“ உனக்கான கனவுகளை நீயே கட்டமைக்க வேண்டும்”
திருமதி . கற்பகலக்சுமி தனக்கான கனவினை அப்படித்தான் கட்டமைத்துக் கொண்டார், தனது சுயதொழில் முனைவோரான வெற்றிக் கதை பற்றி அவர் கூறியது.
என் பெயர் கற்பகலக்சுமி, வயது- 33 ,திருமணமானவள் , விருதுநகர் மாவட்டம் ,ராஜபாளையம் ,INTUC நகரில் வசித்து வருகிறேன். எனது கணவர் கேபிள் கான்றக்டராக பணி புரிகிறார், இரு பிள்ளைகள் இருக்கிறார்கள் , 10 வது வரை படித்திருக்கிறேன்.
திருமதி . கற்பகலக்சுமி தனக்கான கனவினை அப்படித்தான் கட்டமைத்துக் கொண்டார், தனது சுயதொழில் முனைவோரான வெற்றிக் கதை பற்றி அவர் கூறியது.
என் பெயர் கற்பகலக்சுமி, வயது- 33 ,திருமணமானவள் , விருதுநகர் மாவட்டம் ,ராஜபாளையம் ,INTUC நகரில் வசித்து வருகிறேன். எனது கணவர் கேபிள் கான்றக்டராக பணி புரிகிறார், இரு பிள்ளைகள் இருக்கிறார்கள் , 10 வது வரை படித்திருக்கிறேன்.
எனது படிப்பிற்கான வேலை எதுவும் கிடைக்காத நிலையில் ,எனது கணவரின் வருமானத்தில் எனது குடும்ப செலவுகளை கடினமான முறையில் சமாளித்து வந்தேன் எனக்கும் ஏதாவது தொழில் செய்ய வேண்டும் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை எப்போது இருக்கும் ,அதற்கான வாய்ப்பு இல்லாத நிலையில் வீட்டில் இருந்து சாதாரணமாக பொழுதைப் போக்கிற்கொண்டு இருந்த நிலையில்தான் தொலைக்காட்சி விளம்பரத்தில் ராஜபாளையம் சங்கரன் கோவில் சாலையில் ஸ்கில்ஸ் இந்தியா பவுண்டேசன் அமைப்பினால் பிரதம மந்திரியின் திறன் மேம்பாட்டுத்திட்டம் செயல்படுத்தப் படுவதாக அறிந்தேன்.
பயிற்சி மையத்திற்கு சென்று கேட்டபோது திருமதி. சுபா - பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் அவர்கள் திட்டம் குறித்தும் அதில் உள்ள பயிற்சிகள் குறித்தும் விளக்கம் அளித்தார். அவரது வழிகாட்டலின் பெயரில் நான் பெண்களுக்கான சுயதொழில் தையல் பயிற்சியினை தெரிவு செய்து 16-02-2018 அன்றுமுதல் மூன்று மாதகால பயிற்சியில் பங்கேற்றேன்.
பயிற்சி நிறைவின் போது நண்பர்களோடு எடுத்துக் கொண்ட குழு படம். |
தையல் பயிற்சி ஆசிரியர் திருமதி.கவிதா மேடம் அவர்கள் திறம்பட அனைத்து தையல் வகைகள் ,பல்வேறு விதமான ஆடைகளை வடிவமைத்து , வெட்டி, தைக்கும் அளவிற்கு பயிற்சி அளித்தார்கள் அத்துடன் பயிற்சிக் காலத்தில் யோகா பயிற்சிகள் ,கலைத்திறன் பயிற்சிகள், தையல் திறன் போட்டி என அனைத்திலும் கலந்து கொண்டு பரிசில்கலையும் சான்றிதல்களையும் பெற்றேன், என்னுடன் சேர்ந்து பயிற்சியில் கலந்து கொண்ட கவிதா மற்றும் பவித்திரா ஆகியோர் எனக்கு தனிப்பட்ட முறையிலும் தையல் கற்றலிலும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.
பயிற்சியின் முடிவில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சியடைந்து மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சினால் வழங்கப்பட்ட தேர்ச்சிசான்றிதலையும் பெற்றுக் கொண்டேன். இப்போது சுயமாக என் வீட்டில் இருந்தபடியே கடைகளில் இருந்து ஆடர்கள் எடுத்தும் அருகில் குடியிருக்கும் மக்களும் தேடி வந்து கொடுக்கும் ஆடைகளையும் தைத்துக் கொடுத்து மாதம் ஒன்றிற்கு 7000/- ரூபாய் வரை சம்பாதித்துக் கொண்டு இருக்கிறேன்.
திறன் போட்டி -2018 இல் சிறந்த தையல் ஆடைக்கான பரிசு பெற்றது. |
என்னுடன் பயிற்சியில் கல்ந்து கொண்ட நண்பர்களோடு சேர்ந்து தையல் கடை ஒன்றை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளேன். சாதாரணமான நிலையில் வீட்டில் இருந்து பொழுதைப் போக்கி கொண்டிருந்த எனக்கு இந்த பயிற்சி மிகப் பெரும் மற்றத்தை என்னுள் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த பயிற்சியில் கலந்து கொண்டதை நினைத்து பெருமையும் ,மகிழ்ச்சியும் அடைகிறேன். என்னை நல்ல தையல் கலைஞராக ஆகிய தையல் ஆசிரியர் திருமதி கவிதா மேடம் அவர்களுக்கும், ஸ்கில்ஸ் இந்தியா பவுண்டேசன் ராஜபாளையம் பயிற்சிமைய நிர்வாகிகள் திரு.மணிவண்ணன் சார் அவர்களுக்கும், திருமதி சுபா மேடம் அவர்களுக்கும் பயிற்சி மையத்திற்கும் , மத்திய அரசுக்கும் என் நன்றிகளைத் தெரிவிக்க கடமைப் பட்டுள்ளேன்.
No comments:
Post a Comment