செல்வி.எலிஸெபத்ராணி
தன்னுடைய வெற்றிக்கதையை விவரிக்கிறார். நான் 81, புதூர் காலணி, பென்னாகரம் பகுதியில்
வசித்து வருகிறேன், 12ஆம் வகுப்பு வரைப் படித்துள்ளேன், தந்தை தினக்கூலி யாக வேலை செய்கிறார்
அவரின் மாத வருமாணம் 8000/- நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு இந்த வருமாணம் போதுமானதாக
இல்லை, நானும் மேற்படிப்பு படிக்க இயலவில்லை, தொழில் சார்ந்து ஏதாவது படிக்க வேண்டும்
என்ற ஆசை என்னுள் இருந்து வந்தது.
அப்போது எங்கள் பகுதியில் விளம்பரசுவரொட்டியின் மூலம்
Skills India Foundation Pennagaram தொழில் பயிற்சி மையத்தில் குறுகிய கால தையல் தொழில் பயிற்சி வகுப்புகள்நடைபெறுவதாக
லக்ஷ்மி மூலம் அறிந்து கொண்டேன்.
பின்னர் பயிற்சி மையத்திற்கு சென்று விபரங்கள் அனைத்தும் கேட்டு அறிந்து கொண்டேன்.திட்டம் குறித்து பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் திரு.கென்னடி சார் அவர்கள் எடுத்துக்கூறினார்கள்,அவரது வழிகாட்டுதலின் படி சுயதொழில் தையல் பயிற்சி வகுப்பில் சேர்ந்து கொண்டேன். 380 மணி நேரம் (3 மாதகால ) பயிற்சியில் தையல் பயிற்சி ஆசிரியர் திருமதி . பெருசியா மேடம் அவர்கள் தையல் வகைகள், பல்வேறுஆடைகள் வடிவமைத்தல் , எம்ப்ராய்டரி வேலை, அனைத்து வகையான ஆடைகள் அளவெடுத்து , வெட்டிதைப்பது என பல தையல் நுட்பங்களை கற்றுக்கொடுத்தார்.
பயிற்சியின் முடிவில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சியடைந்து மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சினால் வழங்கப்பட்ட சான்றிதழைப் பெற்றுக் கொண்டேன். பயிற்சியின்
போது திருமதி. பிரசாந்தி என்ற நல்ல தோழியும் எனக்கு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி
அளிக்கிறது. தொழில் நுட்பங்களைக் கற்றுக் கொண்டு பின்னர் வீட்டில் ஒரு தையல் மிசின் ஒன்றை வாங்கி தைக்க ஆரம்பித்தேன், என் தொழில் திறனால் எனக்கு மாதம் ஒன்றிற்கு
8000/- க்கு மேல் வருமானம் கிடைக்கிறது. இதன் மூலம் என்னுடைய குடும்ப வருமானம் அதிகரித்து
குடும்பம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
என்னையும் என் போன்று பயிற்சியில் கலந்து கொண்டு பயிற்சியை நிறைவு செய்த பல பயிற்சியாளர்களுக்கும் திறன்பட பயிற்சியளித்த பிரதம மந்திரியின் (PMKVY) திறன் மேம்பாட்டு திட்டத்திற்கும்,Skills
India Foundation-Pennagaram பயிற்சி மையத்திற்கும் மைய நிர்வாகி திரு.கென்னடி சார் அவர்களுக்கும் , பயிற்சி ஆசிரியார்திருமதி. பெர்சியா அவர்களுக்கும் என் நன்றிகளை தெரிவிக்கிறேன்.
No comments:
Post a Comment