Tuesday, 11 December 2018

முன்னேற்றத்திற்கு வழிவகுத்துக் கொண்ட வளையப்பட்டி உமாராணி


என்னுடைய குடும்பத்தில் மொத்தம் ஐந்து பேர், தந்தை டிரைவர் ஆக பணியாற்றுகிறார் அதன் மூலம் மாத வருமாணமாக 6000/ கிடைக்கும். 12ஆம் வகுப்பு வரை படிதுள்ள நான் குடும்ப சூழ்நிலை காரணமாக உயர் கல்வி படிக்க முடியவில்லை அதனால் அருகில் உள்ள ஜவுளிக் கடையில் பணிபுரிந்து வந்தேன் அதிலும் சொற்ப வருமாணம் தான் கிடைத்தது மேலும் என்னுடைய முனேற்றம் என்பது சிறிதும் இல்லை. அதனால் வேறு ஏதேனும் படிக்க வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

அந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் Skills India Foundation-Kumbakonam பயிற்சி மையத்தில் பிரதம மந்திரியின் (PMKVY) திறன் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் குறுகிய கால தொழில் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதாக எங்கள் ஊரில் உள்ள விளம்பர சுவரொட்டியில் பார்த்தேன்.அவர்களைத் தொடர்புகொண்டு பயிற்சி மையத்திற்கு சென்று  விபரங்கள் அனைத்தும் கேட்டு அறிந்து கொண்டேன்.

பயிற்சி மைய நிர்வாகி திருமதி-சரண்யா மேடம் அவர்களின் வழிகாட்டலில் எனது கல்வித் தகுதிற்கு ஏற்றால்போல் Retail Sales Associate பயிற்சியை தேர்வு செய்து படித்து வந்தேன், எங்கள் எனது பயிற்சி ஆசிரியர் திருமதி. காயத்திரி அவர்கள் சிறப்பான முறையில் எங்களுக்கு வகுப்புகளை நடத்தினார்,  வியாபாரத் துறை சார்ந்த படிப்பு என்பதால் பல கடைகள் அழைத்து சென்று செயன்முறை பயிற்சி அளித்தனர்  320 மணி நேரம் கொண்ட பயிற்சியானது 3 மாதகாலம் தொடர்ச்சியாக சென்று கற்று வந்தேன்.

பயிசியின் முடிவில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சியடைந்து மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சும் , இந்திய ஹெல்த் கேர் செக்டார் ஸ்கில் கவுண்சிலும் வழங்கும் சான்றிதலைப் பெற்றுக் கொண்டேன்.  அதன் பின்னர்  பயிற்சி மையத்தின் வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் திரு .ராமநாதன் சார் அவர்கள்  எனக்கு கும்பகோணத்தில்  உள்ள டிப்பார்ட்மெண்ட் ஸ்டோரில் computer Operater ஆக பணி புரிந்து வருகிறேன்.

மாதம் ஒன்றிற்கு 7000/- வருமானத்தில் என் குடும்பத்தினருக்கு என்னாலான பொருளாதார உதவியை செய்யக் கூடிய நிலையில் இருக்கிறேன். இந்த மற்றமும் எனது வேலையும் PMKVY தொழில் திறன் பயிற்சியினால் எனக்கு கிடைத்த மிகப் பெரும் வாய்ப்பு என்றால் மிகையாகாது.

என்னையும் என் போன்று பயிற்சியில் கலந்து கொண்டு இன்று பணி புரிந்து வருகின்ற பல ஏழை மாணவர்களின் வாழ்வை மாற்றிய மத்திய அரசின் PMKVY திட்டத்திற்கும் , பயிற்சி வழங்கிய Skills India Foundation Kumbakonam பயிற்சி மையத்திற்கும் எனது பயிற்சி ஆசிரியருக்கும் எனது நன்றிகள்

No comments:

Post a Comment