Wednesday 20 March 2019

தொழில் திறன் பயிற்சியினால் முன்னேற்றம் பெற்ற நிஷா வின் வெற்றிக்கதை



செல்வி. நிஷா தன் வெற்றிக் கதையை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். கும்பகோணம் திருநாகேஷ்வரம், காமராஜர் வீதியை சேர்ந்த நான் 12 ஆம் வகுப்பு வரை படித்துள்ளேன். தந்தை தினகூலி வேலை செய்பவர், அவருடைய அன்றாட வருமானம் 6 பேர் கொண்ட குடும்பத்தின் அன்றாட தேவைகளுக்கே போதுமானாதாக இல்லை.  

இந்த சூழ்நிலையில் மேற்கொண்டு படிப்பதற்கு போதிய வசதி இல்லாத காரணத்தினால் வீட்டில் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தேன். ஆனால் எனக்குள் ஏதாவது படித்து சுயமாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டிருந்தது , அந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் Skills India Foundation-Kumbakonam பயிற்சி மையத்தில் பிரதம மந்திரியின் (PMKVY) திறன் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் குறுகிய கால தொழில் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதாக தொலைக்காட்சி விளம்பரம் மூலம் அறிந்து கொண்டேண். அதன் பின்னர் பயிற்சி மையத்திற்கு சென்று  விபரங்கள் அனைத்தும் கேட்டு அறிந்து கொண்டேன்.
பயிற்சி மைய நிர்வாகி திருமதி-சரண்யா மேடம் அவர்களின் வழிகாட்டலில் எனது கல்வித் தகுதிற்கு ஏற்றால்போல் General Duty Assistant பயிற்சியை தேர்வு செய்து படித்து வந்தேன், எங்கள் பயிற்சி ஆசிரியர் திருமதி. ரீடா அவர்கள் சிறப்பான முறையில் எங்களுக்கு வகுப்புகளை நடத்தினார்,  மருத்துவத் துறை சார்ந்த படிப்பு என்பதால் பல மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்று செயன்முறை பயிற்சி அளித்தனர்  420 மணி நேரம் கொண்ட பயிற்சியானது 4 மாதகாலம் தொடர்ச்சியாக சென்று கற்று வந்தேன்.

பயிற்சியின் முடிவில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சியடைந்து மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சும் , வழங்கும் சான்றிதலழைப் பெற்றுக் கொண்டேன்.  அதன் பின்னர்  பயிற்சி மையத்தின் வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் திரு .ராமநாதன் சார் அவர்களின் பரிந்துரையில்  நான் கும்பகோணத்தில்  உள்ள மருத்துவமனையில் Assistant in X-Ray Department ஆக பணி புரிந்து வருகிறேன்.

மாதம் ஒன்றிற்கு 7000/- வருமானத்தில் என் குடும்பத்தினருக்கு என்னாலான பொருளாதார உதவியை செய்யக் கூடிய நிலையில் இருக்கிறேன். இந்த மாற்றமும் எனது வேலையும் PMKVY தொழில் திறன் பயிற்சியினால் எனக்கு கிடைத்த மிகப் பெரும் வாய்ப்பு என்றால் மிகையாகாது. 

என்னையும் என் போன்று பயிற்சியில் கலந்து கொண்டு இன்று பணி புரிந்து வருகின்ற பல ஏழை மாணவர்களின் வாழ்வை மாற்றிய மத்திய அரசின் PMKVY திட்டத்திற்கும் , பயிற்சி வழங்கிய Skills India Foundation Kumbakonam பயிற்சி மையத்திற்கும் எனது பயிற்சி ஆசிரியருக்கும் எனது நன்றிகள்




No comments:

Post a Comment