திருமதி.
கவிதா தன்னுடைய வெற்றிக் கதையை பகிர்ந்து கொள்கிறார். நான் தாளவாடி அம்பேத்கார் வீதியில்
வசித்து வருகிறேன்,நான் 8 ஆம் வகுப்பு வரைப் படிதுள்ளேன், எங்கள் பகுதியில் பெண்களை
அதிகம் படிக்க வைப்பதில்லை, அதனால் என்னால் மேற்கொண்டு படிக்க இயலாத சூழ்நிலை, அப்பொழுது
எனக்குத் திருமணமும் நடைப் பெற்றது, கணவர் விவசாயத் தினக்கூலியாக வேலை செய்கிறார்,
அவரின் மாத வருமானம் 8500/- எங்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர், என் குடும்பச் சூந்நிலையை
மேம்படுத்த என்னால் எந்த உதவியும் செய்ய முடியவில்லையே எனக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன்.
அப்பொழுது தான் விளம்பர சுவரொட்டி மூலம் Skills India Foundation- Thalavadi பயிற்சி மையத்தில் பிரதம மந்திரியின் (PMKVY) திறன் மேம்பாட்டு
திட்டத்தின் மூலம் குறுகிய கால தையல் தொழில் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதாக தெரிந்து
கொண்டேன். பின்னர் தாளவாடி ஓசூர் ரோட்டில்
உள்ள Skills India Foundation- Thalavadi பயிற்சி
மையத்திற்கு சென்று விபரங்கள் அனைத்தும் கேட்டு அறிந்து கொண்டேன்.
திட்டம் குறித்து பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் திரு.பொன்னுசாமி
சார் அவர்கள் எடுத்துக்கூறினார்கள், அவரது வழிகாட்டுதலின் படி சுயதொழில் தையல் பயிற்சி
வகுப்பில் சேர்ந்து கொண்டேன். 380 மணி நேரம் (3 மாத கால ) பயிற்சியில் தையல் பயிற்சி
ஆசிரியர் திருமதி .சுதா மேடம் அவர்கள் தையல் வகைகள், பல்வேறு
ஆடைகள் வடிவமைத்தல் , எம்ப்ராய்டரி வேலை, அனைத்து வகையான ஆடைகள் அளவெடுத்து , வெட்டி
தைப்பது என பல சுவாரசியமாக தையல் பயிற்சி நடந்தது.
பயிற்சியின் முடிவில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சியடைந்து மத்திய திறன் மேம்பாடு
மற்றும் தொழில் முனைவோர் அமைச்சினால் வழங்கப்பட்ட சான்றிதழைப் பெற்றுக் கொண்டேன். பின்னர்
வீட்டில் ஒரு தையல் மிசின் ஒன்றை வாங்கி தைக்க ஆரம்பித்தேன். இப்பொழுது அருகில் வசிக்கும்
மக்களிடமும் இருந்து வரும் ஆடர்களை நேர்த்தியாக தைத்து கொடுத்து வருகிறேன் , மாதம்
ஒன்றிற்கு 8800/- மேல் வருமானம் கிடைக்கிறது, இதன் மூலம் என்னுடைய குடும்ப வருமானம்
அதிகரித்துள்ளது. இப்பொழுது என் குடும்பம்
மகிழ்ச்சியாக உள்ளது.
என்னையும் என் போன்று பயிற்சியில் கலந்து கொண்டு பயிற்சியை நிறைவு
செய்த பல பயிற்சியாளர்களுக்கும் திறன்பட பயிற்சியளித்த
பிரதம மந்திரியின் (PMKVY) திறன் மேம்பாட்டு திட்டத்திற்கும், Skills India
Foundation - Thalavadi பயிற்சி மையத்திற்கும் மைய நிர்வாகி திரு.பொன்னுசமி சார்
அவர்களுக்கும் , பயிற்சி ஆசிரியார் திருமதி. சுதா அவர்களுக்கும் என் நன்றிகளை தெரிவிக்கிறேன்.
No comments:
Post a Comment