Thursday, 21 March 2019

திருமதி. சங்கீதாவின் தொழில் திறன் பயிற்சியின் மூலம் கிடைத்த வெற்றிக் கதை



திருமதி. சங்கீதா தன்னுடைய வெற்றிக் கதையை விவரிக்கிறார். நான் 10 ஆம் வகுப்பு வரைப் படித்துள்ளேன், கும்பகோணம் வளையாபட்டி பகுதியைச் சேர்ந்த எனக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவர் தினக்கூலி வேலை செய்து வருகிறார், கணவரின் அன்றாட வருமானத்தில் தான் குடும்பச்செலவு, குழந்தைகளின் படிப்பு பெற்றோர்களின் மருத்துவச் செலவு மற்றும் இதர செலவினங்களயும் சமாளிப்பது என்பது ஒரு குடும்பத்தலைவியா எனக்கு இருந்த மிகப்பெரிய சவால், இந்தச்சூழ்நிலையை மாற்ற வேண்டும் என்றால் என்னால் என்ன செய்ய முடியும் என்று யோசித்தேன். 

அப்பொழுதுதான் தையல் கற்றுக் கொண்டு தைக்கலாம் என்று முடிவு செய்தேன். அந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் Skills India Foundation-Kumbakonam பயிற்சி மையத்தில் பிரதம மந்திரியின் (PMKVY) திறன் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் குறுகிய கால தொழில் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதாக எங்கள் ஊரில் உள்ள தொலைக்காட்சி விளம்பரத்தில் பார்த்தேன்.பின்னர் அவர்களைத் தொடர்புகொண்டு பயிற்சி மையத்திற்கு சென்று  விபரங்கள் அனைத்தும் கேட்டு அறிந்து கொண்டேன்.

பயிற்சி மைய நிர்வாகி திருமதி-சரண்யா மேடம் அவர்களின் வழிகாட்டலிலும் எனது மனதுக்குப் பிடித்தமான Self Employed Tailor பயிற்சியை தேர்வு செய்து படித்து வந்தேன், எங்கள் எனது பயிற்சி ஆசிரியர் திருமதி. தமிழ் மணி அவர்கள் சிறப்பான முறையில் எங்களுக்கு வகுப்புகளை நடத்தினார்,  துணிகளை எவ்வாறு வெட்டுவது மற்றும் தைப்பது என மிக சிறப்பான முறையில் செயன்முறை பயிற்சி அளித்தனர்  380 மணி நேரம் கொண்ட பயிற்சியானது 3 மாதகாலம் தொடர்ச்சியாக சென்று கற்று வந்தேன்.

பயிற்சியின் முடிவில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சியடைந்து மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சும் , வழங்கும் சான்றிதழைப் பெற்றுக் கொண்டேன்.  அதன் பின்னர்  பயிற்சி மையத்தின் வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் திரு .ராமநாதன் சார் மூலம் நடை பெற்ற வளாகத் தேர்வில் வெற்றிபெற்று கும்பகோணத்தில்  உள்ள கார்மெண்ட்டில் Tailor ஆக பணி புரிந்து வருகிறேன்.

மாதம் ஒன்றிற்கு 15000/- சம்பளமாகக் கிடைகிறது இந்த வருமானத்தில் என் குடும்பத்தினருக்கு என்னாலான பொருளாதார உதவியை செய்யக் கூடிய நிலையில் இருக்கிறேன். இப்பொழுது என் குடும்பம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.  இந்த மாற்றமும் எனது வேலையும் PMKVY தொழில் திறன் பயிற்சியினால் எனக்கு கிடைத்த மிகப் பெரும் வாய்ப்பு என்றால் மிகையாகாது.

என்னையும் என் போன்று பயிற்சியில் கலந்து கொண்டு இன்று பணி புரிந்து வருகின்ற பல ஏழை மாணவர்களின் வாழ்வை மாற்றிய மத்திய அரசின் PMKVY திட்டத்திற்கும் , பயிற்சி வழங்கிய Skills India Foundation Kumbakonam பயிற்சி மையத்திற்கும் எனது பயிற்சி ஆசிரியருக்கும் எனது நன்றிகள்






தொழில் பயிற்சியின் மூலம் தனக்கான எதிர்கால இலக்கை உருவாக்கிக் கொண்ட திரு.பாலகிருஷ்ணனின் வெற்றிக்கதை



திரு. பாலகிருஷ்ணன் தன்னுடைய வெற்றிக் கதையை பகிர்கிறார். சேலம் மாவட்டம் வலசக்கால்பட்டியை சேர்ந்த நான் முதுகலை பட்டப்படிப்பு படித்துள்ளேன். படிப்புக் கேற்ற வேலை கிடைக்காமல் தந்தையுடன் சேர்ந்து விவசாயப் பணியில் ஈடுபட்டேன் ஆனால் அதில் போதிய வருமானம் கிடைக்காமல் சிரமப்பட்டுக் கொண்டிருந்தேன்.

அந்த நிலையில் ஈரோடு  CSI வளாகத்தில் உள்ள Skills India Foundation- Erode பயிற்சி மையத்தில் மத்திய அரசின் பிரதமர் திறன் மேம்பாட்டு திட்ட தொழில் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதாக நண்பர் திரு.அலஹாத் மூலம் அறிந்து கொண்டேன் அதன் பின்னர் பயிற்சி மையம் சென்று தொழில் பயிற்சி விபரங்களை கேட்டறிந்து ,DTH Set Top Box Installation & Service Technician  பயிற்சியை தேர்ந்து எடுத்தேன்.

320 மணிநேரம் கொண்ட பயிற்சியை 2 மாத காலம் தொடர்ச்சியாக பயிற்சிக்கு வருகை தந்து  திறம்பட அனைத்து செயல்முறை விளக்கங்களையும் தெரிந்துகொண்டேன். பயிற்சி ஆசிரியர் திருமதி. மாயா அவர்கள் எல்லோருக்கும் இலகுவாக புரிந்து கொள்ளும்படியாக செயல்முறை மற்றும் விளக்க வகுப்புகளை நடத்தினார்.

பயிற்சியின் முடிவில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சியடைந்து ,மத்திய அரசின் சான்றிதழைப் பெற்றுக் கொண்டேன் , அதன் பின்னர் பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு, வேலை கிடைத்து DTH Set Top Box Installation & Service Technician  ஆக பணியாற்றி வருகிறேன் மாதம் ஒன்றிற்கு 10000/- வரை சம்பளம் கிடைக்கிறது. இந்த வருமானம் பணி நிரந்திரம் பெற்றபின் மேலும் அதிகரிக்கும் என்பதை மகிழ்ச்சியுடன்  தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த தொழில் திறன் பயிற்சி என்னை மேலும் உற்சாகப்படுத்தியிருக்கிறது,  எனக்கு இந்த வாய்பை அளித்த Skills India Foundation -Erode தொழில் பயிற்சி மையத்திற்கும், பயிற்சி ஆசிரியர் மற்றும் மத்திய அரசின் PMKVY திட்டத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.


தொழில் பயிற்சியின் மூலம் வெற்றி பெற்ற கவிதாவின் வெற்றிக் கதை




திருமதி. கவிதா தன்னுடைய வெற்றிக் கதையை பகிர்ந்து கொள்கிறார். நான் தாளவாடி அம்பேத்கார் வீதியில் வசித்து வருகிறேன்,நான் 8 ஆம் வகுப்பு வரைப் படிதுள்ளேன், எங்கள் பகுதியில் பெண்களை அதிகம் படிக்க வைப்பதில்லை, அதனால் என்னால் மேற்கொண்டு படிக்க இயலாத சூழ்நிலை, அப்பொழுது எனக்குத் திருமணமும் நடைப் பெற்றது, கணவர் விவசாயத் தினக்கூலியாக வேலை செய்கிறார், அவரின் மாத வருமானம் 8500/- எங்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர், என் குடும்பச் சூந்நிலையை மேம்படுத்த என்னால் எந்த உதவியும் செய்ய முடியவில்லையே எனக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். 

அப்பொழுது தான் விளம்பர சுவரொட்டி மூலம் Skills India Foundation- Thalavadi பயிற்சி மையத்தில் பிரதம மந்திரியின் (PMKVY) திறன் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் குறுகிய கால தையல் தொழில் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதாக தெரிந்து கொண்டேன். பின்னர்  தாளவாடி ஓசூர் ரோட்டில் உள்ள Skills India Foundation- Thalavadi பயிற்சி மையத்திற்கு சென்று  விபரங்கள் அனைத்தும் கேட்டு அறிந்து கொண்டேன்.

திட்டம் குறித்து பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் திரு.பொன்னுசாமி சார் அவர்கள் எடுத்துக்கூறினார்கள், அவரது வழிகாட்டுதலின் படி சுயதொழில் தையல் பயிற்சி வகுப்பில் சேர்ந்து கொண்டேன். 380 மணி நேரம் (3 மாத கால ) பயிற்சியில் தையல் பயிற்சி ஆசிரியர் திருமதி .சுதா மேடம் அவர்கள்  தையல் வகைகள், பல்வேறு ஆடைகள் வடிவமைத்தல் , எம்ப்ராய்டரி வேலை, அனைத்து வகையான ஆடைகள் அளவெடுத்து , வெட்டி தைப்பது என பல சுவாரசியமாக தையல் பயிற்சி நடந்தது.

பயிற்சியின் முடிவில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சியடைந்து  மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சினால் வழங்கப்பட்ட சான்றிதழைப் பெற்றுக் கொண்டேன். பின்னர் வீட்டில் ஒரு தையல் மிசின் ஒன்றை வாங்கி தைக்க ஆரம்பித்தேன். இப்பொழுது அருகில் வசிக்கும் மக்களிடமும் இருந்து வரும் ஆடர்களை நேர்த்தியாக தைத்து கொடுத்து வருகிறேன் , மாதம் ஒன்றிற்கு 8800/- மேல் வருமானம் கிடைக்கிறது, இதன் மூலம் என்னுடைய குடும்ப வருமானம் அதிகரித்துள்ளது.  இப்பொழுது என் குடும்பம் மகிழ்ச்சியாக உள்ளது.

என்னையும் என் போன்று பயிற்சியில் கலந்து கொண்டு பயிற்சியை நிறைவு செய்த பல பயிற்சியாளர்களுக்கும்  திறன்பட பயிற்சியளித்த பிரதம மந்திரியின் (PMKVY) திறன் மேம்பாட்டு திட்டத்திற்கும், Skills India Foundation - Thalavadi பயிற்சி மையத்திற்கும் மைய நிர்வாகி திரு.பொன்னுசமி சார் அவர்களுக்கும் , பயிற்சி ஆசிரியார் திருமதி. சுதா அவர்களுக்கும் என் நன்றிகளை தெரிவிக்கிறேன். 


தொழில் பயிற்சியின் மூலம் குடும்ப வருமானத்தை அதிகரித்த அருணா வின் வெற்றிக் கதை



திருமதி. அருணா தன் வெற்றிக் கதையை விவரிக்கிறார். கும்பகோணம், தரசுராம் பகுதியைச் சேந்த நான் பட்டப் படிப்பு வரை படித்துள்ளேன், திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர், கணவர் சப்ளையர் ஆக உள்ளார், அவரின் மாத வருமானம் 11000/- பட்டப் படிப்பு வரை படித்துள்ள எனக்கு படிப்புக்கேற்ற வேலை கிடைக்காமல் வீட்டில் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தேன். 

அந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் Skills India Foundation-Kumbakonam பயிற்சி மையத்தில் பிரதம மந்திரியின் (PMKVY) திறன் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் குறுகிய கால தொழில் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதாக எங்கள் ஊரில் உள்ள விளம்பர சுவரொட்டியில் பார்த்தேன்.அவர்களைத் தொடர்புகொண்டு பயிற்சி மையத்திற்கு சென்று  விபரங்கள் அனைத்தும் கேட்டு அறிந்து கொண்டேன்.

பயிற்சி மைய நிர்வாகி திருமதி-சரண்யா மேடம் அவர்களின் வழிகாட்டலில் எனது கல்வித் தகுதிற்கு ஏற்றால்போல் Retail Sales Associate பயிற்சியை தேர்வு செய்து படித்து வந்தேன், எங்கள் எனது பயிற்சி ஆசிரியர் திருமதி. காயத்திரி அவர்கள் சிறப்பான முறையில் எங்களுக்கு வகுப்புகளை நடத்தினார்,  வியாபாரத் துறை சார்ந்த படிப்பு என்பதால் பல கடைகள் அழைத்து சென்று செயன்முறை பயிற்சி அளித்தனர்  320 மணி நேரம் கொண்ட பயிற்சியானது 3 மாதகாலம் தொடர்ச்சியாக சென்று கற்று வந்தேன்.

பயிசியின் முடிவில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சியடைந்து மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சும் , வழங்கும் சான்றிதழைப் பெற்றுக் கொண்டேன்.  அதன் பின்னர்  பயிற்சி மையத்தின் வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் திரு .ராமநாதன் சார் மூலம் எனக்கு கும்பகோணத்தில்  உள்ள டிப்பார்ட்மெண்ட் ஸ்டோரில் System Operator ஆக பணி புரிந்து வருகிறேன்.

மாதம் ஒன்றிற்கு 7000/- வருமானத்தில் என் குடும்பத்தினருக்கு என்னாலான பொருளாதார உதவியை செய்யக் கூடிய நிலையில் இருக்கிறேன். இந்த மாற்றமும் எனது வேலையும் PMKVY தொழில் திறன் பயிற்சியினால் எனக்கு கிடைத்த மிகப் பெரும் வாய்ப்பு என்றால் மிகையாகாது.
என்னையும் என் போன்று பயிற்சியில் கலந்து கொண்டு இன்று பணி புரிந்து வருகின்ற பல ஏழை மாணவர்களின் வாழ்வை மாற்றிய மத்திய அரசின் PMKVY திட்டத்திற்கும் , பயிற்சி வழங்கிய Skills India Foundation Kumbakonam பயிற்சி மையத்திற்கும் எனது பயிற்சி ஆசிரியருக்கும் எனது நன்றிகள்



திரு. அலஹாத் தின் விடாமுயற்சிக்குக் கிடைத்த வெற்றி



திரு. அலஹாத் முதுகலைப் பட்டப் படிப்பை முடித்து விட்டு ஒரு மலர் கொத்து செய்யும் அங்காடியில் வேலை செய்து அதன் மூலம் மாதம் 5000/- வருமானம் ஈட்டி வந்திருக்கிறார். தந்தை விவசாயம் செய்து வருகிறார்  அதன் மூலம் கிடைக்கும் வருமானமும் சொற்பம் தான். அலஹாதின் மனைவி, குழந்தைகள் மற்றும் தம் தந்தை குடும்பம் என மொத்தம் 9 பேர் கொண்ட குடும்பத்திற்கு இந்த வருமானம் போதுமானதாக இல்லை. 

அப்பொழுது தான் ஈரோடு  CSI வளாகத்தில் உள்ள Skills India Foundation- Erode பயிற்சி மையத்தில் மத்திய அரசின் பிரதமர் திறன் மேம்பாட்டு திட்ட தொழில் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதாக பத்திரிகை விளம்பரத்தில் படித்து தெறிந்து கொண்டார். அதன் பின்னர் பயிற்சி மையம் சென்று தொழில் பயிற்சி விபரங்களை கேட்டறிந்து ,DTH Set Top Box – Installation & Service Technician  பயிற்சியை தேர்ந்து எடுத்தார்.

340 மணிநேரம் கொண்ட பயிற்சியை 2 மாத காலம் தொடர்ச்சியாக பயிற்சிக்கு வருகை தந்து  திறம்பட அனைத்து செயல்முறை விளக்கங்களையும் தெரிந்துகொண்டார். பயிற்சி ஆசிரியர் திருமதி. மாயா அவர்கள் எல்லோருக்கும் இலகுவாக புரிந்து கொள்ளும்படியாக செயல்முறை மற்றும் விளக்க வகுப்புகளை நடத்தியுள்ளார்.

பயிற்சியின் முடிவில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சியடைந்து ,மத்திய அரசின் சான்றிதழைப் பெற்றுக் கொண்டார் , அதன் பின்னர் பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு, வேலை கிடைத்து DTH Set Top Box – Installation & Service Technician  ஆக பணி செய்து வருகிறார் மாதம் ஒன்றிற்கு 10000/- வரை சம்பளம் கிடைக்கிறது. இந்த வருமானம் மேலும் அதிகரிக்கும் என்பதை மகிழ்ச்சியுடன்  தெரிவிக்கிறார்.

இந்த தொழில் திறன் பயிற்சி அவரை மேலும் உற்சாகப்படுத்தியிருக்கிறது,  அவர் இந்த வாய்பை அளித்த Skills India Foundation -Erode தொழில் பயிற்சி மையத்திற்கும், பயிற்சி ஆசிரியர் மற்றும் மத்திய அரசின் PMKVY திட்டத்திற்கும் தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறார்.


இளம் தொழில் முனைவோர் ஆன தாளவாடி பத்மாவின் வெற்றிக்கதை



செல்வி.பத்மா தன் வெற்றிக் கதையை பகிர்ந்து கொள்கிறார், 12 ஆம் வகுப்புவரை படித்துள்ளேன், தாளவாடி போயகவுடர் பகுதியில் வசித்து வருகிறேன், தந்தை தனியார் வங்கியில் பணியாற்றுகிறார், எங்கள் குடும்பத்தில் 4 பேர் உள்ளனர், எனக்கு சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்று மிகவும் ஆர்வமாக இருந்தேன், 

அப்பொழுது தான் விளம்பர சுவரொட்டி மூலம் Skills India Foundation- Thalavadi பயிற்சி மையத்தில் பிரதம மந்திரியின் (PMKVY) திறன் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் குறுகிய கால தையல் தொழில் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதாக தெரிந்து கொண்டேன். பின்னர்  தாளவாடி ஓசூர் ரோட்டில் உள்ள Skills India Foundation- Thalavadi பயிற்சி மையத்திற்கு சென்று  விபரங்கள் அனைத்தும் கேட்டு அறிந்து கொண்டேன்.

திட்டம் குறித்து பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் திரு.பொன்னுசாமி சார் அவர்கள் எடுத்துக்கூறினார்கள், அவரது வழிகாட்டுதலின் படி சுயதொழில் தையல் பயிற்சி வகுப்பில் சேர்ந்து கொண்டேன். 380 மணி நேரம் (3 மாத கால ) பயிற்சியில் தையல் பயிற்சி ஆசிரியர் திருமதி .சுதா மேடம் அவர்கள்  தையல் வகைகள், பல்வேறு ஆடைகள் வடிவமைத்தல் , எம்ப்ராய்டரி வேலை, அனைத்து வகையான ஆடைகள் அளவெடுத்து , வெட்டி தைப்பது என பல சுவாரசியமாக தையல் பயிற்சி நடந்தது.

பயிற்சியின் முடிவில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சியடைந்து  மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சினால் வழங்கப்பட்ட சான்றிதழைப் பெற்றுக் கொண்டேன். பின்னர் வீட்டில் ஒரு தையல் மிசின் ஒன்றை வாங்கி தைக்க ஆரம்பித்தேன். இப்பொழுது அருகில் உள்ள ஆடர்களை நேர்த்தியாக தைத்து கொடுத்து வருகிறேன் , மாதம் ஒன்றிற்கு 8800/- மேல் வருமானம் கிடைக்கிறது, இதன் மூலம் என்னுடைய குடும்ப வருமானம் அதிகரித்துள்ளது.  இப்பொழுது என் குடும்பம் மகிழ்ச்சியாக உள்ளது.
என்னையும் என் போன்று பயிற்சியில் கலந்து கொண்டு பயிற்சியை நிறைவு செய்த பல பயிற்சியாளர்களுக்கும்  திறன்பட பயிற்சியளித்த பிரதம மந்திரியின் (PMKVY) திறன் மேம்பாட்டு திட்டத்திற்கும், Skills India Foundation - Thalavadi பயிற்சி மையத்திற்கும் மைய நிர்வாகி திரு.பொன்னுசமி சார் அவர்களுக்கும் , பயிற்சி ஆசிரியார் திருமதி. சுதா அவர்களுக்கும் என் நன்றிகளை தெரிவிக்கிறேன். 


தொழில் திறன் மேம்பாட்டுப் பயிற்சியின் மூலம் வெற்றி பெற்ற எலிஸெபத்ராணியின் வெற்றிக் கதை



செல்வி.எலிஸெபத்ராணி தன்னுடைய வெற்றிக்கதையை விவரிக்கிறார். நான் 81, புதூர் காலணி, பென்னாகரம் பகுதியில் வசித்து வருகிறேன், 12ஆம் வகுப்பு வரைப் படித்துள்ளேன், தந்தை தினக்கூலி யாக வேலை செய்கிறார் அவரின் மாத வருமாணம் 8000/- நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு இந்த வருமாணம் போதுமானதாக இல்லை, நானும் மேற்படிப்பு படிக்க இயலவில்லை, தொழில் சார்ந்து ஏதாவது படிக்க வேண்டும் என்ற ஆசை என்னுள் இருந்து வந்தது. 

அப்போது எங்கள் பகுதியில் விளம்பரசுவரொட்டியின் மூலம் Skills India Foundation Pennagaram தொழில் பயிற்சி  மையத்தில் குறுகிய  கால  தையல்  தொழில்   பயிற்சி வகுப்புகள்நடைபெறுவதாக லக்ஷ்மி மூலம் அறிந்து கொண்டேன். 

பின்னர்  பயிற்சி மையத்திற்கு சென்று  விபரங்கள் அனைத்தும் கேட்டு அறிந்து கொண்டேன்.திட்டம் குறித்து பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் திரு.கென்னடி சார் அவர்கள் எடுத்துக்கூறினார்கள்,அவரது வழிகாட்டுதலின் படி சுயதொழில் தையல் பயிற்சி வகுப்பில் சேர்ந்து கொண்டேன். 380 மணி நேரம் (3 மாதகால ) பயிற்சியில் தையல் பயிற்சி ஆசிரியர் திருமதி . பெருசியா மேடம் அவர்கள்  தையல் வகைகள், பல்வேறுஆடைகள் வடிவமைத்தல் , எம்ப்ராய்டரி வேலை, அனைத்து வகையான ஆடைகள் அளவெடுத்து , வெட்டிதைப்பது என பல தையல் நுட்பங்களை கற்றுக்கொடுத்தார்.

பயிற்சியின் முடிவில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சியடைந்து  மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சினால் வழங்கப்பட்ட சான்றிதழைப் பெற்றுக் கொண்டேன். பயிற்சியின் போது திருமதி. பிரசாந்தி என்ற நல்ல தோழியும் எனக்கு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. தொழில் நுட்பங்களைக் கற்றுக் கொண்டு பின்னர்  வீட்டில்  ஒரு தையல் மிசின் ஒன்றை வாங்கி தைக்க ஆரம்பித்தேன், என் தொழில் திறனால் எனக்கு மாதம் ஒன்றிற்கு 8000/- க்கு மேல் வருமானம் கிடைக்கிறது. இதன் மூலம் என்னுடைய குடும்ப வருமானம் அதிகரித்து குடும்பம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

என்னையும் என் போன்று பயிற்சியில் கலந்து கொண்டு பயிற்சியை நிறைவு செய்த பல பயிற்சியாளர்களுக்கும் திறன்பட பயிற்சியளித்த பிரதம மந்திரியின் (PMKVY) திறன் மேம்பாட்டு திட்டத்திற்கும்,Skills India Foundation-Pennagaram பயிற்சி மையத்திற்கும் மைய நிர்வாகி திரு.கென்னடி சார் அவர்களுக்கும் , பயிற்சி ஆசிரியார்திருமதி. பெர்சியா அவர்களுக்கும் என் நன்றிகளை தெரிவிக்கிறேன்.