கடந்த நவம்பர் 14 ம் தேதி
இந்தியாவின் எல்லா பள்ளிகளும் குழந்தைகள் தினத்தை விமர்சையாக கொண்டாடி முடித்தனர்
பள்ளிகளின் கலை நிகழ்வுகளும் பெரிய பள்ளிகள் அன்றைய தினம் சிறப்பு விருந்தினர்களை
அழைத்து அமர்க்களப் படுத்தியது.
புதுமையான விளையாட்டுக்கள், நிகழ்ச்சிகள் மூலம் நடத்தப்பட்ட இந்த குழந்தைகள் தின நிகழ்வு மகிழ்ச்சியாகவும், மாணவர்களுக்கு போட்டியிலும், நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலை கொடுப்பதாக இருக்கின்றது என்று ஆசிரியர்கள் நன்றி கூறினர். நிகழ்ச்சியில் பங்கெடுத்த மாணவர்கள் இன்றைய தினமும் தீபாவளி போல் தாம் மகிழ்ச்சியாக இருந்ததாக கூறினர் தாங்கள் வென்றெடுத்த பரிசுகளை வீடுகளில் கொண்டு காட்ட வேண்டும் என்று கூறினர்.
ஆனால்
பள்ளிக்கு ஒரு ஆசிரியர் மட்டுமே சென்றுவரும் சிறு சிறு பள்ளிகளிலும் மலைப்புறகிராம
பள்ளிகளிலும் தங்களின் சிறுவர் தினக் கொண்டாட்டத்தை பார்க்க ஆள் இல்லை என்ற
வருத்தம் அவர்களிடத்திலே இருந்தது அந்த வகையில் இந்த முறை இந்த சிறு பள்ளிகளுடன்
சேர்ந்து தமது குழந்தைகள் தின விழாவை சிறப்பிப்பது என்ற முடிவில் கடந்த 14,15,
ஆகிய நாட்களில் தாளவாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரேபாளயம்,காணக்கரை, கேர்மாளம்,
மாவள்ளம், தேவநத்தம், கோட்டாடை போன்ற மலைவாழ் குழந்தைகள் கல்வி பயிலும் பள்ளிகளில்
SKILLS INDIA இணைந்து குழந்தைகள் தினக் கொண்டாட்டத்தை நடத்தியது.
நவம்பர்
14 ம்தேதி அரேபாளயம், காணாக்கரை, கேர்மாளம் பள்ளிகளிலும் 15 ம்தேதி மாவள்ளம்,
தேவநத்தம், கோட்டாடை பள்ளிகளிலும் இக் குழந்தைகள் தினக் கொண்டாட்டம் சிறப்பாக
நடைபெற்றது மாணவர்களின் ஆடல் பாடல், கதை கூறல் அபினயம் என கலக்க அதில் பங்கு கொண்ட
அனைவருக்கும் சிறு சிறு பரிசுகள் வழங்கி ஊக்கமளிக்கப்பட்டது, அத்துடன் ஒவ்வொரு
வகுப்பு மாணவர்களுக்கும் அவர்களின் வயதுக்கும் திறமைக்கு ஏற்ற போட்டிகள்
நடத்தப்பட்டன போட்டியில் கல்ந்து கொண்ட அனைவருக்கும் சிறு பரிசுகளும் வெற்றி
பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது.
அரேபாளயம் நடுநிலைப் பள்ளியில் இடம்பெற்ற குழந்தைகள் தின நிகழ்வு
போட்டிகளில் கலந்து கொண்ட மாணவர்களும் அவர்களுக்கு தலைமை ஆசிரியர் பரிசுகள் வழங்குகிறார்
கேர்மாளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின நிகழ்வு
மாவள்ளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின நிகழ்வு
தேவநத்தம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் குழந்தைகள் தினக் கொண்டாட்டம்
குழந்தைகள் தினக் கொண்டாட்டத்தின் மகிழ்ச்சியில் சிறுவர்கள் கோட்டாடை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இடம்பெற்ற குழந்தைகள் தினக் கொண்டாட்டம் |
புதுமையான விளையாட்டுக்கள், நிகழ்ச்சிகள் மூலம் நடத்தப்பட்ட இந்த குழந்தைகள் தின நிகழ்வு மகிழ்ச்சியாகவும், மாணவர்களுக்கு போட்டியிலும், நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலை கொடுப்பதாக இருக்கின்றது என்று ஆசிரியர்கள் நன்றி கூறினர். நிகழ்ச்சியில் பங்கெடுத்த மாணவர்கள் இன்றைய தினமும் தீபாவளி போல் தாம் மகிழ்ச்சியாக இருந்ததாக கூறினர் தாங்கள் வென்றெடுத்த பரிசுகளை வீடுகளில் கொண்டு காட்ட வேண்டும் என்று கூறினர்.
நிகழ்ச்சியினை
ஸ்கில்ஸ் இந்தியாவின் (SKILLS INDIA) மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.நா,சிறிதரன்
அவர்கள் செய்திருந்தார், இது போன்ற நிகழ்வுகளை இனி வரும் காலங்களில் இதைவிட
சிறப்பாக செய்யவும் மாணவர்கள் எல்லோரையும் ஊக்கமும் அவர்களின் திறன்களை வெளிக்
கொண்டுவரும் செயற்பாட்டினையும் செய்யும் பணியில் Skills India தொடர்ந்து
ஈடுபடும்..
No comments:
Post a Comment