Thursday, 29 November 2012

குழந்தைகள் தின விழா- Children's Day celebrated in Education of Environmental protection and management in School Projects-Skills India

கடந்த நவம்பர் 14 ம் தேதி இந்தியாவின் எல்லா பள்ளிகளும் குழந்தைகள் தினத்தை விமர்சையாக கொண்டாடி முடித்தனர் பள்ளிகளின் கலை நிகழ்வுகளும் பெரிய பள்ளிகள் அன்றைய தினம் சிறப்பு விருந்தினர்களை அழைத்து அமர்க்களப் படுத்தியது.

ஆனால் பள்ளிக்கு ஒரு ஆசிரியர் மட்டுமே சென்றுவரும் சிறு சிறு பள்ளிகளிலும் மலைப்புறகிராம பள்ளிகளிலும் தங்களின் சிறுவர் தினக் கொண்டாட்டத்தை பார்க்க ஆள் இல்லை என்ற வருத்தம் அவர்களிடத்திலே இருந்தது அந்த வகையில் இந்த முறை இந்த சிறு பள்ளிகளுடன் சேர்ந்து தமது குழந்தைகள் தின விழாவை சிறப்பிப்பது என்ற முடிவில் கடந்த 14,15, ஆகிய நாட்களில் தாளவாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரேபாளயம்,காணக்கரை, கேர்மாளம், மாவள்ளம், தேவநத்தம், கோட்டாடை போன்ற மலைவாழ் குழந்தைகள் கல்வி பயிலும் பள்ளிகளில் SKILLS INDIA இணைந்து குழந்தைகள் தினக் கொண்டாட்டத்தை நடத்தியது.

நவம்பர் 14 ம்தேதி அரேபாளயம், காணாக்கரை, கேர்மாளம் பள்ளிகளிலும் 15 ம்தேதி மாவள்ளம், தேவநத்தம், கோட்டாடை பள்ளிகளிலும் இக் குழந்தைகள் தினக் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது மாணவர்களின் ஆடல் பாடல், கதை கூறல் அபினயம் என கலக்க அதில் பங்கு கொண்ட அனைவருக்கும் சிறு சிறு பரிசுகள் வழங்கி ஊக்கமளிக்கப்பட்டது, அத்துடன் ஒவ்வொரு வகுப்பு மாணவர்களுக்கும் அவர்களின் வயதுக்கும் திறமைக்கு ஏற்ற போட்டிகள் நடத்தப்பட்டன போட்டியில் கல்ந்து கொண்ட அனைவருக்கும் சிறு பரிசுகளும் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது.



  அரேபாளயம் நடுநிலைப் பள்ளியில் இடம்பெற்ற குழந்தைகள் தின நிகழ்வு




                                                                                                                                                              
                                                                                                                  





காணக்கரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இடம் பெற்ற குழந்தைகள் தின நிகழ்வு 

  

போட்டிகளில் கலந்து கொண்ட மாணவர்களும் அவர்களுக்கு தலைமை ஆசிரியர் பரிசுகள் வழங்குகிறார்



கேர்மாளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின நிகழ்வு




                      

                                             






மாவள்ளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின நிகழ்வு 

       




தேவநத்தம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் குழந்தைகள் தினக் கொண்டாட்டம்



                                          

                                               



குழந்தைகள் தினக் கொண்டாட்டத்தின் மகிழ்ச்சியில் சிறுவர்கள்


கோட்டாடை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இடம்பெற்ற குழந்தைகள் தினக் கொண்டாட்டம்


                                







  




புதுமையான விளையாட்டுக்கள், நிகழ்ச்சிகள் மூலம் நடத்தப்பட்ட இந்த குழந்தைகள் தின நிகழ்வு மகிழ்ச்சியாகவும், மாணவர்களுக்கு போட்டியிலும், நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலை கொடுப்பதாக இருக்கின்றது என்று ஆசிரியர்கள் நன்றி கூறினர். நிகழ்ச்சியில் பங்கெடுத்த மாணவர்கள் இன்றைய தினமும் தீபாவளி போல் தாம் மகிழ்ச்சியாக இருந்ததாக கூறினர் தாங்கள் வென்றெடுத்த பரிசுகளை வீடுகளில் கொண்டு காட்ட வேண்டும் என்று கூறினர்.

நிகழ்ச்சியினை ஸ்கில்ஸ் இந்தியாவின் (SKILLS INDIA) மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.நா,சிறிதரன் அவர்கள் செய்திருந்தார், இது போன்ற நிகழ்வுகளை இனி வரும் காலங்களில் இதைவிட சிறப்பாக செய்யவும் மாணவர்கள் எல்லோரையும் ஊக்கமும் அவர்களின் திறன்களை வெளிக் கொண்டுவரும் செயற்பாட்டினையும் செய்யும் பணியில் Skills India தொடர்ந்து ஈடுபடும்..

Monday, 19 November 2012

இளஞ்சிறார் நீதிச்சட்டம் மற்றும் குழந்தைகள் நலன் குறித்த கருத்தரங்கு-Awareness Workshop on Juvenile Justice Act& Child Welfare Commitee-For NGO Directors and Child Safety Officers of Erode and Thirupur Districts-Skills India



”குழந்தைப்பருவம்” மனிதர்கள் எல்லோரும் கள்ளம் கபடமற்ற வெள்ளையுள்ளங்களாக இருக்கின்ற பருவம்… இவர்கள் எல்லோரும் இந்த உலகத்தில் பேணிப் பாதுகாக்க வேண்டிய வருங்காலச் செல்வங்கள்… ஆனால் இந்த குழந்தைகள் எல்லோரும் பாதுகாப்பான சூழலில் தாய் தந்தையருடன் வாழும் சாதாரண வாழ்க்கை முறை அமைந்து விடுவதில்லை..

சில சிறுவர்கள் என்னவென்று புரிந்து கொள்ளாமலே தவறுகளையும் குற்றங்களையும் செய்டுவிட்டு சீர்திருத்தப் பள்ளிகளிலும் தாய் தந்தை இல்லாத ஆதரவற்ற நிலையில் கருணை இல்லங்களிலும் வளர்க்கப் படுகின்றன.. குழந்தைகளைக் காப்பதற்கும் அவர்களைச் சீர்படுத்துவதற்கும் இந்த இல்லங்களும் சீர் திருத்தப் பள்ளிகள் இருந்தாலும் இவற்றில் வாழும் குழந்தைகள் எவ்வாறு இருக்கின்றார்கள்  என்பது பற்றிய அக்கறை அரசுக்கும் குழந்தைகள் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் எல்லோர் மத்தியிலும் இருக்கத்தான் செய்கின்றது.

 அந்த வகையில் கடந்த மாதம் திருப்பூர் சமூகப் பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் நன்னடத்தை அலுவலகத்தின் மாவட்ட இயக்குனர் திரு. சரவணன் அவர்களைச் சந்திக்க நேர்ந்த இடத்தில் இது பற்றிக் கேட்ட போது குழந்தைகளுக்காக பணி புரியும் எல்லோருக்கும் குழந்தைகள் உரிமைகள் தொடர்பாகவும், இல்லங்களில் பராமரிக்கப்படும் குழந்தைகள் தொடர்பாக மத்திய அரசில் இருக்கும் சட்டங்கள் பற்றிய விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என்று கோரிய போது இதற்காக அவர்களுக்கான ஒருநாள் கருத்தரங்கு ஒன்றினை ஏற்பாடு செய்யலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டது.
நிகழ்வுக்கு வருகைதந்த மாவட்ட முதன்மை நடுவர் மதிப்புக்குரிய ராமச்சந்திரன் அவர்கள்

அந்த வகையில் கடந்த 07.11.2012 அன்று திருப்பூர் மாவட்டம் அவினாசி ரோடு தண்ணீர் பந்தல் பகுதியில் அமைந்துள்ள மரியாலயா குழந்தைகள் காப்பகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது… இந்த நிகழ்விற்கு திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குழந்தைகள் இல்லங்கள் நடத்தி வருபவர்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக பணிபுரிவோர் என பல தரப்பில் இருந்தும் ஸ்கில்ஸ் இந்தியா (SKILLS INDIA) சார்பிலும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் நன்னடத்தை அலுவலகத்தின்  சார்பிலும் அழைக்கப்பட்டிருந்தனர்..

 மொத்தமாக 23 தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த 45 பேரும் குழந்தைகள் நலப் பணியாளர்கள் 15 பேரும் கலந்து கொண்டனர். மரியாலையாவின் கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்த கருத்தரங்கிற்கு திருப்பூர் மாவட்ட முதன்மை நடுவர் உயர்திரு.ராமச்சந்திரன் அவர்கள் (குற்றவியல் நீதிமன்றம்-I)கலந்து கொண்டு குத்துவிளக்கினை ஏற்றி ஆரம்பித்து வைத்தார் திருமதி நாகப்பிரபா மாவட்ட சமுக நல அலுவலகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள்..நிகழ்வினை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திரு.சிவராஜ் அவர்கள் தொகுத்து வழங்கினார்.

முதன்மை நடுவர் தலைமை உரையாற்றுகிறார்
தலைமை உரையாற்றிய முதன்மை நடுவர் அவர்கள் இளஞ்சிறார் நீதிச்சட்டம் பற்றி எல்லோருக்கும் விளக்கம் அளித்தார். சட்டத்தின் படி 18 வயதுக்கு கீழ் உள்ள அனைவரும் குழந்தைகள் அவர்கள் சில நேரங்களில் குற்றச்செயல்களில் ஈடுபடும் போது அவர்களை எப்படிக் கையாள்வது என்பது தொடர்பாக எல்லோருக்கும் விளக்கினார். அவர்கள் எப்படி நடத்தப்படவேண்டும் என்று சட்டத்தில் உள்ள ஒவ்வொன்றையும் விளக்கினார். தொடர்ந்து பேசிய மாவட்ட சமூக நல அலுவகர் திருமதி.நாகபிரபா அவர்கள் சமுகநலத்துறையுடன் இங்கு செயற்படும் இல்லங்கள் அனைத்தும் இணைந்து செயற்பட வேண்டிய அவசியம் குறித்து விளக்கினார்.

மாவட்ட சமூக நல அலுவலகர் திருமதி நாகப்பிரபா அவர்கள் சிறப்புரை ஆற்றுகிறார்
Skills India ஒருங்கிணைப்பாளர் திரு.நா.சிறிதரன் விளக்கவுரை வழங்குகிறார்
ஸ்கில்ஸ் இந்தியாவின் சார்பில் ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களுக்கான ஒருங்கிணைப்பாளர் திரு,சிறிதரன் அவர்கள் இந்த கலந்தாய்வினை ஏற்பாடு செய்ததன் அவசியத்தை விளக்கினார், குழந்தைகள் நலன் தொடர்பாகவும் சமூக பிரச்சனைகள் தொடர்பாக ஸ்கில்ஸ் இந்தியா தொண்டு நிறுவனத்தின் செயற்பாடுகளை விளக்கினார்.

அவர்கள் உரையினைத் தொடர்ந்து கருத்தரங்கின் கருத்துரையாளர்களாக திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் நன்னடத்தை அலுவலகர் திரு.த.சரவணன் அவர்களும், ஈரோடு மற்றும் சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் நன்னடத்தை அலுவலர் திருமதி.தேவகி ஆகிய இருவரும் பயிற்சி வகுப்பினை ஆரம்பித்தனர், குழந்தைகளுக்கான ஐக்கியநாடுகள் சபையின் அங்கிகரிக்கப்பட்ட உரிமைகள், குழந்தை உரிமைச் சட்டங்கள் மத்திய மாநில அரசுகள் குழந்தைகள் பராமரிப்பு தொடர்பாக கொண்டுவந்துள்ள சட்டங்கள், பரிந்துரைகள் மற்றும் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் தொடர்பாக விளக்கம் அளித்தனர்.


திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் நன்னடத்தை அலுவலகர்கள் திரு.சரவணன்,திருமதி.தேவகி ஆகியோர் கருத்தரங்கினை நடத்துகின்றனர்
மதிய உணவின் பின்னர் குழந்தைகள் உரிமை தொடர்பான குறும்படம் காட்சிப் படுத்தப்பட்டது. பின்னர் கலந்து கொண்ட தொண்டு நிறுவனங்கள் தங்களின் சந்தேகங்களையும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக CWC மற்றும் DCPS ஆகியவை எவ்வாறன செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கின்றது என்ற விளக்கத்தினை கேட்டறிந்தனர், அதற்கான பதில்களை கருத்தரங்கின் கருத்துரையாளர்களான  நன்னடத்தை அலுவலகர் திரு.த.சரவணன் அவர்களும்,  நன்னடத்தை அலுவலர் திருமதி.தேவகி ஆகியோர் விளக்கம் அளித்தனர்.
குழந்தைகள் உரிமைகள் தொடர்பான குறும்படங்கள் காட்சிப்படுத்தல்


மாலை தேனிர் இடைவேளையின் பின்னரான கருத்து கேட்பில் கலந்து கொண்ட தொண்டு நிறுவங்களின் சார்பாக பலர் தங்களுக்கு இந்த கருத்தரங்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை கூறினர், இதன் பேரில் நடத்துவதற்கு சமூக நலத்துறையும் தங்களுக்கு பக்கபலமாக செயற்பட வேண்டும் என்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் தங்களின் மேலான செயற்பாட்டினை வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். ஸ்கில்ஸ் இந்தியாவின் சார்பில் திரு.அருன் அவர்களும் CWC சார்பில் திரு. ராஜசேகர் ஆகியோர் நன்றி கூறி கருத்தரங்கினை நிறைவு செய்தனர்.
நிகழ்வில் கலந்து கொண்ட தொண்டு நிறுவனங்களின் உறுப்பினர்கள்

Wednesday, 31 October 2012

கடலூரில் மாணவர்களுக்கான தலைமத்துவ பயிற்சி.


மாணவர்கள் மத்தியில் இருந்துதான் இந்த தேசத்தின் மிகப்பெரும் தலைவர்கள் வந்திருக்கின்றார்கள் அவர்கள் ஒவ்வொருவரையும் ஏதோ ஒரு தூண்டுதல் தலைவர்களாக மாற்றியிருக்கின்றது. காந்திக்கு தென் ஆபிரிக்க ரயில் பயணத்தின் போது ஏற்பட்டதைப் போல... ஆனால் எல்லோருக்கும் சந்தர்பங்கள் அமைந்துவிடுவதில்லை அதனால் ஒவ்வொருவருக்கும் தலைமத்துவம்(Leadership) குறித்த சிந்தனையினை ஏற்படுத்த முனைவதுதான் நாளைய தலைவர்களை உருவாக்கும் வழியாக அமையும் அந்த வகையில்….

பயிற்சியில் கலந்து கொண்ட மாணவர்கள்
கடலூர் மாவட்டம் பரங்கிப் பேட்டை ஊரட்சிக்கு உட்பட்ட முடசல் ஓடை, எம்.ஜி.ஆர் நகர், கலைஞர் நகர் மற்றும் கிள்ளை ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள நடுநிலைப்பள்ளிகள் மற்றும் துவக்கப் பள்ளி மாணவர்களுக்கான தலைமத்துவ பயிற்சி ஒன்றினை Skills India சார்பாக கடந்த 12.09.12ம்  தேதி ஏற்பாடு செய்திருந்தது அதன் பேரில்  அன்று பிற்பகல் 2.00 மணியளவில் ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் குழந்தைகள் பாராளுமன்றத்தின் துறைசார்ந்த அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ் மொழி வாழ்த்துப் பாடலுடன் ஆரம்பித்த பயிற்சியில் Skills India வின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. அருள்தேவன் அவர்கள் வந்திருந்த மாணவர்களையும், ஆசிரியர்களையும் வரவேற்றுப் பேசினார். பின்னர் பயிற்சியாளர் திரு.நா.சிறிதரன் அவர்கள் பயிற்சியினை ஆரம்பித்தார். முதலில் தலைமத்துவம் என்ன என்பது பற்றியும் ஒவ்வொரு வகையான தலைமத்துவம் அவ்வாறு தலைமை வகித்தவர்கள் பற்றியும் விளக்கம் அளித்தார், மாணவர்களிடம் இருந்து உங்களுக்கு பிடித்த தலைவர்கள் அவர்களின் கொள்கைகள் பற்றி கூறும்படி கேட்டபோது மாணவர்கள் மகாத்மா காந்தி, ஜவர்ஹலால் நேரு, காமராஜர், எம்.ஜி.ஆர், ரஜினி, விஜய் என பட்டியலிட்டுப் போனார்கள்.

இதன் பின்னர் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஒருவருக்கு இருக்க வேண்டிய பண்புகள் என்ன அவருக்கு எவ்வாறான திறன்கள் உடையவராக இருக்க வேண்டும் என்பதை சிறு சிறு விளையாட்டுக்கள் மூலம் தெளிவு படுத்தினார். முதலில் …..

வழிநடத்துதல்:
கண்கள் கட்டப்பட்ட மாணவருக்கு குழுவினர் வழிகாட்டுதல்



பின்னர் மாணவர்களுக்கு தலைமத்துவத்தில் வழிகாட்டுதலின் முக்கியத்துவம் குறித்து விளக்கமளிக்கப்பட்டது வளங்களைப் பங்கிடுதல் பற்றி விளக்க ஒரு விளையாட்டினை ஸ்ரீதரன் அவர்கள் நடத்தினார்.

தலைவராக இருக்கும் ஒருவர் தனது குழுவினை வழிநடத்தும் தகுதி உடையவராக இருக்க வேண்டும் அந்த குழுவில் உள்ளவர்கள் சரியான வழியில் செல்வதற்கு நெறிப்படுத்த வேண்டும். இதற்காக முதல் விளையாட்டாக கண்கள் கட்டப் பட்ட ஒருவருக்கு சரியான வழியைக் காட்டும் விளையாட்டு இடம்பெற்றது. இதில் கயிற்றினால் எல்லை பிரிக்கப்பட்ட ஒரு இடத்தில் பந்து, டம்ளர், பேப்பர் கப், வளையம் என நிறையப் பொருட்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக அருகருகே வைக்கப்பட்டிருக்கும் இதில் கண்கள் கட்டப்பட்ட ஒருவர் ஒரு பகுதியினால் உள்ளே சென்று மறு பகுதி வழியாக வெளியே வரவேண்டும் அதன்போது அவர் அங்கு வைக்கப் பட்டிருக்கும் எந்த பொருளின் மீதும் கால் வைத்து விடாதபடி அந்த குழுவின் உறுப்பினர்கள் அவருக்கு வழிகாட்ட வேண்டும் எனக் கூறப்பட்டது. பல மாணவர்கள் சரியான முறையில் செல்வதற்கு சிரமப் பட்டனர் அவர்களது வழிகாட்டிகள் சரியான வழியினை அவர்களுக்கு காட்டுவதற்கு தவறினர் ஒரு சிலர் சில தவறுகளோடு வெற்றி பெற்றனர்
பலூன் காற்றல் பேப்பர் கப் வீழ்த்துதல்
பலூன் மூலம் பேப்பர் கப்பினை வீழ்த்த
 தயாராகும் மாணவி
ஒரு மேசையின் மீது ஒவ்வொன்றாக அடுக்கி வைக்கப்பட்ட 6 பேப்பர் கப் இருந்தன விளையாட்டில் பங்கு பெறும் ஒருவர் கொடுக்கப்படும் ஒரு பலூனின் மூலம் காற்றினை நிரப்பி அந்த பேப்பர் கப்பினை கீழே வீழ்த்த வேண்டும் யார் அதிகமாகவோ அல்லது முழுவதுமாக வீழ்த்துகின்றார்களோ அவர்களே வெற்றியாளர்களாக கருதப்படுவார்கள். இதில் ஒவ்வொரு குழுவில் இருந்தும் பல மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர் ஒரு சிலர் மட்டும் 5. கப் வீழ்த்தினர் மற்றவர்களால் முடியவில்லை இந்த விளையாட்டின் மூலம் மாணவர்களிடம் பயிற்சியாளர் ஸ்ரீதரன் அவர்கள் வளங்கள் என்பது நம்மிடம் குறைவாகவே இருக்கின்றது அதை நாம் எப்படி எல்லோருக்கும் கிடைக்க கூடிய வகையிலும் மற்றும் அளவாகவும் பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் இல்லையெனில் முன்னாலே இருப்பர்களுக்கு செலவு செய்து விட்டு பின்னர் கொடுப்பதற்கு எதுவும் இல்லாமல் இருக்கும் நிலை வரும் என விளக்கமளித்தார்.

அதன் பின்னர் முடிவெடுக்கும் திறன்,குழுக்களை ஒன்றினைத்த்  திறன் எல்லோருடைய கருத்துக்களையும் கேட்கும் பண்புகள் போன்றவை குறித்து விளக்கினார் பின்னர் மாணவர்களுக்கு அவர்களது பள்ளியின் சார்பாக பத்திரிகை வெளியிட Skills India மூலம் செயற்படுத்துவது என கூறப் பட்டது அதன் பேரில் மாணவர்கள் தமது பள்ளியின் பத்திரிகைக்கான பெயர் மற்றும் அட்டைப் படம் வடிவமைப்பது குறித்து விளக்கப் பட்டது. பின்னர் மாணவர்களிடம் அட்டைகள் கொடுக்கப்பட்டு தங்கள் பத்திரிகையின் பெயர் மற்றும் அட்டைப்படம் வடிவமைக்கும் படி கோரப்பட்டது.

3 மணிநேரப் பயிற்சியின் பின்னர் மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் நடத்தப்பட்ட பயிற்சி குறித்து கேட்கப்பட்டது. மாணவர்கள் ஒவ்வொருவரும் இது எங்களுக்கு ஊக்கமளிக்கும் வகையிலும் இலகுவாக புரிந்து கொள்ளும் வகையிலும் அமைந்ததாக கூறினர். ஆசிரியர்கள் இந்த பயிற்சி குழந்தைகளை இலகுவாக சென்று அடைந்திருக்கின்றது குழந்தைகள் விரும்பும் வகையில் விளையாட்டு மூலம் புரிய வைத்த பயிற்சியாளருக்கு நன்றி கூறினார்கள். இறுதியில் தேசிய கீதத்துடன் பயிற்சி நிறைவு பெற்றது.
மாணவர்கள் ஆர்வமுடன் அட்டைப்படம் வடிவமைகின்றனர்.