Thursday, 25 October 2018

இராஜ பாளையம் திருமதி.ராஜகுருவின் வெற்றிக் கதை

 “உன்னால் எதையும் வெற்றிகரமாக ஆரம்பிக்க முடியாது , ஆனால் ஆரம்பிப்பது வெற்றிகரமாக முடியும்”

திருமதி .ராஜகுரு சுய தொழில் முனைவோராக மாறிய வெற்றிக் கதையினை இப்படித்தான் ஆரம்பித்தார். 

என் பெயர் ரஜகுரு ,வயது- 32 ,நான் 10 ம் வகுற்புக்கு மேல் படிக்கவில்லை , அதன் பின்னர் திருமணமாகி 2 பிள்ளைகள் என்று 4 பேர் கொண்ட குடும்பமாக வாழ்ந்து வருகிறோம். என் கணவர்  சலூன் ஒன்றில் முடி வெட்டும் வேலை செய்து கொண்டு இருக்கிறார். 2 பிள்ளைகளின் படிப்பு ,வீட்டுச் செலவு,வாடகை என எல்லாவற்றையும் அவரது மாதம் 8000/- வருமானத்தை வைத்து சமாளிக்க முடியாமல் தினம் தோறும் கவலையோடு இருந்தேன்.

என் படிப்புக்கு ஏற்ற வேலை செய்யவோ அல்லது சுயமாக ஏதும் செய்ய வாய்ப்பும் இல்லாத நிலையில்   இருந்த போதுதான் ராஜபாளையம் சங்கரன் கோயில் வீதியில்  ,லயன்ஸ் கட்டிட வளாகத்தில் இயங்கும் ஸ்கில்ஸ் இந்தியா பவுண்டேசன் அமைப்பு நடத்தும் (PMKVY) பிரதம மந்திரி திறன் மேம்பாட்டு திட்ட பெயர்பலகையை பார்த்து ,திட்டம் பற்றி  பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் திருமதி .சுபா அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.

அதன் படி கடந்த 16-02-2018 அன்று சுய வேலைக்கான தையல் பயிற்சியில் இணைந்து 3 மாதங்கள் 380 மணி நேர பயிற்சியினைக் கற்றுக் கொண்டேன். பயிற்சிக் காலத்தில் பயிற்சி ஆசிரியர் திருமதி.கவிதா அவர்களின் வழிகாட்டுதலோடு பலவகையான உடைகள் டிசைன் செய்யவும், வெட்டுவதற்கும்,தைப்பதற்கும் தெரிந்து கொண்டேன்,  அத்துடன் பயிற்சி மையத்தினால் நடத்தப்பட்ட யோகா பயிற்சி, இலவச தொழில் முனைவோர் பயிற்சி ,கலை திறன்,விளையாட்டுப் போட்டிகள் என ஒரு கல்லூரியில் படித்ததைப் போல மகிழ்வாக பயிற்சிக் காலம் முடிவடைந்தது ,என்னுடன் பயிற்சியில் கலந்து கொண்ட சக பயிற்சியாளர்கள் கணக்மணி, ரேவதி ஆகியோர் எனக்கு பயிற்சிக் காலத்தில் நல்ல நண்பர்கள் ஆனார்கள்.

பயிற்சியின் முடிவில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சியடைந்து , மத்திய அரசின்  தொழில் முனைவோர் மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சகத்தினால் வளங்கப்பட்ட சான்றிதலைப் பெற்றுக் கொண்டேன். 

குடும்பத்தில் இரு பிள்ளைகளை வைத்துக்கொண்டு  தினம்தோறும் குடும்ப செலவுக்கு கஸ்டப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் நான் கற்றுக் கொண்ட  தையல் பயிற்சியினால் எனது வீட்டில் இருந்தே மாதம் ஒன்றிற்கு 7000/- ரூபாய் வரை வருமானம் கிடைக்கின்றது.  அத்துடன் இன்னும் சிலரை இணைத்துக்கொண்டு தனியாக தையல் கடை ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளேன்.

சராசரி குடும்ப தலைவி என்ற நிலையில் இருந்து தற்போது ஒரு சுய தொழில் செய்து வருமாணம் பெறும் பெண்ணாக என் மாற்றத்தைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் , இதற்கு காரணமான மத்திய அரசின் பிரதம மந்திரி திறன் மேம்பாட்டுத் திட்டத்திற்கும் அதன் மூலம் பயிற்சியளித்த ஸ்கில்ஸ் இந்தியா பவுண்டேசன் நிறுவனத்திற்கும்,பயிற்சி மையத்தின் தலமை ஆசிரியன் திரு.மணிவண்ணன் சார் அவர்களுக்கும் , பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர்  திருமதி. சுபா மேடம் அவர்களுக்கும் ,பயிற்சி ஆசிரியர் கவிதா மேடம் அவர்களுக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment