Friday 14 September 2012

கிள்ளை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் SKILLS INDIA வினால் குழந்தைகள் பாராளுமன்றம் அமைக்கப்பட்டது


கிள்ளை துவக்கப் பள்ளி மாணவர்களும்
 ஆசிரியர்களும்
சிதம்பரத்தில் இருந்து பிச்சாவரம் சுற்றுலா மையம் செல்லும் வழியில் அமைந்துள்ள பரங்கிப் பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றியமான கிள்ளை பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியிலும் தனது கல்வி வளர்ச்சிக்கான திட்டப் பணிகளை SKiLLS INDiA நிறுவனம் ஆற்றி வருகின்றது அந்த வகையில் குழந்தைகளின் குழுச் செயற்பாட்டுத் திறனை வளர்க்கும் குழந்தைகள் பாராளுமன்றம் என்ற அமைப்பினை ஆரம்பிப்பது தொடர்பாக நிறுவனத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருள்தேவன் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அந்த பள்ளி தலைமை ஆசிரியர் அவர்கள் 10.09.2012 அன்று நேரமளித்து இருந்தார். அதன்படி அன்று பிற்பகல் 2.00 மணியளவில்  கூட்டம் ஆரம்பமானது பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி. கெளரி அவர்கள் வரவேற்றார். அவரிடம் இதுபற்றி ஏற்கனவே அருள்தேவன் அவர்கள் பேசியிருந்ததினால் சுமார் 10 நிமிட நேரத்தில் மாணவர்கள் அனைவரும் வரவழைக்கப்பட்டனர். அவர்களிடம் எம்மை அறுமுகம் செய்து வைத்தார் தலைமை ஆசிரியர் அவர்கள்.

குழந்தைகள் பாராளுமன்றம் தொடர்பாக
 ஸ்ரீதரன் அவர்கள் விளக்குகின்றார்
அவர்கள் 1-இல் இருந்து 5ம் வகுப்புவரையாக இருந்ததினால் அதிலிருந்து 3ம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரையான மாணவர்களுடன் கலந்துரையாடல் தொடர்ந்தது. பின்னர் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதரன் அவர்கள் பேசும் போது முதலில் அந்த பள்ளி வளாகத்தினை மிகவும் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் வைத்திருக்கும் மாணவர்களுக்கும் ஆசிரியருக்கும் பாராட்டினை தெரிவித்துக் கொண்டு இது போன்று உங்கள் பள்ளியின் எல்லா துறைகளிலும் உங்களை ஊக்கப்படுத்தும் செயற்பாடாக எங்கள் தன்னார்வ தொண்டு நிறுவனமானது குழந்தைகள் பாராளுமன்றம் என்ற அமைப்பினை ஒவ்வொரு பள்ளியிலும் ஆரம்பித்து செயற்படுத்தி வருகின்றது. இந்த அமைப்பினை உங்கள் பள்ளியிலும் செயற்படுத்துவதன் மூலம் உங்களது திறன்களையும் குழந்தைகளுக்கு இருக்கின்ற தலைமை தாங்கும் பண்பினையும் பள்ளியின் வளர்ச்சியினையும் ஒருமித்து அடைய முடியும் என்று கூறினார்.
  
அதன்பின் குழந்தைகள் பாராளுமன்றம் என்றால் என்ன அதன் கீழ் உள்ள அமைச்சர்கள் பற்றியும் அதன் ஒவ்வொன்றினது செயற்பாடுகள் பற்றியும் அதனை எப்படி குழந்தைகளாகிய நீங்கள் செய்ய முடியும் என்பது பற்றியும் அவர்களுக்கு புரிகின்ற வகையில் விளக்கமளித்தார். இந்த பாராளுமன்றம் உங்கள் பள்ளியில் செயற்பட உங்களுக்கு விருப்பமா என்ற கேள்விக்கு மாணவர்களின் ஒட்டுமொத்த குரலும் ஆமோதித்தன. அதன் பின்னர் பள்ளியின் ஆசிரியை சுமதி அவர்கள் இந்த பாராளுமன்றத்தின் பொறுப்பாசிரியராக தெரிவு செய்யப்பட்டார், அதனைத் தொடர்ந்து  4ம் 5ம் வகுப்பை சேர்ந்த மாணவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.


துறைகளின் அமைச்சர்கள் தேர்வு செய்யப் படுதல்
1.இதன் போது முதலில் கல்வித்துறை அமைச்சராக 5ம் வகுப்பை சேர்ந்த S. வைஷ்ணவி அவர்கள் தெரிவு செய்யப்பட்டார் அவருடன் உறுப்பினர்களாக அபினயஸ்ரீ -5, அபியுன்சல்மா-4, நிரஞ்சனா-4, ஜெகன் -5 ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

2.அடுத்து விளையாட்டுத் துறை அமைச்சராக 5ம் வகுப்பை சேர்ந்த ஸ்ரீநாத் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார், அவருடன் உறுப்பினர்களாக தினேஸ்-5, அபினயா-5 வைத்தியநாதன் 5, அஞ்சுகம்-5 ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

3.பின்னர் உடல்நலம் மற்றும் சுகாதாரத் துறையின் அமைச்சராக 5ம் வகுப்பை சேர்ந்த ப்ரீத்தி அவர்கள் தெரிவு செய்யப்பட்டார், அதன் உறுப்பினர்களாக தாரணி-5, பவித்ரா-4, பரமேஸ்வரி-5, நவின்ராஜ்-5 ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

4.இறுதியாக பசுமை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக  5ம் வகுப்பை சேர்ந்த அமர்நாத் அவர்கள் தேர்வானார் அவருடன் உறுப்பினர்களாக சந்தோஸ்குமார்-5, ஏழுமலை-5, தாரிபாபேகம்-4, S.K.பவித்ரா-4 ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

ஒவ்வொரு துறையின் அமைச்சர்களும்
 உறுதி மொழி எடுத்துக் கொள்கின்றனர்.
தெரிவு செய்யப்பட்ட அமைச்சர்கள் அனைவரும் முன்பு வந்து தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டனர், பின்னர் தாங்கள் இந்த பள்ளியின் வளர்ச்சிக்காகவும் மாணவர்களின் திறன்களை வளர்ப்பதற்காகவும் செயற்படுவோம் என உறுதி எடுத்துக் கொண்டனர். பின்னர் தலைமை ஆசிரியர் திருமதி. கெளரி அவர்கள் பேசும் போது எங்கள் பள்ளியின் குழந்தைகள் மிகவும் திறமையானவர்கள் அவர்களை பல்வேறு வகையான திறன்களை வளர்க்கவேண்டும் என்ற முனைப்பில் நாங்கள் செயற்பட்டு வருகின்றோம். அந்த வகையில் இந்த குழந்தைகள் பாராளுமன்றம் என்பது குழந்தைகளை மேலும் ஊக்கப் படுத்தும் ஒரு அமைப்பாக பள்ளியில் நிறுவப்பட்டதாக நான் நினைக்கின்றேன். இதை ஆரம்பிப்பதோடு நின்றுவிடாமல் நீங்கள் எங்கள் குழந்தைகளின் வளர்ச்சியில் உங்களது பங்களிப்பினை ஆற்ற வேண்டும் என SKILLS INDIA நிறுவனத்தினை கேட்டுக் கொள்கின்றேன் எனக் கூறினார் பின்னர் பொறுப்பாசிரியர் சுமதி அவர்கள் இதன் பொறுப்பாசிரியாராக செயற்படுவதில் மிக்க மகிழ்ச்சி இந்த குழந்தைகள் பாராளுமன்றத்தினை அமைத்த தொண்டு நிறுவனத்தினருக்கு நன்றி இது போல எங்கள் பள்ளி வளர்ச்சிக்கு நீங்கள் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன் எனக் கூறிமுடித்தார். 

1 comment:

  1. Super sir i want how to manage this please give some ideas

    ReplyDelete