Thursday, 14 March 2019

தொழில் பயிற்சியின் மூலம் கனவை நனவாக்கிய ஈரோடு கோதைமலரின் வெற்றிக்கதை




செல்வி. கோதைமலர் தன் வெற்றிக்  கதையை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். ஈரோடு பெருந்துறை பகுதியை சேர்ந்த நான் B.E வரை படித்துள்ளேன்.எங்கள் குடும்பம் 5  பேர் கொண்ட குடும்பம், தந்தை சுய தொழில் செய்து வருகிறார். என்னுடைய நீண்ட நாள் கனவு  சுயமாக ஒரு தொழில் செய்ய வேண்டும் அதுவும் எனக்குப் பிடித்த அழகுக் கலை பயிற்சி யில் ஆனால் அதற்கான சரியான வழிகாட்டுதல் இல்லாமல் தவித்து வந்தேன். அப்பொழுது தான் ஈரோடு  CSI வளாகத்தில் உள்ள Skills India Foundation- Erode பயிற்சி மையத்தில் மத்திய அரசின் பிரதமர் திறன் மேம்பாட்டு திட்ட தொழில் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதாக பத்திரிகை விளம்பரத்தில் படித்தேன். அதன் பின்னர் பயிற்சி மையம் சென்று பயிற்சி மைய இயக்குநர் திரு. ஸ்டீபன்ராஜ் சார் அவர்களின் வழிகாட்டுதலின் படிதொழில்  ,Assistant Beautician  பயிற்சியை தேர்ந்து எடுத்தேன்.

 290 மணிநேரம் கொண்ட பயிற்சியை 2.5 மாத காலம் தொடர்ச்சியாக பயிற்சிக்கு வருகை தந்து  திறம்பட அனைத்து செயல்முறை விளக்கங்களையும் தெரிந்துகொண்டேன். பயிற்சி ஆசிரியர் திருமதி. பிரியா அவர்கள் எல்லோருக்கும் இலகுவாக புரிந்து கொள்ளும்படியாக செயல்முறை மற்றும் விளக்க வகுப்புகளை நடத்தினார்.

பயிற்சியின் முடிவில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சியடைந்து ,மத்திய அரசின் சான்றிதழைப் பெற்றுக் கொண்டேன் , அதன் பின்னர் பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு, வேலை கிடைத்து Assisstant Beautician ஆக பணி செய்து வருகிறேன் மாதம் ஒன்றிற்கு 10000/- வரை சம்பளம் கிடைக்கிறது.விரைவில் சொந்தமாக ஒரு பார்லர் வைக்கத் திட்டமிட்டு உள்ளேன். இந்த வருமாணம் சொந்தமாக பார்லர் வைத்தால் மேலும் அதிகரிக்கும் என்பதை மகிழ்ச்சியுடன்  தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த தொழில் திறன் பயிற்சி என்னை மேலும் உற்சாகப்படுத்தியிருக்கிறது,  எனக்கு இந்த வாய்பை அளித்த Skills India Foundation -Erode தொழில் பயிற்சி மையத்திற்கும், பயிற்சி ஆசிரியர் மற்றும் மத்திய அரசின் PMKVY திட்டத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.


No comments:

Post a Comment