்பாக ஒருங்கினைப்பாளர் ஸ்ரீதரன் அவர்களும், அருள்தேவன் அவர்களும் பேசினர். குழந்தைகள் பாராளுமன்றம் என்றால் என்ன , அந்த பாராளுமன்றத்தில் உள்ள குழுக்கள் என்னென்ன அவற்றின் செயற்பாடுகள் என்னென்ன என்பது பற்றியும் அவர்களது பள்ளியின் வளர்ச்சியில் இந்த அமைப்பின் செயற்பாடு எவ்வாறான மாற்றத்தை கொண்டுவரும் என்பது பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த அமைப்பு முறை உங்கள் பள்ளியில் அமைக்க உங்களுக்கு விருப்பமா என மாணவர்களிடம் கேட்டபோது ஆம் என்று உரத்த குரலில் ஆர்பரித்தனர். அதன் பின்னர் குழந்தைகள் பாராளுமன்றத்தில் உள்ள ஒவ்வொரு அமைச்சர் பதவிக்கும் அந்த அமைப்பின் கீழ் பணியாற்றும் மாணவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
1.முதலில் கல்வி அமைச்சராக 7ம் வகுப்பின் ஸ்ரீகாந்த் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார் அவரின் கீழ் உறுப்பினர்களாக காவியா-, கிருத்திகா,
சரண்யா- , அம்மு, பவாணி, ரம்யா, M.ரம்யா, சந்துரு ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர்.

2.அடுத்து விளையாட்டுத்துறை அமைச்சராக வீரம்மாள் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார் அவருடன் உறுப்பினர்களாக இளங்கோவன் , ரஞ்சிதா, சங்கீதா சத்தியா, சூர்யா, அங்கம்மாள், மாரியப்பன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
3. அதனைத் தொடர்ந்து பசுமை மற்றும் சுற்றுச் சூழல் துறை அமைச்சராக 7ம் வகுப்பை சேர்ந்த இரம்யா அவர்கள் தெரிவு செய்யப்பட்டார் அவருடன் உறுப்பினர்களாக தேவி, கஸ்தூரி, வீரபாண்டியன், ராகவி, நிலா, சிவகாமி, பன்னீர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

4. இறுதியாக சுகாதாரத்துறை அமைச்சராக அனித்தா அவர்கள் தேர்வானார் அவருடன் உறுப்பினர்களாக ஆனந்தி, சங்கீதா, நிலா, ராஜேஷ், மகா, தேவயாணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு பொறுப்பாசிரியராக திரு. குப்புசாமி ஆசிரியர் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார். இவர்களுக்கு எல்லோருக்கும் தலைமையாக பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர்கள் இருப்பார் என் கூறப்பட்டது. அதன் பின்னர் பேசிய தலைமை ஆசிரியர் திருமதி. மங்கயற்கரசி அவர்கள் இந்த பள்ளியின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு பணியாற்றி வரும் SKILLS INDIA நிறுவனத்தினருக்கு எங்களது நன்றிகளை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன். எங்கள் பள்ளியில் இவ்வாறான ஒரு குழந்தைகள் பாராளுமன்றம் அமைத்து அவர்களை நல்ல வழிகாட்டிகளாகவும் எல்லா துறையிலும் தேர்ந்தவர்களாக விளங்க நாங்கள் எப்போதும் செயற்படுவோம் அத்தோடு அவர்களின் செய்ற்பாடுகளுக்கு நிறுவனமும் துணையாக நின்று செயற்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இறுதியாக பொறுப்பாசிரியர் திரு.குப்புசாமி அவர்கள் பேசினார் இந்த குழந்தைகள் பாராளுமன்றம் என்பது ஒவ்வொரு பள்ளியிலும் தேவையான ஒன்று இதனை அமைப்பாக மாற்றி அவர்கள் செயற்படுவதற்கு ஊக்கமளித்த தன்னார்வ நிறுவனத்தினருக்கு எங்கள் நன்றிகள். நீங்களும் எம்மொடு இணைந்து இந்த மானவர்களின் வளர்ச்சியில் செயற்பட வேண்டும் எங்கள் பள்ளியின் தரத்தினை உயர்த்தும் நடவடிக்கையில் ஈடுபடவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். பின்னர் மாணவி அனித்தாவின் நன்றியுரையுடன் அன்றைய கூட்டம் முடிவுக்கு வந்தது.

  
        
.       

  
 


No comments:

Post a Comment