திருமதி.
லீமா ஆரோக்கிய செல்வி தன் வெற்றிக் கதையை பகிர்ந்து கொள்கிறார், மதுரை கூடல் நகர் பகுதியை
சேர்ந்த நான் 10 ஆம் வகுப்பு வரைப் படித்துள்ளேன், திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்,
கணவர் ஓட்டுநராகப் பணியாற்றுகிறார், அவரின் மாத வருமானம் 10000/-, இது குடும்பச் செலவு
களுக்குப் போதுமானதாக இல்லை. எனவே நான் ஏற்கனவே வீட்டில் செய்து கொண்டிருந்த தையல்
வேலையை நன்றாகக் கத்துக் கொண்டு தையல் தொழில் செய்ய முடிவு செய்தேன்,
அதற்கான பயிற்சி
நிறுவணத்தைத் தேடிக் கொண்டிருந்தபோதுதான் Skills IndiaFoundationKoodalNagar பயிற்சி மையத்தில் பிரதம மந்திரியின்(PMKVY) திறன் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் குறுகிய கால தையல் தொழில் பயிற்சி வகுப்புகள்நடைபெறுவதாக
கூறினார். பின்னர் கூடல்
நகர், சொக்கலிங்கா
வீதியில் உள்ள SkillsIndiaFoundationKoodalNagarபயிற்சி மையத்திற்கு சென்று விபரங்கள் அனைத்தும் கேட்டு அறிந்து கொண்டேன்.திட்டம் குறித்து பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் ஜெனட்மேடம்அவர்கள் எடுத்துக்கூறினார்கள்,அவரது வழிகாட்டுதலின் படி சுயதொழில் தையல் பயிற்சி வகுப்பில் சேர்ந்து கொண்டேன்.380 மணி நேரம் (3 மாதகால ) பயிற்சியில் தையல் பயிற்சி ஆசிரியர் திருமதி .ரீடாமேரி மேடம் அவர்கள் தையல் வகைகள், பல்வேறுஆடைகள் வடிவமைத்தல் , எம்ப்ராய்டரி வேலை, அனைத்து வகையான ஆடைகள் அளவெடுத்து , வெட்டிதைப்பது என பல சுவாரசியமாக தையல் பயிற்சி நடந்தது.
பயிற்சியின் முடிவில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சியடைந்து மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சினால் வழங்கப்பட்ட சான்றிதலைப் பெற்றுக் கொண்டேன். தற்பொழுது ஒரு ஆயத்த ஆடை தயாரிப்பு
நிறுவணத்தில் தயல் கலைஞராக பணியாற்றுகிறேன். இதன் மூலம் மாத வருமாணமாக மாதம்
6000/- சம்பாதிகிறேன். இதனால் எனது
குடும்ப சூழலில் சற்று முன்னேற்றமான பாதை காணப்படுகிறது.
என்னையும் என் போன்று பயிற்சியில் கலந்து கொண்டு பயிற்சியை நிறைவு செய்த பல மாணவர்களுக்கும் திறன்பட பயிற்சியளித்த பிரதம மந்திரியின் (PMKVY) திறன் மேம்பாட்டு திட்டத்திற்கும், Skills India Foundation –கூடல் நகர் பயிற்சி மையத்திற்கும் மைய நிர்வாகி ஜெனட்மேடம் அவர்களுக்கும் , பயிற்சி ஆசிரியார்திருமதி. ரீடா அவர்களுக்கும் என் நன்றிகளை தெரிவிக்கிறேன்.
No comments:
Post a Comment