திருமதி.
முத்துலட்சுமி தன்னுடைய வெற்றிக்கதையை விவரிக்கிறார், 9 ஆம் வகுப்பு வரைப் படித்துள்ள
நான் மதுரை மணிநகர் என்ற பகுதியில் வசித்து வருகிறேன், திருமணமாகி கணவர் கை விட்ட நிலையில்
என்னுடைய மகனுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறேன், மகனின் படிப்பு மற்றும் அன்றாட
குடும்பச் செலவுகளைச் சமாளிக்க பெரிதும் சிறமபட்டேன் அதே சமயம் பெற்றோருக்கு பாரமாக
இருக்க விரும்பவில்லை,
அந்தச் சூழ்நிலையில் தான் Skills India Foundation
KoodalNagar பயிற்சி பயிற்சி மையத்தில் பிரதம மந்திரியின்(PMKVY) திறன் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் குறுகிய கால தையல் தொழில் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதாகவும் தான் கற்றுக் கொண்டதாகவும் என் தோழி கூறினாள்.பின்னர் கூடல்நகர், சொக்கலிங்கா வீதியில் உள்ள SkillsIndiaFoundation KoodalNagarபயிற்சி மையத்திற்கு சென்று விபரங்கள் அனைத்தும் கேட்டு அறிந்து கொண்டேன்.
திட்டம் குறித்து பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் ஜெனட் மேடம் அவர்கள் எடுத்துக்கூறினார்கள்,அவரது வழிகாட்டுதலின் படி சுயதொழில் தையல் பயிற்சி வகுப்பில் சேர்ந்து கொண்டேன்.380 மணி நேரம் (3 மாதகால ) பயிற்சியில் தையல் பயிற்சி ஆசிரியர் திருமதி .ரீடாமேரி மேடம் அவர்கள் தையல் வகைகள், பல்வேறுஆடைகள் வடிவமைத்தல் , எம்ப்ராய்டரி வேலை, அனைத்து வகையான ஆடைகள் அளவெடுத்து , வெட்டிதைப்பது என பல சுவாரசியமாக தையல் பயிற்சி நடந்தது.
பயிற்சியின் முடிவில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சியடைந்து மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சினால் வழங்கப்பட்ட சான்றிதழைப் பெற்றுக் கொண்டேன். தற்பொழுது ஒரு ஆயத்த ஆடை தயாரிப்பு
நிறுவணத்தில் தயல் கலைஞராக பணியாற்றுகிறேன். இதன் மூலம் மாத வருமானமாக மாதம்
6000/- சம்பாதிகிறேன். இதனால் எனது
குடும்ப வருமானம் அதிகரித்துள்ளது. மற்றும் என்னுடைய தன்னம்பிக்கையும்
அதிகரித்துள்ளது.
என்னையும் என் போன்று பயிற்சியில் கலந்து கொண்டு பயிற்சியை நிறைவு செய்த பல பயிற்சியாளர்களுக்கும் திறன்பட பயிற்சியளித்த பிரதம மந்திரியின் (PMKVY) திறன் மேம்பாட்டு திட்டத்திற்கும், Skills India Foundation –கூடல் நகர் பயிற்சி மையத்திற்கும் மைய நிர்வாகி ஜெனட்மேடம் அவர்களுக்கும் , பயிற்சி ஆசிரியார் திருமதி. ரீடா அவர்களுக்கும் என் நன்றிகளை தெரிவிக்கிறேன்.
No comments:
Post a Comment