Wednesday, 20 March 2019

தொழில் திறன் பயிற்சியின் மூலம் குடும்பத்தை வெற்றிபாதைக்கு எடுத்துச் சென்ற ஹேமலதா வின் வெற்றிக்கதை



திருமதி. ஹேமலதா தன் வெற்றிக்கதையை பகிர்ந்து கொள்கிறார், 12 ஆம் வகுப்பு வரை படித்துள்ளேன், கூடல் நகர், மதுரை என்ற முகவரியில் கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறேன். கணவர் TVS Company யில் பணியாற்றுகிறார் அவரின் மாத வருமானம் 15000/ இந்த வருமானம் குடும்பச் செலவுகளுக்கு மட்டும் சரியாக இருந்தது, குழந்தைகளின் எதிர்காலத்திற்கு சேமிப்பு என்பது இல்லாமல் போய் விட்டது. 

அப்பொழுதுதான் நானும் சம்பாதிக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது, இந்த நிலையில் தான் தோழி மூலம்Skills India FoundationKoodalNagar  பயிற்சி மையத்தில் பிரதம மந்திரியின்(PMKVY) திறன் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் குறுகிய கால தையல் தொழில் பயிற்சி வகுப்புகள்நடைபெறுவதாக கூறினார். பின்னர்  கூடல் நகர்,  சொக்கலிங்கா வீதியில் உள்ள SkillsIndiaFoundationKoodalNagarபயிற்சி மையத்திற்கு சென்று  விபரங்கள் அனைத்தும் கேட்டு அறிந்து கொண்டேன்.

திட்டம் குறித்து பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் ஜெனட்மேடம்அவர்கள் எடுத்துக்கூறினார்கள்,அவரது வழிகாட்டுதலின் படி சுயதொழில் தையல் பயிற்சி வகுப்பில் சேர்ந்து கொண்டேன்.380 மணி நேரம் (3 மாதகால ) பயிற்சியில் தையல் பயிற்சி ஆசிரியர் திருமதி .ரீடாமேரி மேடம் அவர்கள்  தையல் வகைகள், பல்வேறுஆடைகள் வடிவமைத்தல் , எம்ப்ராய்டரி வேலை, அனைத்து வகையான ஆடைகள் அளவெடுத்து , வெட்டிதைப்பது என பல சுவாரசியமாக தையல் பயிற்சி நடந்தது.

பயிற்சியின் முடிவில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சியடைந்து  மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சினால் வழங்கப்பட்ட சான்றிதலைப் பெற்றுக் கொண்டேன். தற்பொழுது ஒரு ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவணத்தில் தயல் கலைஞராக பணியாற்றுகிறேன். இதன் மூலம் மாத வருமாணமாக மாதம் 6000/- சம்பாதிகிறேன்.  இதனால் எனது குடும்ப சூழலில் சற்று முன்னேற்றமான பாதை காணப்படுகிறது. மற்றும் எந்த வித தயக்கமும் இன்றி என்னாள் வெளியில் சென்று வர முடிகிறது


என்னையும் என் போன்று பயிற்சியில் கலந்து கொண்டு பயிற்சியை நிறைவு செய்த பல பயிற்சியாளர்களுக்கும் திறன்பட பயிற்சியளித்த பிரதம மந்திரியின் (PMKVY) திறன் மேம்பாட்டு திட்டத்திற்கும், Skills India Foundation –கூடல் நகர் பயிற்சி மையத்திற்கும் மைய நிர்வாகி  ஜெனட்மேடம் அவர்களுக்கும் , பயிற்சி ஆசிரியார்திருமதி. ரீடா அவர்களுக்கும் என் நன்றிகளை தெரிவிக்கிறேன்.


No comments:

Post a Comment