பென்னாகரம் – 123, சுண்ணாம்புக்கார வீதியில் வசிக்கும் திருமதி. அமுதா வுக்கு தொழில் திறன் கல்வியின் மூலம் தனக்கு கிடைத்த வெற்றியை பகிர்ந்து கொள்கிறார்.
கணவர்
பெயர் திரு. வெங்கடாச்சலம் மசாலா
பொருட்கள் விற்பனை பிரதிநியாக பணியாற்றுகிறார்.
எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள்
உள்ளனர். குடும்ப சூழ்நிலை காரணமாக
5ஆம் வகுப்பு வரை மட்டுமே
படித்துள்ளேன், படித்த இளைஞர்களே வேலை
வாய்ப்பு இல்லாத இந்த சிறிய
ஊரில் எனக்கு என்ன வேலை
கிடைக்கும் என்ற கவலை எனக்குள்
எப்போதும் இருந்து கொண்டே இருந்தது.
அப்பொழுதுதான் Skills India Foundation Pennagaram பயிற்சி மையத்தில் பிரதம
மந்திரியின் (PMKVY)
திறன் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் குறுகிய கால தையல் தொழில்
பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதாக திருமதி. லக்ஷ்மி மூலம் அறிந்துகொண்டேன்.
பின்னர்
Skills India Foundation Pennagaram
பயிற்சி மையத்திற்கு சென்று விபரங்கள் அனைத்தும் கேட்டு அறிந்து கொண்டேன். திட்டம் குறித்து பயிற்சி
மையஒருங்கிணைப்பாளர் திரு.கென்னடி சார் அவர்கள் எடுத்துக்கூறினார்கள்,அவரது வழிகாட்டுதலின் படி சுயதொழில் தையல் பயிற்சி
வகுப்பில் சேர்ந்து கொண்டேன்.
380 மணி
நேரம் (3 மாதகால ) பயிற்சியில் தையல் பயிற்சி ஆசிரியர் திருமதி . பெருசியா மேடம் அவர்கள் தையல் வகைகள், பல்வேறு
ஆடைகள் வடிவ
மைத்தல், எம்ப்ராய்டரி வேலை, அனைத்து வகையான ஆடைகள் அளவெ டுத்து , வெட்டிதைப்பது என பல தையல் நுட்பங்களை கற்றுக்கொடுத்தார்.
பயிற்சியின் முடிவில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சியடைந்து மத்திய
திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சினால் வழங்கப்பட்ட சான்றிதலைப் பெற்றுக் கொண்டேன். பயிற்சியின் போது திருமதி. பிரசாந்தி என்ற நல்ல தோழியும் எனக்கு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
தொழில் நுட்பங்களைக் கற்றுக் கொண்டுபின்னர் வீட்டில் ஒரு தையல்
மிசின் ஒன்றை வாங்கி தைக்க ஆரம்பித்தேன், என் தொழில் திறனால் எனக்கு மாதம் ஒன்றிற்கு 8000/- க்கு மேல் வருமாணம் கிடைக்கிறது. இதனால் நான் தற்சார்பு உள்ள பெண்ணாக என்னை நிலை நிறுத்திக் கொள்ள முடிகிறது.
என்னையும் என் போன்று பயிற்சியில் கலந்து கொண்டு பயிற்சியை நிறைவு செய்த பலபயிற்சியாளர்களுக்கும் திறன்பட பயிற்சியளித்த பிரதமமந்திரியின் (PMKVY) திறன் மேம்பாட்டு திட்டத்திற்கும் Skills India Foundation Pennagaram பயிற்சி மையத்திற்கும் மைய நிர்வாகி திரு.கென்னடி சார் அவர்களுக்கும், பயிற்சி ஆசிரியார் திருமதி.பெர்சியா அவர்களுக்கும் என்
நன்றிகளை தெரிவிக்கிறேன்.
No comments:
Post a Comment