Thursday, 21 March 2019

டெய்லராக இருக்கும் திருமதி. மகேஸ்வரி யின் வெற்றிக்கதை




தொழில் திறன் கல்வி கற்று டெய்லராக வேலை செய்து கொண்டு இருக்கும் திருமதி. மகேஸ்வரி தனக்குக் கிடைத்த வெகுமதியயை விவரிக்கிறார்.

கௌதமேஸ்வரர் வடக்கு நாராயண வீதி, தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த நான் 12 ஆம்வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளேன்.இதனால் சரியான வேலையும் கிடைக்கவில்லை. கணவர் பிரிண்டிங் பிரஸ்ஸில் 8000/- சம்பளத்தில் வேலை செய்து வருகிறார் அந்த வருமானமே நான்கு பேர் கொண்ட எங்கள் குடும்பத்திற்கு உணவிற்கும் இதர செலவினங்களுக்கும் ஆதாரம். அப்பொழுதுதான் நாம் மேலே ஏதாவது தொழில் கல்வி படிக்க வேண்டும் என்று தீவிரமாக முயற்சி செய்து கொண்டிருந்தேன்.

அந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் Skills India Foundation-Kumbakonam பயிற்சி மையத்தில் பிரதம மந்திரியின் (PMKVY) திறன் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் குறுகிய கால தொழில் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதாக எங்கள் உள் ஊரில் உள்ள டிவி யில் விளம்பரம் பார்த்தேன்.அவர்களைத் தொடர்புகொண்டு பயிற்சி மையத்திற்கு சென்று  விபரங்கள் அனைத்தும் கேட்டு அறிந்து கொண்டேன்.

பயிற்சி மைய நிர்வாகி திருமதி-சரண்யா மேடம் அவர்களின் வழிகாட்டலில் எனது கல்வித் தகுதிற்கு ஏற்றால்போல் Self Employed Tailor சுயதொழில் தையல் பயிற்சி வகுப்பில் சேர்ந்து கொண்டேன்.380 மணி நேரம் (3 மாதகால ) பயிற்சியில் தையல் பயிற்சி ஆசிரியர் திருமதி.நிர்மலாதேவி மேடம் அவர்கள்  தையல் வகைகள், பல்வேறுஆடைகள் வடிவமைத்தல் , எம்ப்ராய்டரி வேலை, அனைத்து வகையான ஆடைகள் அளவெடுத்து , வெட்டிதைப்பது என பல சுவாரசியமாக தையல் பயிற்சி நடந்தது.

பயிற்சியின் முடிவில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சியடைந்து  மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சினால் வழங்கப்பட்ட சான்றிதலைப் பெற்றுக் கொண்டேன். பின்னர் வீட்டில் ஒரு தையல்மிசின் ஒன்றை வாங்கி தைக்க ஆரம்பித்தேன். இப்பொழுது அருகில் வசிக்கும் மக்களிடமும் இருந்து வரும்ஆடர்களை நேர்த்தியாக தைத்து கொடுத்து வருகிறேன் , மாதம் ஒன்றிற்கு 9000/மேல் வருமானம் கிடைக்கிறது,இதன் மூலம் என்னுடைய குடும்ப வருமானம் அதிகரித்துள்ளது.  இப்பொழுது என் குடும்பம் மகிழ்ச்சியாகஉள்ளது.

என்னையும் என் போன்று பயிற்சியில் கலந்து கொண்டு இன்று பணி புரிந்து வருகின்ற பல ஏழை மாணவர்களின் வாழ்வை மாற்றிய மத்திய அரசின் PMKVY திட்டத்திற்கும் , பயிற்சி வழங்கிய Skills India Foundation Kumbakonam பயிற்சி மையத்திற்கும் எனது பயிற்சி ஆசிரியருக்கும் எனது நன்றிகள்


No comments:

Post a Comment