Wednesday 20 March 2019

விடாமுயற்சியின் மூலம் தொழில் முனைவோர் ஆன் கீதாவின் வெற்றிக்கதை



திருமதி. கீதா அவர்கள் தன்னுடைய வெற்றிக் கதையை விவரிக்கிறார். மைசூர் குருபர்ஹள்ளி  என்ற பகுதியில் வசித்து வருகிறேன்,10 ஆம் வகுப்பு வரைப் படித்துள்ளேன், எனக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர், கணவர் அட்வகேட் அவரின் மாத வருமானம்13000/- வீட்டில் வீணாகப் பொழுதைக் கழிப்பதற்குப் பதிலாக வீட்டில் இருந்த படியே ஏதாவது ஒரு சிறுதொழில் செய்யலாம் என்று முடிவு செய்து ஏற்கனவே என் தோழி ஆஷா Skills India Foundation- KAMysore பயிற்சி மையத்தில் பிரதம மந்திரியின் (PMKVY) திறன் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் குறுகிய கால தையல் தொழில் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதாக தெரிவித்திருந்தார். அதனால் Skills India Foundation- KAMysore பயிற்சி மையத்திற்கு சென்று  விபரங்கள் அனைத்தும் கேட்டு அறிந்து கொண்டேன்.
திட்டம் குறித்து பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் திரு. சசிதரா சார் அவர்கள் எடுத்துக்கூறினார்கள், அவரது வழிகாட்டுதலின் படி சுயதொழில் தையல் பயிற்சி வகுப்பில் சேர்ந்து கொண்டேன். 380 மணி நேரம் (3 மாத கால ) பயிற்சியில் தையல் பயிற்சி ஆசிரியர் திருமதி .சந்திரிகா மேடம் அவர்கள்  தையல் வகைகள், பல்வேறு ஆடைகள் வடிவமைத்தல் , எம்ப்ராய்டரி வேலை, அனைத்து வகையான ஆடைகள் அளவெடுத்து , வெட்டி தைப்பது என பல சுவாரசியமாக தையல் பயிற்சி நடந்தது.

பயிற்சியின் முடிவில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சியடைந்து  மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சினால் வழங்கப்பட்ட சான்றிதழைப் பெற்றுக் கொண்டேன். பின்னர் வீட்டில் ஆர்டர் களை வாங்கி தைக்க ஆரம்பித்தேன். இப்பொழுது சொந்தமாக தையல் கடை வைத்து தைத்து கொடுத்து வருகிறேன் , மாதம் ஒன்றிற்கு 9000/- மேல் வருமானம் கிடைக்கிறது, இதன் மூலம் என்னுடைய குடும்ப வருமானம் அதிகரித்துள்ளது.  இப்பொழுது என் குடும்பம் மகிழ்ச்சியாக உள்ளது.
என்னையும் என் போன்று பயிற்சியில் கலந்து கொண்டு பயிற்சியை நிறைவு செய்த பல பயிற்சியாளர்களுக்கும்  திறன்பட பயிற்சியளித்த பிரதம மந்திரியின் (PMKVY) திறன் மேம்பாட்டு திட்டத்திற்கும், Skills India Foundation – KAMysore பயிற்சி மையத்திற்கும் மைய நிர்வாகி திரு.சசிதரா சார் அவர்களுக்கும் , பயிற்சி ஆசிரியார் திருமதி. சந்திரிகா அவர்களுக்கும் என் நன்றிகளை தெரிவிக்கிறேன். 


No comments:

Post a Comment