Thursday, 29 November 2012

பெண் குழந்தைகளின் கல்வியின் அவசியம் குறித்த கையெழுத்து இயக்கம்-Campaign for Promotion of Girl Child Education-Skills India


கற்கும் பாரதம், அனைவருக்கும் கல்வி என்று எத்தனை திட்டங்களை அரசுகள் கொண்டுவந்த போதிலும் இன்னும் பல கிராமங்களிலும் நகரின் சேரிபுற பகுதிகளிலும் மாணவர்களின் கல்வி அளவினை பெரிதாக ஒன்றும் அதிகரிப்புச் செய்ய முடியவில்லை அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகளின் கல்வி அவர்களின் பால்ய வயதிலே பாழ் பட்டுப் போவது கொடுமையான பாலினப் பாகுபாடாய் இன்னும் பல கிராமங்களிலும் நகரப்புறங்களிலும் காணத்தான் செய்கின்றன.

இந்த பாலினப் பாகுபாட்டில் இருந்து விடுபடமுடியாமல் பல சமுதாயத்தில் வாழும் பெண்களும் தமது ஆரம்ப கல்வியுடனோ அல்லது அதுவும் இல்லாமலோ.. இடுப்பில் குழந்தையினைத் தூக்கிக் கொண்டு வீடுகளில் உட்கார்ந்து குழந்தைகளை பராமரிக்கும் பணியாளாகிவிடும் இந்த அவலங்கள் இன்னும் குறைந்தபாடில்லை.

கல்வி எல்லோருக்கும் பொதுவானது குழந்தைகளில் ஆண் பெண் பாகுபாட்டை நீக்குதல் பெண்கல்வி உரிமையை உறுதி செய்தல் பெண்குழந்தைகள் மீதான அடக்குமுறைகளை ஒழிக்க வேண்டும் என்றும் இவற்றை எல்லோருக்கும் தெரியும் விதமாகவும் அந்த எண்ணங்களை அவர்களின் மனதில் விதைக்கும் வகையிலும், இந்த கையெழுத்துக்கள் மூலம் பெண்குழந்தைகளின் கல்விக்காய் சிறப்பு திட்டம் ஒன்றினை மத்திய, மாநில அரசுகள் கொண்டுவரவேண்டும் என்றும் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் கையெழுத்து பிரகடனம் ஒன்றை ஸ்கில்ஸ் இந்தியா (Skills India) ஏற்பாடு செய்திருந்தது.

சென்னை, மதுரை,திருச்சி, கோவை என நான்கு மாநகரங்களின் பல்வேறு இடங்களில் ஸ்கில்ஸ் இந்தியாவின் தன்னார்வ தொண்டர்கள் கையெழுத்து பிரகடனத்தினை நடத்தி அங்குள்ள ஒவ்வொருவருக்கும் விளக்கம் அளித்தனர். இந்த நான்கு நகரங்களில் சந்தித்து கையெழுத்து பெற்ற மக்களின் எண்னிக்கை 20132 ஐ எட்டி சாதித்தனர். இருபதாயிரம் மக்களுக்கு மேலாக சந்தித்து விளக்கம் கொடுத்து மக்களின் சாதாரண மக்களின் மத்தியில் பெண்குழந்தைகளின் கல்வியின் அவசியம் பற்றிய விளக்கங்களை அளித்த தன்னார்வ தொண்டர்களுக்கும் அவர்களிடம் நின்று விளக்கத்தினைப் பெற்றுச் சென்ற அத்தனை பேரும் போற்றத்தக்கவர்கள்…….


மதுரை மாநகரில் நடைபெற்ற கையெழுத்து இயக்கம்

மதுரையின் மையப்பகுதிகளான பெரியார் பேரூந்து நிலையம், மீனாட்சி அம்மன் கோயில் பகுதி, தல்லாக்குளம், காந்திமியூசியம்,கோரிப்பாளயம் போன்ற நகரின் மக்கள் கூடும் முக்கியமான பகுதிகளில் ஸ்கில்ஸ் இந்தியாவின் தன்னார்வலர்கள் முகமது அஸ்லம்,M.K.மகேஸ்வரி போன்றோர் 4548 கையொப்பங்களை மக்களிடம் இருந்து பெற்றிருக்கின்றனர். இவர்கள் ஒவ்வொருவரிடமும் விழிப்புணர்வு அளித்திருக்கின்றனர்.







சென்னை மாநகரத்தில் நடைபெற்ற கையெழுத்துப் பேரியக்கம்

சென்னையின் மாநகரின் முக்கிய பகுதிகளான அண்ணாநகர், கோயம்பேடு பேரூந்து நிலையம், அம்பத்தூர் தொழிற்பேட்டை, மெரினா கடற்கரை, வள்ளுவர் கோட்டம், சைதை துரைசாமி IAS பயிற்சி மையம் போன்ற பகுதிகளிலும் மேலும் நகரின் மக்கள் கூடும் பெரும் பகுதிகளிலும் 5885 கையெழுத்துக்கள் மக்களிடம் விளக்கம் அளிக்கப்பட்டு பெறப்பட்டு இருக்கின்றன இந்த பணியினை ஸ்கில்ஸ் இந்தியாவின் தன்னார்வ பணியாளர்கள் திரு.மகேஸ்கார்த்திக் , திரு. ரமேஸ், கெளரீஸ்வரன் போன்றோர் ஈடுபட்டிருந்தனர். 





  


கோவை மாநகரின் கையெழுத்து பேரியக்கம்

கோயம்புத்தூரின் பிரதான சாலைகளிலும், காந்திபுரம் நகர பேரூந்து நிலையம் ,மற்றும் புறநகர பேரூந்து நிலையம், விமானநிலையம், புரூக்பில்ட்ஸ், மற்றும் GRD கலைக் கல்லூரி, PSG கலைக் கல்லூரி, மற்றும் பிரதான மால்கள் அமைந்திருக்கும் பகுதிகள், R.S புரம் என பல பகுதிகளில் திரு.நா.சிறிதரன் மற்றும் R.பிரதாப் ஆகிய தன்னார்வ தொண்டர்கள் கல்லூரி மாணவர்கள் உதவியுடன் 6524 கையெழுத்துக்களை மாநகர மக்களிடம் இருந்து விளக்கம் அளித்துப் பெற்றிருந்தனர்.












திருச்சிராப்பள்ளி மாநகரில் இடம் பெற்ற கையெழுத்து பேரியக்கம்
திருச்சிராப்பள்ளி மாநகரத்தின் மையப்பகுதிகள், ரயில்நிலையம், மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம், பேரூந்துநிலையம், சென் ஜோசப் கல்லூரி,மற்றும் மாநகரில் மக்கள் அதிகமாக கூடும் சந்தைப் பகுதிகள் என பல்வேறு பகுதிகளிலும், கல்வி நிலையங்களிலும் ஸ்கில்ஸ் இந்தியாவின் தன்னார்வ தொண்டர்கள் திரு.சதீஸ், திரு. ராஜா ஆகியோர் அவர்களது நண்பர்களுடன் இந்த கையெழுத்து பணியிணை மேற்கொண்டு நடத்தினர் 

                                                  




மாதர்தம்மை இழிவுசெய்யும் மடமைதனை ஒழிப்போம் என்ற பாரதியின் வாக்கினை மனதில் கொள்வோம்… ஒரு பெண்னை கல்வி கற்க வைப்பதன் மூலம் நம் சந்ததியினையே கல்வி கற்ற சந்ததியாக மாற்ற முடியும்….

No comments:

Post a Comment