Wednesday 20 March 2019

படிப்படியான முன்னேற்றத்தை எட்டிக் கொண்டிருக்கும் திரு. கேசவ்வின் வெற்றிக்கதை



திரு. கேசவ் தன்னுடைய படிப்படியான முன்னேற்றத்தை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். கர்நாடக மாநிலம், மைசூரை சேர்ந்த நான் இளங்கலை சட்டம் படித்து விட்டு படிப்புக்கேற்ற வேலை எதுவும் கிடைகாமல் இருந்து வந்தேன்.என் தந்தையின் வருமானத்தில் குடும்பம் நடந்தது. இந்த சூழ்நிலையில் திருமதி. சுனிதா அவர்கள் குறுகிய காலத் திறன் பயிற்சியான  Goods and Service tax பயிற்சியில் சேர்ந்து படிக்க அறிவுறுத்தினார். Skills India Foundation- KAMysore பயிற்சி மையத்தில் மத்திய அரசின் பிரதமர் திறன் மேம்பாட்டு திட்ட தொழில் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதாகவும் கூறினார் அதன் பின்னர் பயிற்சி மையம் சென்று தொழில் பயிற்சி விபரங்களை கேட்டறிந்து , Goods and Service tax பயிற்சியை தேர்ந்து எடுத்தேன்.

120 மணிநேரம் கொண்ட பயிற்சியை 1 மாத காலம் தொடர்ச்சியாக பயிற்சிக்கு வருகை தந்து  திறம்பட அனைத்து செயல்முறை விளக்கங்களையும் தெரிந்துகொண்டேன். பயிற்சி ஆசிரியர் திரு. மஞ்சுநாத் அவர்கள் எல்லோருக்கும் எளிதாக புரிந்து கொள்ளும்படியாக செயல்முறை மற்றும் விளக்க வகுப்புகளை நடத்தினார்.
பயிற்சியின் முடிவில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சியடைந்து ,மத்திய அரசின் சான்றிதழைப் பெற்றுக் கொண்டேன் , அதன் பின்னர் பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு, வேலை கிடைத்து Accountant ஆக பணியாற்றி வருகிறேன் மாதம் ஒன்றிற்கு 10000/- வரை சம்பளம் கிடைக்கிறது. இந்த வருமானம் பணி நிரந்திரம் பெற்றபின் மேலும் அதிகரிக்கும் என்பதை மகிழ்ச்சியுடன்  தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த தொழில் திறன் பயிற்சி என்னை மேலும் உற்சாகப்படுத்தியிருக்கிறது,  எனக்கு இந்த வாய்பை அளித்த Skills India Foundation -KAMysore தொழில் பயிற்சி மையத்திற்கும், பயிற்சி ஆசிரியர் மற்றும் மத்திய அரசின் PMKVY திட்டத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment