Thursday 14 March 2019

தடைகளைத் தாண்டி வெற்றி பெற்ற சல்மா வின் வெற்றிக் கதை





செல்வி. சல்மா பேஹம் தன் வெற்றிக்கதை யைப் பகிர்ந்து கொள்கிறார். போயகவுடர் வீதி தாளவாடிப் பகுதியை சேர்ந்த நான் 12 ஆம் வகுப்பு வரை படித்துள்ளேன், 4 பேர் கொண்ட குடும்பம், தந்தை சிறு கடை வைத்துள்ளார், எனக்கு தயல் தொழில் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது, அப்பொழுது தான் விளம்பர சுவரொட்டி மூலம் Skills India Foundation- Thalavadi பயிற்சி மையத்தில் பிரதம மந்திரியின் (PMKVY) திறன் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் குறுகிய கால தையல் தொழில் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதாக தெரிந்து கொண்டேன். பின்னர்  தாளவாடி ஓசூர் ரோட்டில் உள்ள Skills India Foundation- Thalavadi பயிற்சி மையத்திற்கு சென்று  விபரங்கள் அனைத்தும் கேட்டு அறிந்து கொண்டேன்.

திட்டம் குறித்து பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் திரு.பொன்னுசாமி சார் அவர்கள் எடுத்துக்கூறினார்கள், அவரது வழிகாட்டுதலின் படி சுயதொழில் தையல் பயிற்சி வகுப்பில் சேர்ந்து கொண்டேன். 380 மணி நேரம் (3 மாத கால ) பயிற்சியில் தையல் பயிற்சி ஆசிரியர் திருமதி .சுதா மேடம் அவர்கள்  தையல் வகைகள், பல்வேறு ஆடைகள் வடிவமைத்தல் , எம்ப்ராய்டரி வேலை, அனைத்து வகையான ஆடைகள் அளவெடுத்து , வெட்டி தைப்பது என பல சுவாரசியமாக தையல் பயிற்சி நடந்தது.

பயிற்சியின் முடிவில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சியடைந்து  மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சினால் வழங்கப்பட்ட சான்றிதழைப் பெற்றுக் கொண்டேன். பின்னர் வீட்டில் ஒரு தையல் மிசின் ஒன்றை வாங்கி தைக்க ஆரம்பித்தேன். இப்பொழுது
அருகில் உள்ள ஆடர்களை நேர்த்தியாக தைத்து கொடுத்து வருகிறேன் , மாதம் ஒன்றிற்கு 8800/- மேல் வருமானம் கிடைக்கிறது, இதன் மூலம் என்னுடைய குடும்ப வருமாணம் அதிகரித்துள்ளது.  இப்பொழுது என் குடும்பம் மகிழ்ச்சியாக உள்ளது.
என்னையும் என் போன்று பயிற்சியில் கலந்து கொண்டு பயிற்சியை நிறைவு செய்த பல பயிற்சியாளர்களுக்கும்  திறன்பட பயிற்சியளித்த பிரதம மந்திரியின் (PMKVY) திறன் மேம்பாட்டு திட்டத்திற்கும், Skills India Foundation - Thalavadi பயிற்சி மையத்திற்கும் மைய நிர்வாகி திரு.பொன்னுசமி சார் அவர்களுக்கும் , பயிற்சி ஆசிரியார் திருமதி. சுதா அவர்களுக்கும் என் நன்றிகளை தெரிவிக்கிறேன். 

No comments:

Post a Comment