Friday 15 March 2019

தொழில் திறன் பயிற்சியின் மூலம் தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்கிய மாதம்மாள் ளின் வெற்றிக்கதை



திருமதி. மாதம்மாள் தான் கடந்து வந்த வெற்றிப் பாதையை விளக்குகிறார், நான் 8 ஆம் வகுப்புவரைப் படித்துள்ளேன், 17, இருளர் காலணி, புதூர் பென்னாகரம் பகுதியில் வசித்து வருகிறேன், எனக்குத் திருமணமாகி ஒருபெண் குழந்தை உள்ளது,கணவர் தினக்கூலியாக வேலை செய்து வருகிறார், அவரின் மாத வருமானம் 6500/- இந்த வருமானம் இன்றய சூழலில் பற்றாக் குறைதான், எங்கள் வாழ்க்கை க்குத் தேவையான அடிப்படை தேவைகளான உணவு, உடை ஆகிய வற்றிற்கேப் பற்றாக் குறை, இந்த சூழலிருந்து மாறி தரமாண வசதிகளோடு எங்கள் குழந்தையையாவது வாழ வைக்க வேண்டும் என்று முயற்சித்துக் கொண்டிருந்தேன், 

அப்பொழுது தான் Skills India Foundation- Pennagaram தொழில் பயிற்சி மையத்தில், குறுகிய  கால இலவச தையல் தொழில் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதாக பக்கத்து வீட்டுத் தோழி மூலம் அறிந்து கொண்டேன்.பின்னர்  பயிற்சி மையத்திற்கு சென்று  விபரங்கள்  அனைத்தும்  கேட்டு  அறிந்து  கொண்டேன். திட்டம்  குறித்து  பயிற்சி  மைய  ஒருங்கிணைப்பாளர் திரு.கென்னடி சார் அவர்கள் எடுத்துக்கூறினார்கள்,அவரது வழிகாட்டுதலின் படி சுயதொழில் தையல் பயிற்சி வகுப்பில் சேர்ந்து கொண்டேன்.380  மணி  நேரம்  (3 மாதகால )  பயிற்சியில்  தையல்  பயிற்சி  ஆசிரியர்  திருமதி . பெருசியா  மேடம்  அவர்கள்   தையல் வகைகள் , பல் வேறு ஆடைகள்   வடிவமைத்தல் ,  எம்ப்ராய்டரி  வேலை,  அனைத்து  வகையான  ஆடைகள் அளவெடுத்து , வெட்டிதைப்பது என பல தையல் நுட்பங்களை கற்றுக்கொடுத்தார். மேலும் எனக்குப் பயிற்சி மையத்தில் என்னை போன்ற குடும்ப பின்னனி கொண்ட சில தோழிகளின் அறிமுகம் என்னை உச்சாகப்படுத்தியது,
பயிற்சியின் முடிவில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சியடைந்து  மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சினால் வழங்கப்பட்ட சான்றிதழைப் பெற்றுக் கொண்டேன். தொழில் நுட்பங்களைக் கற்றுக் கொண்டு , பயிற்சி மையத்தின் மூலம் கார்மெண்ட்ஸில் வேலை கிடைத்தது இதன் மூலம் என் தொழில் திறனால் எனக்கு மாதம் ஒன்றிற்கு 9000/- க்கு மேல் சம்பளமாகக் கிடைக்கிறது. இதன் மூலம் என்னுடைய குடும்ப வறுமை மாறி வளமாக உள்ளது.
என்னையும் என் போன்று பயிற்சியில் கலந்து கொண்டு பயிற்சியை நிறைவு செய்த பல பயிற்சியாளர்களுக்கும் திறன்பட பயிற்சியளித்த பிரதம மந்திரியின் (PMKVY) திறன் மேம்பாட்டு திட்டத்திற்கும்,Skills India Foundation-Pennagaram பயிற்சி மையத்திற்கும் மைய நிர்வாகி திரு.கென்னடி சார் அவர்களுக்கும் , பயிற்சி ஆசிரியார்திருமதி. பெர்சியா அவர்களுக்கும் என் நன்றிகளை தெரிவிக்கிறேன்


No comments:

Post a Comment