திருமதி.
கற்பகம் தன்னுடைய வெற்றிக் கதை விவரிக்கிறார், நான் 12 ஆம் வகுப்பு வரைப் படித்துள்ளேன்,
திம்மக்குடி, பாபுராஜபுரம் என்ற பகுதியில் வசித்து வருகிறேன், திருமணம் ஆகி இரண்டு
குழந்தைகள் உள்ளனர், கணவர் எலக்ட்ரீசியன் ஆக பணிபுரிகிறார், அவருடைய மாத வருமானம்
11000/-,வீட்டில் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்த எனக்கு தையல் கற்றுக்கொள்ள வேண்டும்
என்று மிகவும் ஆர்வமாக இருந்தேன், ஆனால் அதற்கான இலவசப் பயிற்சி எங்கு கிடைக்கும் என்று
தேடிக் கொண்டிருந்தேன்,
அந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டம்,
கும்பகோணத்தில் Skills India Foundation-Kumbakonam பயிற்சி மையத்தில் பிரதம மந்திரியின்
(PMKVY) திறன் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் குறுகிய கால தொழில் பயிற்சி வகுப்புகள்
நடைபெறுவதாக எங்கள் ஊரில் உள்ள தொலைக்காட்சி விளம்பரத்தில் பார்த்தேன்.பின்னர் அவர்களைத்
தொடர்புகொண்டு பயிற்சி மையத்திற்கு சென்று விபரங்கள் அனைத்தும் கேட்டு
அறிந்து கொண்டேன்.
பயிற்சி
மைய நிர்வாகி திருமதி-சரண்யா மேடம் அவர்களின் வழிகாட்டலில் நான் விரும்பிய Self Employed Tailor பயிற்சியை தேர்வு செய்து
படித்து வந்தேன், எங்கள் எனது பயிற்சி ஆசிரியர் திருமதி. நிர்மலா தேவி அவர்கள்
சிறப்பான முறையில் எங்களுக்கு வகுப்புகளை நடத்தினார், மிக நுண்ணிய முறை செயல்முறை பயிற்சி அளித்தனர் 380 மணி நேரம் கொண்ட பயிற்சியானது 3 மாதகாலம்
தொடர்ச்சியாக சென்று கற்று வந்தேன்.
பயிற்சியின்
முடிவில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சியடைந்து மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும்
தொழில் முனைவோர் அமைச்சும் , வழங்கும் சான்றிதழைப் பெற்றுக் கொண்டேன். அதன் பின்னர் பயிற்சி
மையத்தின் வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் திரு .ராமநாதன் சார் மூலம் எனக்கு
கும்பகோணத்தில் உள்ள கார்மெண்ட்டில் Tailor ஆக பணி
புரிந்து வருகிறேன்.
மாதம்
ஒன்றிற்கு 9000/- வருமானத்தில் என் குடும்பத்தினருக்கு என்னாலான பொருளாதார உதவியை
செய்யக் கூடிய நிலையில் இருக்கிறேன். இந்த மாற்றமும் எனது வேலையும் PMKVY தொழில்
திறன் பயிற்சியினால் எனக்கு கிடைத்த மிகப் பெரும் வாய்ப்பு என்றால் மிகையாகாது.
என்னையும்
என் போன்று பயிற்சியில் கலந்து கொண்டு இன்று பணி புரிந்து வருகின்ற பல ஏழை
மாணவர்களின் வாழ்வை மாற்றிய மத்திய அரசின் PMKVY திட்டத்திற்கும் , பயிற்சி
வழங்கிய Skills India Foundation Kumbakonam பயிற்சி மையத்திற்கும் எனது பயிற்சி
ஆசிரியருக்கும் எனது நன்றிகள்
No comments:
Post a Comment