Wednesday 24 October 2018

திருநெல்வேலி ,சிவகிரி-வீரலக்சுமி வெற்றியின் கதை



என் பெயர் .வீரலக்சுமி வயது-27, நான் 12 வது வரை படித்திருக்கிறேன், எனக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கிறார்கள், நான் ,சபரிமலையபுரம் வீதி, சிவகிரி வட்டம், திருநெல்வேலி மாவட்டத்தில் வசித்து  வருகிறேன், எனது கணவர் சொந்தமாக சிறிய இனிப்பு பண்டங்கள் விற்கும் கடை ஒன்றை நடத்தி வருகிறார், அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் எங்களது குடும்பத்தின் செலவுகளை கடினமான முறையில் சமாளித்து வந்தேன்

அதிகமாக படிக்கவில்லை என்ற கவலை என்னிடம் எப்போதும் இருக்கும் படித்திருந்தால் எனது குடும்பத்திற்காக நானும் எதும் சம்பாதிக்க முடியும் என்று நினைத்துக் கொள்வேன்

இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம்-2018 எங்களது ஊருக்கு  ராஜபாளையம் சங்கரன் கோவில் வீதியில் இயங்கும் ஸ்கில்ஸ் இந்தியா பவுண்டேசன்  நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமதி. சுபா மேடம் அவர்கள் வந்திருந்தார்கள் , அவர் எனக்கு மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தினால் நடத்தப்படும் பிரதம மந்திரியின் திறன் மேம்பாட்டுத் திட்டம் குறித்தும் அதில் சேர்வதற்கான வழிகள் குறித்தும் விளக்கம் அளித்தார்

பயிற்சி மையத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய போது.

அவரது வழிகாட்டலின் பெயரில் நான் கடந்த 16-02-2018 அன்று  இந்த திட்டத்தின் மூலம் நடத்தப்பட்டுவரும் சுயவேலை தையல் பயிற்சியில் என்னை இணைத்துக் கொண்டேன்.   நாள் ஒன்றிற்கு 4 மணி நேரமாக  மொத்தம் 380 மணி  நேரம் நடத்தப் பட்ட இந்த பயிற்சியில் எனது  பயிற்சி ஆசிரியர் திருமதி கவிதா  அவர்கள் திறன் பட தையல் கலையின் அனைத்து நுட்பங்களையும்,பல்வேறு உடைகள் தைப்பதற்கும் எங்களுக்கு பயிற்சியளித்தார் அத்துடன் யோகா பயிற்சி , தொழில் முனைவோருக்கான பயிற்சி என பலவற்றைக் கற்றுக் கொண்டேன்.
பயிற்சியின் நிறைவில் நண்பர்களோடு எடுத்துக் கொண்ட குழுப்படம்




உலக சுற்றுச்சூழல் தினம் அன்று மரம் நட்டபோது.












பயிற்சியின்முடிவில் நடத்தப்பட்ட தேர்வில் தேர்ச்சியடந்து மத்திய அரசினால் வழங்கப்பட்ட  சான்றிதலைப் பெற்றுக் கொண்டேன்தற்போது எனது வீட்டில் சுயமாக தையல் மிசின் ஒன்றை வைத்து எனது ஊரில் உள்ள மக்களுக்கு உடைகள் தைத்து கொடுத்து மாதம் ஒன்றிற்கு 6000 ரூபாய் வரை சம்பாதித்து வருகிறேன். வீட்டில் இருந்து வெட்டியாக தொலைக் காட்சி முன்பு உட்கார்ந்து பொழுதைப் போக்கி கொண்டிருந்த காலம் போய் நானும் இப்பொழுது சுயமாக சம்பாதிகும் நிலையை பெருமையாக உணர்கின்றேன் எதிர்காலத்தில் தனியாக ஒரு தையல் கடை ஆரம்பித்து மேலும் சிலருக்கு வேலைவாய்ப்பு அளித்து எனது முதலீட்டைப் பெருக்க தீர்மாணித்து இருக்கிறேன்.
பயிற்சியின் நிறைவில் சான்றிதல் பெற்றுக்கொண்ட போது.

எனது குழந்தைகளுக்கு தேவையான உடைகளை  நானே தைத்துக் அவர்களுக்கு போட்டு அழகு பார்ப்பது அளவில்லா மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த திட்டத்தினை செயற்படுத்திவரும் ஸ்கில்ஸ் இந்தியா பவுண்டேசன் -ராஜபாளையம் நிறுவனத்திற்கும் அதன் ஒருங்கிணைப்பாளர்கள் ,பயிற்சி ஆசிரியர்கள் மற்றும் மத்திய அரசிற்கும் எனது நன்றிகளை தெரிவிக்கின்றேன்.

  “ வாய்ப்புகள் தானாக நடக்காது  நாம்தான் அதை உருவாக்க வேண்டும்


No comments:

Post a Comment